உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இணைப்பு சாலை அமைக்கப்படாததால் 13 ஆண்டாக பயன்பாட்டுக்கு வராத பாலம்

இணைப்பு சாலை அமைக்கப்படாததால் 13 ஆண்டாக பயன்பாட்டுக்கு வராத பாலம்

மயிலாடுதுறை:சீர்காழி அருகே இணைப்பு சாலை அமைக்கப்படாததால், கட்டி முடிக்கப்பட்ட பாலம், 13 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.தமிழகத்தில், 2004ம் ஆண்டு சுனாமி பேரிடருக்கு பின், கடலோர கிராம வளர்ச்சிக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி முதல் பழையார் வரை, 26 மீனவ கிராமங்களை ஒருங்கிணைக்கும் வகையில், சுனாமி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், புதிய சாலை மற்றும் ஆறுகள், வாய்க்கால்கள் மீது பாலங்கள் அமைக்கப்பட்டன.இதன் ஒரு பகுதியாக, சீர்காழி அருகே திருமுல்லைவாசல்- - கீழமூவர்கரை இடையே உப்பனாற்றின் மீது, 18 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டப்பட்டது. 2010ல் துவங்கிய பணி, 2012ல் 95 சதவீதம் முடிந்தது. ஆனால், அப்பகுதி நில உரிமையாளர்களுக்கு உரிய பணம் கொடுக்கப்படாததால், இணைப்பு சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.இன்னமும், நிலம் கையகப்படுத்தும் பணி முழுமை பெறவில்லை. அதனால், இணைப்பு சாலை இதுவரை அமைக்கப்படாததால், 13 ஆண்டுகளாக உப்பனாறு மீது கட்டப்பட்ட புதிய பாலம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. பாலம் பயன்பாட்டிற்கு வராததால், மீனவர்கள் நீண்ட துாரம் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. பணியை துரிதப்படுத்த தவறிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

S.jayaram
ஜன 27, 2025 14:51

அவர்கள் மீது நடவடிக்கையா? யாருக்கு தில் இருக்குது சும்மா பூச்சாண்டி காட்டாதீர்கள் முழுதாக கட்டிமுடிக்கப்பட்டு உள்ள கட்டிடங்கள் நிறைய உள்ளன அவை எல்லாம் இன்னும் திறக்கப் படாமலேயே இருக்கிறது காரணம் அவை முந்தைய ஆட்சியில் கட்டப் பட்டது


Jawahar k
ஜன 25, 2025 22:29

நாம் எப்போது தவறு செய்யும் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கிறோமோ அப்போதுதான் வேலைகள் சுறுசுறுப்பாக நடக்கும். வெறும் அரசு அரசு என்று கூறிக் கொண்டிருப்பதால் பிரயோஜனமே இல்லை . அரசு என்பது யார் அரசு ஊழியர்கள் தானே


Sundaresan S
ஜன 25, 2025 10:46

பல்வேறு திட்டங்கள் தொங்கு பாலங்களாக இருக்க காரணமாயிருந்த காராணமாயிருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து நஷ்டஈட்டை பெற்றால் எதிர்காலத்திலாவது ஆதிகாரிகள் திருத்திக்கொள்ள வழிபிறக்கும்.


T. V. ELANGOVAN
ஜன 25, 2025 02:39

ஏன் இத்தனை ஆண்டுகள் வரை அரசுக்கு தெரியப்படுத்த வில்லை இணைப்பு சாலை மட்டும் தானே 2012ல் முடிந்த வேலைதானே மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்குமே


Kuttimani
ஜன 24, 2025 13:56

இப்படி சீர்காழி அரசூர் வளைவில் எச்சரிக்கை பலகை வைத்து இரண்டு ஆண்டுகளாக அப்படியே உள்ளது undefined சீர்காழி கடைத்தெருவில் சாலையை அகலப்படுத்த போவதாக இரண்டு பக்கமும் தோண்டி ஆறு மாதமாகியும் சல்லி நிரப்பியதோடு சரி undefined ஆயிரக்கணக்கான பள்ளி குழந்தைகள் தினமும் சைக்கிளில் செல்வது உயிரை பணையம் வைத்து தான் செல்கின்றனர் நெடுஞ்சாலை துறையினரிடம் பல முறை சொல்லியும் ஒன்றும் பயனில்லை


சமீபத்திய செய்தி