உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சூழ்நிலையை பொறுத்துத்தான் கூட்டணி அமையும்

சூழ்நிலையை பொறுத்துத்தான் கூட்டணி அமையும்

பா.ஜ.,வுடன் அ.தி.மு.க.,வுக்கு ஒட்டோ; உறவோ கிடையாது என எங்கள் கட்சி பொதுச்செயலர் பழனிசாமி சொன்னது நிஜம் தான். இன்றைக்கும் இந்த கருத்தில் இருந்து மாறி விட்டதாக சொல்ல முடியாது. காரணம், மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி பா.ஜ., நடத்தும் கையெழுத்து இயக்கத்தின் படிவத்தில் கும்மிடிப்பூண்டி முன்னாள் அ.தி.மு.க., _ எம்.எல்.ஏ., விஜயகுமார் கையெழுத்திட்டார் என்றதும், உடனடியாக கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்தவர் பழனிசாமி. ஆனால், அரசியலில் சூழ்நிலைக்கேற்பத்தான் கூட்டணி குறித்தெல்லாம் முடிவெடுக்க முடியும். அதனால் ஆறு மாதம் கழித்து கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என பா.ஜ.,வுடனான கூட்டணி குறித்து சொல்லி இருக்கிறார். காங்.,குடன் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்று கூறிய கருணாநிதி, பின், காங்.,கோடு கூட்டணி சேர்ந்த வரலாறெல்லாம் உண்டு. ஆக, சூழ்நிலைக்கேற்ப கூட்டணி குறித்து முடிவெடுப்பது இயற்கைதான்.செல்லூர் ராஜு, முன்னாள் அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை