உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் தலைகுனிய வேண்டும்

முதல்வர் தலைகுனிய வேண்டும்

கேரளாவில் இருந்து இறைச்சி கழிவு மற்றும் மருத்துவக் கழிவுகளை கன்னியாகுமரி மாவட்டத்தில் கொண்டு கொட்டுகின்றனர். ஆளுங்கட்சியும், கூட்டணி கட்சியான காங்கிரசும் இதை கண்டு கொள்ளவில்லை. கோவையில், அல்---உம்மா பயங்கரவாதி பாஷா இறுதி ஊர்வலத்துக்கு, போலீஸ் பாதுகாப்பு அளித்து, அரசு தரப்பில் ஆதரவாக இருந்துள்ளனர். இதற்காக, முதல்வர் ஸ்டாலின் தலைகுனிய வேண்டும்.'நெல்லையில் நீதிமன்றத்துக்கு வெளியே தான் கொலை நடந்திருக்கிறது; அதற்கு போலீஸையோ தமிழக அரசையோ எப்படி குற்றஞ்சாட்ட முடியும் என சட்டத்துறை அமைச்சர் கேட்டிருக்கிறார். சட்டத்துறை அமைச்சராக இருந்து கொண்டு, இப்படி பொறுப்பில்லாமல் பேசக்கூடாது. அந்த பொறுப்புக்கே அவர் தகுதியற்றவர். பொன்.ராதாகிருஷ்ணன்பா.ஜ., மூத்த தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
டிச 23, 2024 10:09

தயவு செய்து தமிழ்நாட்டின் முதல்வரையே குற்றம் சொல்லுவதை நிறுத்துங்கள் கேரளாவிலிருந்து மருத்துவ கழிவுகள் தமிழக செக்கபோஸ்ட கடந்துதான் வரவேண்டும். செக்போஸ்டில் மனிதர்கள் காவலர்கள் இல்லையா... அல்லது.. முதல்வர் அனைத்து செகிக்போஸ்ட்டிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையை காவலுக்கு போடுங்கள். ஒரு எறுப்புக்குட வர இயலாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை