உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக சிறைகளில் ரூ.30 கோடி முறைகேடு; முழுமையான விசாரணைக்கு உத்தரவு

தமிழக சிறைகளில் ரூ.30 கோடி முறைகேடு; முழுமையான விசாரணைக்கு உத்தரவு

மதுரை: தமிழக சிறைகளில் கைதிகளுக்கு வழங்குவதற்காக வாங்கியஉணவுப்பொருட்களை, கூடுதல் விலைக்கு வாங்கியதாக பில் தயாரித்து கொடுத்து ஆண்டுதோறும் ரூ.30 கோடி வரை முறைகேடு செய்ததை டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் கண்டுபிடித்தது குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக கொள்முதல் செய்த உணவுப் பொருட்கள், பில் விபரங்கள், நிலுவை தொகை உள்ளிட்ட விபரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.சிறை கைதிகளுக்கு உணவு தயாரித்து கொடுக்க தமிழ்நாடு பனைமரம் மற்றும் நார் சந்தைப்படுத்துதல் கூட்டுறவு கூட்டமைப்பு (டி.என்.பி.எப்.எம்.சி.எப்.) மூலம் உணவுப்பொருட்களை கொள்முதல் செய்ய அனைத்து மத்திய சிறைகளிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.தமிழகம் முழுவதும் உள்ள 50 ஆயிரம் கைதிகளுக்கு தினமும் உணவுப்பொருட்கள் வழங்க கூடுதல்விலைக்கு வாங்கியதாக கணக்கு காண்பிக்கப்பட்டு கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது உறுதியானது. குறிப்பாக சிறைத்துறையில் ஆண்டுதோறும் ரூ.30 கோடி முறைகேடு நடந்தது டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் டி.என்.பி.எப்.எம்.சி.எப்., குறிப்பிட்ட பொருட்களை மட்டும் சப்ளை செய்தது தெரிந்தது. மற்ற பொருட்களை சிறை நிர்வாகம் மாவட்ட கூட்டுறவு பண்டகசாலையில் வாங்கியது. அதற்கான பில்லை டி.என்.பி.எப்.எம்.சி.எப்.க்கு அனுப்பினால் அவர்கள் குறிப்பிட்ட சதவீதத்தில் விலையை நிர்ணயித்து அரசுக்கு அனுப்பி தொகையை பெற்றனர். இதன்மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.இதை கண்டுபிடித்த டி.ஜி.பி., பழைய முறைபடிகூட்டுறவு பதிவாளரால் நிர்வகிக்கப்படும் அந்தந்த மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை மூலம் வாங்க உத்தரவிட்டார். இதுகுறித்து தினமலர் நாளிதழ் மே 6ம் தேதி செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக கடந்த 4 ஆண்டுகளில் கொள்முதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், அதன் விலை,டி.என்.பி.எப்.எம்.சி.எப்., தந்த பில், சிறை நிர்வாகம் தரவேண்டிய நிலுவைத்தொகை உள்ளிட்ட விபரங்களை சேகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இந்த நடவடிக்கையால் டி.என்.பி.எப்.எம்.சி.எப்.,க்கு நிலுவைத் தொகையை முழுமையாக தராமல் சந்தை விலையை கணக்கிட்டு தர வாய்ப்புள்ளது. தணிக்கை துறை மூலம் உரிய விபரங்களை பெற்றுடி.என்.பி.எப்.எம்.சி.எப்.,க்கு விளக்கம் கேட்கப்படும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

c.mohanraj raj
மே 11, 2025 14:15

எங்கள் மாடலில் எல்லாம் நடக்கும் மத்தியில் கூட்டாட்சி கூட்டாக திருடுவோம் மாநிலத்தில் சுயாட்சி நாங்கள் மட்டும் திருடுவோம் அதுதான் இதற்கு விளக்கம் மத்திய அரசின் கையால் ஆகாத தனத்தையே காட்டுகிறது இது


rama adhavan
மே 11, 2025 11:55

மாநில கணக்காயர் தணிக்கை, சிறை துறை உள் தணிக்கை, ஏன் சிறைகளில் இல்லை? மர்மமாக உள்ளதே?


rama adhavan
மே 11, 2025 11:50

உலகமுழுவதும் அரசு சிறைகளில் நேர்மை கிடையாது. இது கைதிகளுக்கும் தெரியும். ஆனாலும் சிறை வாசம் அவர்களை சீர் திருத்துவது இல்லை. மேலும் தவறு செய்ய ஓரு பயிற்சி பட்டறையாகவே உருவாக்குகிறது.


r ravichandran
மே 11, 2025 10:04

30 கோடியா நேர்மையான புலன் விசாரணை நடத்தினால் 300 கோடி வரும்.


Arinyar Annamalai
மே 11, 2025 11:32

அதற்கு மேலும் இருக்கும். த்ரவிஷன்கள் ஊழல் பேர்வழிகள், இந்த திருடர்களுக்கு சரியான சம்மட்டியடி கொடுக்கப் போவது அண்ணாமலைதான்


அப்புசாமி
மே 11, 2025 09:09

திங்கற சோத்தில மண்ண விட்டு எறிஞ்ச மாதிரி இருக்கு திருட்டு திராவிட ஊழல். உருப்புடுவாங்களா? இவிங்க குடும்பம் வெளங்குமா?


Ramesh Sargam
மே 11, 2025 09:07

முறைகேடு இல்லாத இலாகா உண்டா தமிழகத்தில்…


raja
மே 11, 2025 07:33

மங்குனி ரகுபதி கொள்ளை அடித்து விட்டு சரியாக கமிசன் கோவால் புற குடும்பத்துக்கு கொடுக்களை போல அதான் விடியல் துக்லக் தூக்கி அடித்து விட்டாரா...


ஜான் குணசேகரன்
மே 11, 2025 07:14

சேவையை நிறுத்து நிதியை கடந்து என்பது திராவிட மாடல். அதுவும் 2.o வந்து விட்டால் சிறையை விற்பனை தொடங்கும்


Kasimani Baskaran
மே 11, 2025 07:14

ஆட்சிக்கு வந்தவுடன் கமிஷன் முறையில் மாற்றம் செய்து திராவிட சாதனை. இது போல ஆடினால் வரவுசெலவு திட்டத்தில் பற்றாக்குறை வராமல் வேறு என்ன வரும்? திராவிட திருடர்கள் மாநிலத்தை மொட்டை அடிக்காமல் விட மாட்டார்கள் போல.


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 11, 2025 07:52

ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி இந்த ஊழலை கண்டுபிடித்து வெளிக் கொண்டு வந்துள்ளார். இந்த ஊழல் இந்த ஆட்சிக்கு வந்தவுடன்தான் நடந்துள்ளதாக காசிமணி எப்படி முடிவு செய்தார்? முந்தைய டில்லி பாதுஷாக்களுக்கு கப்பம் கட்டிய ஆட்சியில் நாடவில்லை என்று உறுதியாக சொல்வாரா? இங்குள்ள கணக்கு வழக்கு தணிக்கை அதிகாரிகள் இந்த ஊழல்களை வெளிக் கொண்டுவராமல் complacent ஆக இருந்தது காரணமில்லாமலா?


Kasimani Baskaran
மே 11, 2025 10:38

யோவ்... நான் திராவிட திருடர்கள் என்றுதான் சொன்னேன். தீம்க்காக்கள் இதில் அடக்கம்.


Arinyar Annamalai
மே 11, 2025 20:04

த்ரவிஷன்கள் என்றாலே திருட்டு கும்பல்தான். மூலக்காரணம் ஊழல் ரயில்ஞானி