மத்திய அரசு பணிந்துள்ளது
முதல்வர் ஸ்டாலின் அறிக்கை: நான் முதல்வராக இருக்கும் வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிப்பட தெரிவித்தேன். சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினோம். மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது. இனி, மாநில அரசின் இசைவு பெறாமல், இத்தகைய சுரங்க ஏல அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடக் கூடாது. மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு, அ.தி.மு.க.,வும் துணை போகக்கூடாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.