உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவ்வையாரே கள் குடித்தவர் தான்; அடித்து விடுகிறார் சீமான்

அவ்வையாரே கள் குடித்தவர் தான்; அடித்து விடுகிறார் சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''கள் குடித்து விதவைகள் உருவாகவில்லை; டாஸ்மாக் மதுவால் தான் விதவைகள் உருவாகின்றனர்,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.துாத்துக்குடி மாவட்டம், பெரியதாழை, குலசேகரப்பட்டினம், திருச்செந்துார் ஆகிய இடங்களில், வரும் 15ம் தேதி கள் இறக்க அனுமதி கேட்டு, பனை மரம் ஏறும் போராட்டம் நடத்தப் போவதாக, சீமான் அறிவித்துள்ளார். அதற்காக, அவர் பனை ஏறுவதற்கு பயிற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகின.இதுகுறித்து, சீமான் கூறியதாவது: முதல் கட்டமாக, பெரியதாழையில் பனை ஏறும் போராட்டத்தில் பங்கேற்கிறேன். மீன் குஞ்சுக்கு கடலில் நீந்த சொல்லி கொடுக்க தேவையில்லை. பனை ஏற எனக்கு நன்கு தெரியும். இருந்தாலும், வெகு காலம் ஆகி விட்டதால், சின்ன பயிற்சி தேவை.தமிழகத்தில், 15 கோடிகள் பனை மரங்கள் இருந்தன. தற்போது, 5 கோடி மரங்களாக குறைந்து விட்டன. அதனால் தான், 'பல கோடி பனை திட்டம், பத்தாண்டுகளில் பசுமை திட்டம்' என்பதை உருவாக்கினோம். லட்சக்கணக்கான விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரமாக இருக்கின்றன.தன் உடலில் எல்லா பாகத்தையும் பயன்பாட்டிற்கு தரும் மரமான பனையில் இருந்து, 840 பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அப்படி சிறப்பு வாய்ந்த பனை மரத்திலிருந்து கிடைக்கும் கள் குடித்து, யாரும் இறந்ததில்லை. 'டாஸ்மாக்' கடைகள் இருந்தும் கள்ளச்சாராய சாவுகள் தான் தொடருகின்றன.சங்க இலக்கியங்களில் கள், மூலிகை சாறாக போற்றப்படுகிறது. அதியமானும், அவ்வையும் கள் உண்டு பேசியுள்ளனர். பானையில் சுண்ணாம்பு தடவி வைத்தால் பதநீர்; சுண்ணாம்பு தடவாமல் இறக்கினால் கள். அதை குடித்து விதவைகள் உருவாகவில்லை. டாஸ்மாக் மது குடித்து தான் விதவைகள் உள்ளனர்.இந்தியாவில் பல மாநிலங்களில் கள் இறக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் அனுமதில்லை. காரணம், டாஸ்மாக் கடைகளுக்கு மது அனுப்புகிற தொழிற்சாலை அதிபர்கள் எல்லாரும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக உள்ளனர். அவர்களுக்கு வரக்கூடிய வருமானம் பாதித்துவிடும்.வருங்கால சந்ததியரும் பனை பொருட்களையும், அதன் நன்மைகளையும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, அதை பாதுகாக்கும் வகையில் போராட்டத்தை நடத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Velayutham rajeswaran
ஜூன் 14, 2025 10:44

திருக்குறளில் கள்ளுண்ணாமை என ஒரு அதிகாரம் உண்டு அது பற்றி


ராமகிருஷ்ணன்
ஜூன் 14, 2025 04:36

சீமாண்டி ஒரு புளுகாண்டி, ஓளவையார் வழக்கு போட மாட்டார் என்று தெரிந்து அள்ளி விடுகின்றான். ஆனால் தமிழ் பற்றாளர்கள் வழக்கு போட வேண்டும். இல்லாவிட்டால் ஒளவை குடித்த கள் என்று விற்பனை நிலையம் தொடங்கி விடுவான்.


Pandi Muni
ஜூன் 13, 2025 21:31

இவர் பேச்சை பெரிசு படுத்த வேண்டாம். நாளைக்கே கருணாநிதி விவசாயம் பண்ணிதான் சொத்து சேர்த்தார்னு சொன்னாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல


Amruta Putran
ஜூன் 13, 2025 21:25

Avvaiyar is not Kayal Vizhi nor kanni Meri to drink


அப்பாவி
ஜூன் 13, 2025 21:20

ஔவையார் கள்ளு குடிக்காதேன்னு பாடாத வரை ஓகே தான்.


Kulandai kannan
ஜூன் 13, 2025 19:11

ஊத்திக் கொடுத்திருப்பாரோ?


surya krishna
ஜூன் 13, 2025 19:08

vaai sollil veerar. ivarai innuma nambhureenga


spr
ஜூன் 13, 2025 17:13

திருவள்ளுவரைத் தலைமேல் தூக்கி வைத்துக் கூத்தாடும் இவர்கள் அவர் கள்ளுண்ணாமை என்றொரு அதிகாரமே எழுதியிருக்கிறார் என்றாவது அறிவார்களா? எல்லாக் காலத்தும் தவறான செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதானிருந்தது ஆன்றோர்களும் சமுதாயமும் அதனைக் கண்டித்தார்கள் இன்று போலக் கள், சாராயம் இவை ஊருக்குள் விற்கப்பட்டதில்லை. குடிக்க வேண்டுமானால் ஊருக்கு வெளியே போக வேண்டும் கள் உண்டவரை சமுதாயம் ஒதுக்கி வைத்தது. அரசன் மற்றும் பணக்காரர்களைத் தவிர மற்றவர்கள் யாருமறியாமல் மறைந்து ஒளிந்து குடித்தார்கள் திருக்குறள் நாலடியார் போன்ற அறநெறி நூல்கள் தோன்றிய களப்பிரார் காலம் வரை தீய செயல்கள் தண்டிக்கப்படவில்லை.


Ram pollachi
ஜூன் 13, 2025 16:53

அட பனை மரத்துக்கு கீழே அமர்ந்து அவ்வையார் ஆவின் பால் குடித்திருப்பார் அதைப் போய் ஒரு மரத்து கள் என்று சொன்னால் யார் தான் நம்புவார்கள்!


Varuvel Devadas
ஜூன் 13, 2025 15:24

It seems this mentally retarded fellow should be sent to the jail to save Tamil Nadu.


முக்கிய வீடியோ