உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அந்தக் கனவு மட்டும் பலிக்காது; தி.மு.க., பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

அந்தக் கனவு மட்டும் பலிக்காது; தி.மு.க., பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஞ்சிபுரம்: ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லாத ஒன்று என தி.மு.க., பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தி.மு.க., பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். தி.மு.க., குறித்து கட்சியின் மூத்த தலைவர்களும், கூட்டணி கட்சியினரும் மேடையில் பேசி முடித்த பிறகு, தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: தி.மு.க.,வின் அடிப்படை கொள்கைகள் சமூகத்தின் அடிப்படை கொள்கைகளாக உள்ளன. தி.மு.க., கூட்டணியில் ஒரே கொள்கை கொண்ட தோழமை இயக்கங்களாக செயல்பட்டு வருகிறோம். நமது கூட்டணியின் ஒற்றுமையை பார்த்து எதிரிகளுக்கு பொறாமை வந்து விட்டது. நமது கொள்கை கூட்டணியில் எப்போது பிளவு வரும் என எதிர்பார்க்கின்றனர். அவர்களின் கனவு பலிக்காது.லோக்சபா தேர்தலை ஒரே கட்டமாக நடத்த முடியாதவர்கள், ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி பேசுகின்றனர். அன்று நடந்த தேர்தலும், இன்று நடக்கும் தேர்தலும் ஒன்றா? அன்றைய வாக்காளர் எண்ணிக்கை எத்தனை? இன்றைய வாக்காளர் எண்ணிக்கை எத்தனை? ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது.மக்களாட்சிக்கு எதிராக மத்திய பா.ஜ., அரசு செயல்படுகிறது. மாநில சுயாட்சியை வென்றெடுக்க உறுதியேற்போம், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Lion Drsekar
செப் 29, 2024 21:27

வாழ்த்துக்கள் இனி இந்த நாடு மட்டும் அல்ல உலகத்திலேயே நீங்கள் கைகாட்டும் நபர்கள்தான் நாட்டை ஆளும் காலம் வெகு தொலைவில் இல்லை,


vijai
செப் 29, 2024 18:39

நீங்க அடுத்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் முதலமைச்சர் கனவு காணாதீர்கள்


theruvasagan
செப் 29, 2024 14:43

நாலு வருஷத்துககு முந்தி சினிமாவுல வந்தவங்க துணை முதல்வராகலாமா என்கிற கேள்விக்கு.பதில கிடைச்சாச்சு. அதனோட மறைமுக விளக்கம் நாப்பது வருடம் அரசியல் பண்ணினாலும் சிலபேர் எதுவும் ஆகமுடியாது என்பதே.


V RAMASWAMY
செப் 29, 2024 09:33

நீங்கள் கனவு கண்டுகொண்டே உளறிக்கொண்டிருங்கள், நடக்கவேண்டியவை காலத்தில் நடந்தே தீரும். கலிகாலத்தில் தெய்வம் நின்று கொல்லும். .


Kasimani Baskaran
செப் 29, 2024 07:06

வேலைக்கு லஞ்சம் கொடுத்தது சட்டப்படி குற்றம் என்று அனைவர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. ஆகவே வழக்கு கண்டிப்பாக நடக்கும். செபா லஞ்சம் வாங்கியது உண்மை என்பதை தீமுக்காவே கோர்ட்டுக்கு சென்று சாட்சி சொல்லும். பிறகு ஏராளமாக கபில் சிபலுக்கு அழுது திரும்பவும் தணடனையை நிறுத்தி வைக்க வேண்டும். ஆகா திராவிட தொழில் நுணக்கத்தின் அருமை பாரீர்.


Mani . V
செப் 29, 2024 06:55

ஏதே, கொள்ளைக் கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று நினைக்கிறார்களா? விடக்கூடாது இரும்புக்கை கோப்பால் சார்.


Siva Balan
செப் 29, 2024 06:51

ஒரு குடும்பம் ஒரு கோடி அடிமைகள் திட்டம் சாத்தியமாகும்போது இதுவும் சாத்தியமே...


நிக்கோல்தாம்சன்
செப் 29, 2024 05:34

வசூல் ராஜா திரும்ப வந்துவிட்டதை குறிப்பால் உணர்த்துகிறார் முதல்வர்


துரை
செப் 29, 2024 04:04

பவழ அல்லது பவள விழா?


Rajan
செப் 29, 2024 03:58

என்ன படித்தார்களே, என்ன புரிந்து கொண்டார்களோ? பாஜகவை எதிர்ப்பததே கொள்கையாக மாறி விட்டது.ஏன் இந்த பயம்? எவ்வளவு தேர்தல் வந்தாலும் நாங்கள் எதிர்கொள்ள தயார், வெற்றி நமதே என்று முழங்க வேண்டாமா?


புதிய வீடியோ