உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கார்ப்பரேட் கம்பெனி போன்று செயல்படுகிறது அறநிலைய துறை: ஐகோர்ட் மதுரை கிளை

கார்ப்பரேட் கம்பெனி போன்று செயல்படுகிறது அறநிலைய துறை: ஐகோர்ட் மதுரை கிளை

மதுரை: 'ஆண்டுக்கு இவ்வளவு எண்ணிக்கையில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்து, கார்ப்பரேட் கம்பெனி போல அறநிலைய துறை செயல்படுகிறது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை விமர்சித்தது. தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான வழக்கில், நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு பிறப்பித்த இறுதி உத்தரவு: தமிழகத்தின் பல கோவில்களில் புனரமைப்பு பணிகள் முழுமை பெறாமலேயே கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு இவ்வளவு எண்ணிக்கையில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்து, கார்ப்பரேட் கம்பெனி போல அறநிலைய துறை செயல்படுகிறது. இதனால், கோவில் நிர்வாகமும் கும்பாபிஷேக தேதியை முன்கூட்டியே முடிவு செய்து புனரமைப்பு பணிகளை அவசரகதியில் செய்கின்றன. இதுபோன்ற இலக்குகளால் கும்பாபிஷேகத்தின் உண்மையான நோக்கம் சிதைகிறது. கோவில்கள் வெறும் கட்டடங்கள் அல்ல; குடியிருக்கும் தெய்வங்களின் அங்கம். அதை உணர்ந்து அறநிலைய துறை செயல்பட வேண்டும். புனரமைப்பு பணிகள் துவங்கும் முன், சென்னை ஐ.ஐ.டி., சிவில் இன்ஜினியரிங் துறையிடம் கோவிலில் உள்ள பாதிப்புகள், சேதங்கள் குறித்து விரிவான திட்ட அறிக்கை பெற வேண்டும். புனரமைப்பு பணிகளின் போது கனரக இயந்திரங்களை தவிர்த்து, அத்துறையால் அனுமதிக்கப்பட்ட பொருட்கள், ரசாயனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். பணிகள் முடிந்த பின் அத்துறையிடம் தகுதிச்சான்று பெற வேண்டும். பின், கட்டமைப்பு பொறியியல் நிபுணர், தொல்பொருள் நிபுணர், பாதுகாப்பு நிபுணர், பாரம்பரிய ஸ்தபதி, இரு ஆகம நிபுணர்கள் அடங்கிய மாநில நிபுணர் குழுவிடம் பணி முடிந்ததற்கான சான்று பெற வேண்டும். கோவிலில் அவற்றை பார்வைக்கு வைக்க வேண்டும். அதன் பின்னரே நாள் குறித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். நன்கொடையாளர் சார்பில் நடத்தும் புனரமைப்பு பணிகளை, மாநில நிபுணர் குழு கண்காணிக்க வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ஆரூர் ரங்
ஆக 04, 2025 11:54

பல கோவில்களில் திருப்பணிகள் செய்ய உபயதாரர்கள் முன்வந்தாலும் அநி துறை ஆட்கள் கட்டிங் கேட்கிறார்கள். அல்லது காண்ட்ராக்ட்டை தமக்கு வேண்டப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்கக் கட்டாயபடுத்துகிறார்கள். இதுதான் அதிக கும்பாபிஷேகம் நடத்துவதன் உள்நோக்கம்?


GMM
ஆக 04, 2025 10:15

கோவில் பணிக்கு உணவு உடை மன கட்டுப்பாடு தேவை. அரசு பணியில் தேவையில்லை. கோவில் பணிக்கு ஆன்மிக உண்மை அறியும் ஆற்றல் தேவை. அரசு பணியில் ஆன்மிகம் தேவையில்லை. கோவில் பணிக்கு நாளும் கிழமையும் அறிந்து காலம் தவறாமல் பூஜிக்கும் கட்டுபாடு தேவை. அரசு பணியில் அதிக கட்டுபாடு தேவை இல்லை. மக்கள் வரியில் கோவில் பராமரிப்பு கிடையாது. அரசு இதனை எடுத்து நடத்துவது சட்ட விரோதம். இந்து அறநிலைய துறையை நீதிமன்றம் தடை செய்ய வேண்டும். திராவிட நாத்திகம் கோவிலை காட்சி பொருளாக மாற்றி வருகிறது.


Subramanian Marappan
ஆக 04, 2025 09:23

ஒரு அமைப்பு சரியாக இயங்கும் நிலையில் அதை கெடுக்க வேண்டும் எனில் அரசாங்கம் அதில் நுழைய வேண்டும்.அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்தும் பாழ். இதுதான் கோவில் விஷயத்திலும் நடந்து கொண்டு உள்ளது.பொது சொத்துக்கள் நேர்மை யாளர்கள் மேற்பார்வையில் சிரத்தையுடன் பாதுகாக்கப்பட்ட வேண்டும். ஆனால் கொள்ளையர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டு நாசமாகிக்கொண்டு உள்ளது.


V RAMASWAMY
ஆக 04, 2025 09:19

"கோவில்கள் வெறும் கட்டடங்கள் அல்ல குடியிருக்கும் தெய்வங்களின் அங்கம்." நாத்திகர்களுக்கு இவற்றைப்பற்றி என்ன கவலை? இவர்களுக்கு வேண்டியது மக்கள் பணத்தில் விளம்பரங்கள். மக்களுக்கு அரசு துறைகள் இலவசமாக செய்யவேண்டிய பணிகளுக்கு லஞ்சம் மூலமாக கொள்ளை.


G Mahalingam
ஆக 04, 2025 08:43

குடமுழுக்கு நடத்த நடத்த கமிஷன் கூடும். பக்தி இல்லாதவர்கள் இதற்குத்தான் குட முழுக்கு நடத்துவார்கள். அறநிலையத்துறை வரவு செலவு ஏதாவது ஒரு கோவிலுக்கு கொடுத்துள்ளதா. உயர் நீதிமன்றம் வெளி ஆட்களை கொண்டு தணிக்கை செய்ய அறநிலையத்துறை துறைக்கு ஆணையிட வேண்டும்.


CHELLAKRISHNAN S
ஆக 04, 2025 08:41

last week I had been to Palani. All employees including battery car operators, sales employees, staff including gurukkals were allowed to use cell phones BUT NOT public. Professional photographers were allowed to take photos of public and can make instant sales. BUT public not allowed cell phones. Everywhere devasthanam panchamirtham was available BUT devasthanam vibhoothi was not anywhere. Inspite of hectic effort, I could not purchase it at last I was forced to purchase it from private shops. Very sad affair.


செந்தில்குமார் திருப்பூர்
ஆக 04, 2025 08:14

அந்த திருபணிகள் கூட பக்தர்கள் அளித்த உண்டியல் கணிக்கை மற்றும் இதர வருமானத்தில் செய்வதில்லை அனைத்தும் உபயதாரர்கள் செலவு தான் ஆனால் இத்தனை கோடி செலவில் இத்தனை கோவில்களில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது என அறம் அழிக்கும் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் பீத்திக்கொள்வார்


Rajasekar Jayaraman
ஆக 04, 2025 07:50

ஒலி பெருக்கி அகற்றிய கதை தான் நடக்கும்.


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
ஆக 04, 2025 07:39

அங்க டிரம்ப் 25% வரி விதிப்பு காரணம் வேளாண் மற்றும் பால் பொருட்கள் சந்தையை திறக்க வலியுறுத்தல் என இந்திய பொருளாதாரத்தை அழிக்க பார்க்கிறார்கள் அதனை பற்றி ஊடகங்கள் விவாதிப்பதை விட்டு மத நம்பிக்கை மட்டுமே முக்கிய பிரச்சினை என விவாதித்து கொண்டேள்ளனர் நல்லா விளங்கிடும்


Sivakumar
ஆக 04, 2025 07:37

Government need not interfere in the temple affairs and leave them as it used to be managed well for years before the ministry/department was formed. Faith is not a government responsibility as set out by various Kings in 'Sanga Kaala' Tamil Nadu.