உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்த பணம் ரூ.3 லட்சம் கோடி

தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்த பணம் ரூ.3 லட்சம் கோடி

துாத்துக்குடி : ''மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு, 3 லட்சம் கோடி ரூபாயை அளித்துள்ளது; இது, முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கிய தொகையுடன் ஒப்பிடும் போது, மூன்று மடங்கு அதிகம். கடந்த 11 ஆண்டுகளில், தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவ கல்லுாரிகள் வழங்கப்பட்டுள்ளன. நீலப்புரட்சி வாயிலாக, மீனவர்களின் பொருளாதாரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, பிரதமர் மோடி தெரிவித்தார். துாத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம், வ.உ.சி., துறைமுகத்தின் வடக்கு சரக்கு தளம் ஆகியவற்றின் துவக்க விழா, நேற்று இரவு துாத்துக் குடியில் நடந்தது. விழாவில், 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது: கார்கில் வீரர்களுக்கு முதலில் தலை வணங்குகிறேன். நான்கு நாள் வெளிநாட்டு பயணத்திற்கு பின், புனித மண்ணில் கால் பதித்துள்ளேன். வெளிநாட்டு பயணத்தின் போது, பிரிட்டன் நாட்டுடன் வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ud66wrg6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாரதம் மீது உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்தியா தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. வளர்ச்சி அடைந்த பாரதத்தை படைப்போம்; வளர்ச்சி அடைந்த தமிழகத்தை உருவாக்குவோம். துாத்துக்குடியில் வளர்ச்சி பணிகளில், புதிய அத்தி யாயம் உருவாக்கப்பட்டுள் ளது. தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் குறிக்கோள், 2014ல் துவக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, துாத்துக்குடி வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது, 4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள், மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இதில், விமான நிலையங்கள், சாலைகள், துறைமுகங்கள், ரயில்வே திட்டங்களுடன், எரிசக்தி துறை சார்ந்த திட்டங்கள் உள்ளன. உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி, மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பு போன்றவை. கடந்த 11 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி துறையில் முனைப்பான கவனம் செலுத்தினோம். தமிழகத்தின் வளர்ச்சி எத்தனை முதன்மையானது என்பதை,இந்த திட்டங்கள் காட்டுகின்றன. இங்குள்ள மக்கள், பல நுாற்றாண்டுகளாக தன்னிறைவான, சக்தி படைத்த பாரதத்திற்காக தங்கள் பங்களிப்பை அளித்து வந்துள்ளனர். இதே மண்ணில்தான் வ.உ.சிதம்பரம் பிள்ளை, வீரபாண்டிய கட்டபொம்மன், அழகுமுத்துகோன், சுப்ரமணிய பாரதி பிறந்துள்ளனர். பாரதியாருக்கு துாத்துக்குடியோடு உள்ள உறவு போன்ற பலமான உறவு, என் லோக்சபா தொகுதியான காசியோடும் உள்ளது. கடந்த ஆண்டு, நான் துாத்துக்குடியின் பிரபலமான முத்துக்களை, பில்கேட்சுக்கு பரிசாக அளித்தேன். அவருக்கு அந்த நல்முத்துக்கள் பிடித்திருந்தன. நம் பாண்டிய நாட்டு முத்துக்கள், உலகம் முழுதும் நம் அடையாளமாக உள்ளன. இந்தியா - பிரிட்டன் இடையிலான ஒப்பந்தம், பாரதத்திற்கு புதிய பலத்தை அளிக்கும். உலகின் மூன்றாவது பொருாளதார நாடாகும் நம் வேகம் இன்னும் அதிகரிக்கும். இந்த ஒப்பந்தத்திற்கு பின், பிரிட்டனில் விற்பனையாகும், 99 சதவீத பாரத நாட்டின் பொருட்களுக்கு, எந்த வரியும் விதிக்கப்படாது. பிரிட்டனில் பாரத பொருட்கள் விலை மலிவாக இருக்கும்; அவற்றின் தேவை அதிகரிக்கும். பாரதத்தில் அந்த பொருட்களை உருவாக்க, அதிக வாய்ப்புகள் உருவாகும். பாரதம், பிரிட்டன் இடையிலான வணிக ஒப்பந்தம், நம் நாட்டு இளைஞர்களுக்கு, சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, மிகுந்த ஆதாயத்தை ஏற்படுத்தி கொடுக்கும். இன்று, 'மேக் இன் இந்தியா' திட்டம், நாட்டிற்கு அதிக வலு சேர்க்கிறது. இதை 'ஆப்பரேஷன் சிந்துார்' போரில் கண்கூடாக பார்த்திருப்பீர்கள். பயங்கரவாதிகளின் பதுங்கு இடங்களை, மண்ணோடு மண்ணாக்கியதில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் பெரும் பங்கு வகித்தன. நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், பயங்கரவாதத்தை ஆதரித்தவர்களை, துாங்க விடாமல் செய்துள்ளது. தமிழகத்தின் ஆற்றல் வளத்தை முழுமையாக பயன்படுத்த, உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்தும் முயற்சியை, மத்திய அரசு செய்து வருகிறது. துறைமுகம், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே துறைகள் மத்தியில், பரஸ்பர ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி வருகிறோம். துாத்துக்குடி விமான நிலையத்தில், 450 கோடி ரூபாயில், புதிய முனையம் உருவாக்கப்பட்டுள்ளது. இது, ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சத்திற்கும் அதிகமான பயணியரை வரவேற்கும். முன்பு ஆண்டுக்கு 3 லட்சம் பயணியர் மட்டுமே கையாளும் திறன் இருந்தது. இது, இங்குள்ள வியாபாரத்திற்கும், தொழிலுக்கும் ஊக்கம் அளிக்கும். இப்பகுதியில் சுற்றுலாவுக்கு புதிய ஊக்கம் கிடைக்கும். நம் நாட்டில் ரயில்வே துறை நவீனமயமாக்கப்படுகிறது. 'அம்ருத் பாரத்' திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 77 ரயில் நிலையங்ளில் மறு மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. நாடு முழுதும் நவீன கட்டமைப்புகளை உருவாக்கும் வேள்வி நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன், புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட, காஷ்மீர் ரயில்வே பாலம் திறக்கப்பட்டது. இது, காஷ்மீரை ஸ்ரீநகருடன் இணைக்கிறது. மேலும் மிக நீளமான கடல் பாலம், சுரங்க பாலம் என, பல திட்டங்களை, மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. 'தமிழகத்தின் வளர்ச்சி; மேம்பட்ட தமிழ்நாடு' என்ற கனவு, நமது முக்கியமான குறிக்கோளாகும். நாங்கள் தமிழகத்தின் வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கு, முன்னுரிமை அளித்து வந்துள்ளோம். கடந்த, 10 ஆண்டுகளில், மத்திய அரசு தமிழகத்திற்கு 3 லட்சம் கோடி ரூபாயை அளித்துள்ளது. இது, கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கிய தொகையுடன் ஒப்பிடும்போது, மூன்று மடங்கு அதிகம். கடந்த 11 ஆண்டுகளில், தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவ கல்லுாரிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த அரசும் செய்யாத அளவுக்கு, நீலப்புரட்சி வாயிலாக, மீனவர்களின் பொருளாதாரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய புரட்சியின் சாட்சியாக, துாத்துக்குடி மாறி வருகிறது. போக்குவரத்து இணைப்பு, மின் பரிமாற்றம், கட்டமைப்பு என அனைத்து வசதிகளுடன், வளர்ச்சி அடைந்த தமிழகம், வளர்ச்சி அடைந்த பாரதத்தின் ஆதாரமாக மாறி வருகிறது. இவ்வாறு பிரதமர் பேசினார். முன்னதாக துாத்துக்குடி வந்த பிரதமரை, விமான நிலையத்தில், கவர்னர் ரவி, மத்திய அமைச்சர்கள் ராம்மோகன் நாயுடு, முருகன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தளவாய்சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி பிரிட்டன், மாலத்தீவு நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி, நேற்று மாலத்தீவில் இருந்து நேரடியாக துாத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்தார் பிரதமர் மோடி தமிழில், 'வணக்கம்' எனக்கூறி தன் பேச்சை துவக்கினார். பேச்சை நிறைவு செய்தபோதும், வணக்கம் தெரிவித்தார் பிரதமர் மோடி தன் பேச்சை நிறைவு செய்வதற்கு முன், ''நான் உங்கள் உற்சாகத்தை காண்கிறேன். இந்த உற்சாகத்தின் வெளிப்பாடாக, உங்கள் மொபைல் போனை எடுத்து ஒளியை காட்டுங்கள்,'' என்றார். உடனே அனைவரும் தங்கள் மொபைல் போன், 'டார்ச்சை' ஔிரச் செய்து, பிரதமரை நோக்கி உற்சாகமாக கை அசைத்தனர். பிரதமர் துவக்கி வைத்த திட்டங்கள் துவக்கிவைப்பு * துாத்துக்குடி விமான நிலையத்தில், 450 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையம் * விக்கிரவாண்டி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தில், 2,350 கோடி ரூபாய் செலவில், 50 கி.மீ., நான்கு வழிச்சாலை * துாத்துக்குடியில், 200 கோடி ரூபாயில் துறைமுக ஆறு வழிச்சாலை * துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில், 285 கோடி ரூபாயில் ஆண்டுக்கு, 69 லட்சம் டன் சரக்குகளை கையாளும் மூன்றாவது சரக்கு தளவாட நிலையம் * மதுரை - போடிநாயக்கனூர் ரயில் பாதையில், 99 கோடி ரூபாய் செலவில், 90 கி.மீ., மின்மயமாக்கல் பணி * நாகர்கோவில் டவுன் - கன்னியாகுமரி 21 கி.மீட்டர்; ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் சந்திப்பு, 12.87 கி.மீட்டர்; திருநெல்வேலி - மேலாப்பாளையம், 3.6 கி.மீ., இரட்டை ரயில் பாதைகள். 933 கோடி ரூபாய் செலவில், இவை நிறைவேற்றப்பட்டு உள்ளன. அடிக்கல் ---------* திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அமைக்கப்படும் தலா, 1,000 மெகா வாட் திறன் உடைய மூன்றாவது, நான்காவது அணு உலைகளில் இருந்து மின்சாரத்தை வெளியே கொண்டு செல்வதுடன், மின் வழித்தட கட்டுமானம். திட்ட செலவு, 550 கோடி ரூபாய் ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

venugopal s
ஜூலை 27, 2025 20:52

எல்லா பாஜக தலைவர்களும் சொல்லி வைத்தது போல் கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்துக்கு கொடுத்த நிதியுதவி பற்றி மட்டுமே பேசுகின்றனர். மற்ற மாநிலங்களுக்கு கொடுத்தது குறித்தோ, மத்திய அரசுக்கு வரிவசூல் மூலம் தமிழகத்தின் நிதிப் பங்களிப்பு எவ்வளவு கிடைத்தது என்பது குறித்தோ பேசுவதே இல்லை.


N S
ஜூலை 27, 2025 20:13

GST மூலம் மொத்ததையும் வாங்கி உள்ளே போட்டுட்டு ஊரை ஏமாத்தாதே. GST க்கு முன் state revenue இருந்தது centre support கம்மி ஆனா இப்போ….


theruvasagan
ஜூலை 27, 2025 17:40

3 லட்சம் கோடி என்றால் கமிஷன் நியாயமா 1 லட்சம் கோடியாவது வந்து இருக்கணுமே. அதிலே நாலரை வருஷத்தில் கிட்டதட்ட 40000 கோடி வந்திருக்கணும். ஆனால் 30 ஆயிரம் கோடிதானே வந்திருக்கு. ஆக வரவேண்டிய 10 ஆயிரம் கோடிக்கு யார் பொறுப்பு. அதனாலதான் கொடுக்கவில்லை கொடுக்கவில்லை என்று புலம்பறோம்.


xyzabc
ஜூலை 27, 2025 16:09

என்ன பயன்? வாக்காளர் மத்தியில் மத்திய அரசை வஞ்சித்து பேசுவார்கள். நிதியே கிடைக்கவில்லை. மகளிர் உரிமை தொகை கொடுக்கப்படும். மக்களை ஏமாத்தும் அரசு


Kasimani Baskaran
ஜூலை 27, 2025 10:22

நிதிகளுக்கு நிதி கொடுக்கும் முன் அது அவர்களின் சட்டைப்பைக்குள் சென்று விட வழியில்லாமல் கொடுத்தால் அடுத்த முறை தேர்தலில் போட்டியிட மாட்டார்கள்.


vbs manian
ஜூலை 27, 2025 09:11

கொடுத்த பணத்துக்கு இன்னும் கணக்கு காட்டவில்லையே.


vbs manian
ஜூலை 27, 2025 08:58

கழகம் மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்த பொது தமிழகத்துக்கு எவ்வளவு நிதி வந்தது. கண்மணிகள் சொல்வார்களா.


vbs manian
ஜூலை 27, 2025 08:52

தமிழகத்துக்கு ஓ ன்றும் செய்யவில்லை என்ற பொய் பிரச்சாரத்தை முறியடித்துள்ளார் பிரதமர். பார்லிமென்டில் நிதியமைச்சர் புள்ளி விவரத்தோடு பேசும் பொது கூச்சல் போட்டு அநாகரிகமாக நடந்து கொள்கிறது கழக கூட்டணி. இந்த உருட்டு திருட்டு கழகத்தை எவ்வளவு நாள் மக்கள் ஆதரிப்பார்கள்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 27, 2025 08:42

கணக்கு கேக்குறீங்களே ? எங்களுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தைகள் கணக்கு கேட்பது .....


Oviya Vijay
ஜூலை 27, 2025 07:39

இவ்வாறான செய்திகளில் மக்களின் கண்கள் தம் மாநிலத்திற்கு ஒதுக்கப் பட்ட நிதியை மட்டும் பார்க்காது. மற்ற மாநிலத்திற்கு ஒதுக்கப் பட்ட நிதிகள் எவ்வளவு நம் மாநிலத்திற்கு ஒதுக்கப் பட்டிருக்கும் நிதி எவ்வளவு என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கும். அது இயற்கை. மாற்ற முடியாது. அவ்வாறு இருக்கையில் மேற்கண்ட செய்தியில் பாஜக ஆளும் மாநிலத்திற்கு எவ்வளவு நிதியை ஒதுக்கி இருக்கிறார்கள் நம் தமிழகத்திற்கு எவ்வளவு ஒதுக்கி இருக்கிறார்கள், நமக்கு மட்டும் எப்போதும் ஏன் இந்த ஓரவஞ்சனை என்பதும் மக்களின் மனதில் ஓடும். இதற்காகத் தான் திரும்ப திரும்ப நான் சொல்கிறேன். மத்திய அரசு முதலில் தமிழகத்திற்கு சாதகமாக நடந்து கொண்டு விட்டு தமிழகத்தை ஆளுவது பற்றி கனவு காணுங்கள்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 27, 2025 08:26

செவிடன் காதில் சங்கு ஊதியதை போல சிலருக்கு என்னதான் படிச்சி படிச்சி சொன்னாலும் அது மண்டைக்கு ஏறப்போறதில்ல..200 ரூபாய் உபிகளுக்கு மூளைன்னு ஒன்னு இருந்தா புரியும்..மோடிய எதிர்கனும், பாஜகவை எதிர்கனும்னு ப்ரோக்ராம் செட் செய்யப்பட்ட ரோபோக்களை போல அனுதினமும் மோடி பாஜகவை பற்றி புலம்பல். கோயபல்ஸ் தத்துவம் போல் திரும்ப திரும்ப பொய்யை கூறுவது உண்மையாகி விடாது. மத்திய அரசு தமிழக அரசுக்கு கொடுத்த நிதியை பற்றி புள்ளி விவரங்களோடு கூறினாலும் கோயபல்ஸ் தத்துவம் போல் நிதி கொடுக்கவில்லை என்று பஞ்ச பாட்டு பாடுவதால் ஒன்றும் ஆகப் போவது இல்லை ....இது விஞ்ஞானயுகம் உண்மை என்னவென்று எல்லோருடைய உள்ளங்கைகளில் தெரிந்து விடும்.....ஆகையால் ஓவியாஜி மாற்றி யோசியுங்கள்.....!!!


தியாகு
ஜூலை 27, 2025 08:29

டுமிழகத்திற்கு எவ்வளவு கொடுத்தாலும் கட்டுமர திருட்டு திமுகவினர் ஆட்டையை போடுவார்கள். அதுக்கு எதுக்கு கொடுக்கவேண்டும்? பேசாமல் விடுங்கள்.


ஆரூர் ரங்
ஜூலை 27, 2025 08:47

நிதி ஒதுக்கீடு அளவை நிர்ணயம் செய்வது சுயாதீன நிதி அயோக் அமைப்புதான். அதன் கொள்கை பிற்பட்ட சவலை மாநிலங்களுக்கு அதிக உதவி செய்து சமத்துவமாக வளர்ப்பது. பிற்பட்டவர்கள் மீது உண்மையான அக்கறையுள்ளவர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்கள். போலி OBC களுக்கு வேறு யார் வளர்வதும் கசக்கும்.


Oviya Vijay
ஜூலை 27, 2025 09:43

இன்னொரு மதம் வளர்வதும் கசக்கும்... அதையும் சேர்த்து உங்கள் பதிவில் சொல்ல வேண்டியது தானே மிஸ்டர் ஆரூர்...


vivek
ஜூலை 27, 2025 10:01

ரொம்ப நாளா காணோமே.....


theruvasagan
ஜூலை 27, 2025 17:31

முதலில் தோழமை கட்சியான காங்கிரஸ் ஆண்டபோது தமிழக்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பதையும் தெரிந்து கொண்டு பாஜக சரியாக கொடுத்ததா குறைவாக கொடுத்ததா என்பதை ஆராயவும்.


sridhar
ஜூலை 27, 2025 19:29

உங்கள் ஆளுங்க பத்து வருஷம் மத்தியில் கூட்டாட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு என்னென்ன கிழிச்சாங்க என்று லிஸ்ட் இருக்கா . வரலாறு காணாத ஊழல் மட்டுமே சாதனை .


முக்கிய வீடியோ