| ADDED : ஜூலை 02, 2025 01:31 AM
இறந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று நேரில் ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து, அமைச்சர் பெரியகருப்பன் மொபைல் போனில் தொடர்புகொண்ட முதல்வர் ஸ்டாலின், அஜித்குமாரின் தாய் மாலதிக்கு ஆறுதல் கூறினார். அப்போது முதல்வர், 'ரொம்ப சாரிம்மா; தைரியமா இருங்க. சீரியசாக ஆக் ஷன் எடுக்க சொல்லி இருக்கிறேன். உங்களுக்கு என்ன பண்ணனுமோ, அதை அமைச்சர் வாயிலாக செய்து கொடுக்க சொல்லி இருக்கிறேன். அமைச்சர் பார்த்துக்கொள்வார். நடக்கக்கூடாதது நடந்து விட்டது. எனக்கு ரொம்ப வருத்தம் தான்' என்றார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=06r6j6ub&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதை தொடர்ந்து, அஜித்குமாரின் சகோதரர் நவீனிடம் பேசிய முதல்வர், 'நடக்கக்கூடாதது நடந்து விட்டது; தைரியமாக இருங்கள்; என்ன உதவி வேண்டுமானாலும் செய்து தருகிறோம். உடனே கைது செய்து விட்டோம். நடந்த சம்பவத்தை யாருமே ஏற்றுக்கொள்ள முடியாது. தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்து விடுவோம். தைரியமாக இருங்கள்' என்றார். அத்துடன், மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில், நவீனுக்கு அரசு பணி வழங்கப்படும் என தகவல் தெரியவந்த நிலையில், அஜித்குமார் குடும்பத்தினர் மறுத்து விட்டனர். கோவில் பணி வேண்டாம் வேறு அரசு பணி வழங்க வேண்டும் என்று, அமைச்சர் பெரியகருப்பனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைதொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு:திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாது. யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு. கடமை தவறி, குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்று தரும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.