உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு: வளர்மதி

அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு: வளர்மதி

சென்னை; “தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால்தான், பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்,” என, முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்தார்.தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறிய, தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., மாணவர் அணி சார்பில், சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே, நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.கருப்பு சட்டை அணிந்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க.,வினர், தி.மு.க., அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் எதிராக கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசியது:தமிழகத்தில், கடந்த 100 நாட்களில், 63 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவியர், பெண் காவலர்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை.தமிழகத்தில் பலரும், தன்னை 'அப்பா' என அழைப்பதாக, முதல்வர் ஸ்டாலின் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.பாலியல் தொந்தரவுகளால், அப்பா என கதறும் பெண் பிள்ளைகளின் ஓலம், முதல்வர் ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா?தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் பாலியல் வன்கொடுமைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்படும். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால்தான், பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க., மாணவர் அணி செயலர் சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கருப்பு துணியால் கண்களை கட்டிக் கொண்டு, தி.மு.க., அரசை கண்டித்து கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

T.sthivinayagam
பிப் 19, 2025 06:50

பாலியல் வன்கொடுமைகளுக்கு முன்பு போல் கட்ட பஞ்சாயத்து பண்ணி மறைத்து காசு பார்க்க முடியலையா பெற்றோர்கள் கட்ட பஞ்சாயத்து இல்லாமல் போலிசில் புகார் கொடுப்பதை ஏன் சிலரால் ஏற்றுக்கு கொள்ள முடியவில்லை


D.Ambujavalli
பிப் 19, 2025 05:50

பொள்ளாச்சின்னு ஒரு ஊர் தமிழகத்தில்தானே இருக்கிறது? பல பெண்களின் 'அண்ணா விடுங்க' கதறலுக்கு என்ன நிவாரணம் செய்தீர்கள், தீர்வு கண்டீர்கள்? சம்பந்தியும் சம்பந்தியும் சாத்திரத்துக்குப் போவதில் எச்சென்ன , பேச்சென்ன ?


Senthoora
பிப் 19, 2025 06:28

அதெலாம் தெரியாது, அப்படி நடக்கவில்லை, எங்களுக்கு ஆச்சியை திரும்ப பேரனும். அவளவுதான். கூண்பாண்டியாக இருக்கனும். அம்மா படத்தைவைத்து விழுந்து கும்பிடனும்.


புதிய வீடியோ