உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதய துடிப்பை சீராக்க முதல்வருக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்தம்

இதய துடிப்பை சீராக்க முதல்வருக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு, இதயத் துடிப்பை சீராக வைக்க உதவும், 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்தப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=otirf0ay&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலினுக்கு, 72, கடந்த, 21ம் தேதி காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டது. உடனே சிகிச்சைக்காக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவருக்கு சீரற்ற இதய துடிப்பு இருந்ததால், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இதய ரத்த நாள குழாயில் அடைப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய, நேற்று முன்தினம் 'ஆஞ்சியோகிராம்' பரிசோதனையும் செய்யப்பட்டது. இதில், பாதிப்பு எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து, முதல்வரின் இதயத் துடிப்பை சீராக வைக்க, ஹைதராபாத்தில் இருந்து வந்திருந்த, இதய மின்னியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் நரசிம்மன், 'பேஸ் மேக்கர்' கருவியை பொருத்தினார். 'இக்கருவி முதல்வர் தன் அன்றாட நடவடிக்கைகளை, இன்னும் சிறப்பாக மேற்கொள்ள உதவும்; உடல்நிலையை சீராக வைக்க உதவும்' என, டாக்டர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் தொடர் சிகிச்சை மற்றும் மருத்துவ கண்காணிப்பில் முதல்வர் ஸ்டாலின் உள்ளார். நள்ளிரவு சென்ற உதயநிதி முதல்வரின் மகனும், துணை முதல்வருமான உதயநிதி, நேற்று முன்தினம் நள்ளிரவு, போலீஸ் பாதுகாப்பின்றி, அரசு தனக்கு வழங்கியுள்ள காரில் மருத்துவமனைக்கு சென்றார். சில மணி நேரத்தில், வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். அப்போது, காரை அவரே ஓட்டிச் சென்றார். முதல்வர் உடல்நிலை குறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று கூறுகையில், ''முதல்வர் நலமுடன் உள்ளார். இன்று அல்லது நாளை வீடு திரும்புவார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 91 )

Yes God
ஜூலை 30, 2025 13:25

திராவிடனை யாராவது பாத்தாக்கா சொல்லுங்கள்


Yes God
ஜூலை 30, 2025 13:23

ராமசாமி நட்ட செடிகள் அனைத்தும் எட்டி மரங்களாகும்


Ranga Ramanathan
ஜூலை 27, 2025 01:33

அய்யனின் வருகை அதிர்ச்சியில் அப்போலோவில் பேஸ்மேக்கர்.


Ranga Ramanathan
ஜூலை 27, 2025 01:30

அய்யனின் வருகை அப்போலோவில் அட்மிட்.


Bhakt
ஜூலை 26, 2025 22:58

அந்த கருவி பெயரை கரீட்டா சொல்லுங்க பார்ப்போம்


PRS
ஜூலை 26, 2025 22:37

டாக்டர் நரசிம்மன் பார்ப்பனர் ஆச்சே. இது திராவிட மாடலுக்கு பிடிக்காதது. இது மட்டும் தேவையா?


Sivagiri
ஜூலை 26, 2025 22:31

மோடி ஆஸ்பத்திரிக்கு நேரில் வருவாரான்னு ஆறு நாளாக காத்திருக்கிறாரோ ? . . . அவரு பயங்கர பிசி , ஒரு நிமிஷம் கூட வேஸ்ட் பண்ணாமல். பம்பரமா சுழண்டடிச்சி வேலை பார்த்திக்கிட்டு இருக்காரே . அந்த பிளைட்லயே வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்காரு . . சரீ . . விளம்பரங்களில் ஸ்ரீ ஸ்டாலின் , ஸ்ரீ ரவி , ஸ்ரீ மதி கனிமொழி , என்று போட்டதுக்கு கோபமே வரலையா ? . . .


xyzabc
ஜூலை 26, 2025 22:11

200 சீட், 50 % ஓட்டுகள் , இவை எல்லாமே இதய துடிப்பை வேகம் ஆக்கும்.


Yes God
ஜூலை 30, 2025 13:20

முற்பகல் செய்யின் பிறபகல் தானே வரும்.


ManiK
ஜூலை 26, 2025 20:44

கைல பிட்டு பேப்பர், தலைல செட்டப், இதயத்துல சப்போர்ட்டு ஆனா பில்டப் சூட்டிங்குக்கு மட்டும் முடிவே கிடையாது.


ராஜ்
ஜூலை 26, 2025 21:13

அவருக்கும் 30000,கோடி அளவுக்கு பசிக்கும் இல்ல


ramesh
ஜூலை 26, 2025 20:13

இங்கே கருத்து போடும் 1 அரை சதவீத கூட்டத்துக்கு உருப்படியா கருத்து போடா கூட தெரியாது .எதற்கு எடுத்தாலும் 200 ரூபாய் , ஓசி பிரியாணி ,டாஸ்மாக் ன்று கூவுவார்கள் இதை தவிர இவங்களுக்கு வேற ஒன்றும் தெரியாது . ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது இந்த கூட்டத்தின் தினசரி சாப்பாடு இந்த ஓசி பிரியாணி 200 ரூபாய் டாஸ்மாக் இவற்றால் தான் நடக்கிறது என்பது வெட்ட வெளிச்சம் ஆகிறது


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூலை 26, 2025 21:30

என்ன மூரக்ஸ் எரியுது எரியுதா


Kjp
ஜூலை 26, 2025 22:14

உங்களுக்கு மட்டும் என்ன தெரிகிறது சங்கி உத்தரபிரதேசத்தை பார் குஜராத்தை பார் பிகாரி பார் என்று சொல்லத்தானே தெரிகிறது.


vivek
ஜூலை 26, 2025 22:31

ரமேஷு உண்மைய சொன்னா உமக்கு கோவம் வரக்கூடாது...உமது மொக்கை கருத்தை முரசொலியில் போடு


vivek
ஜூலை 26, 2025 22:33

பாவம் ரமேஷ்...லாரி அடியில் சிக்கிய எலி.... ஓவியர் என்ற போலி பெயரும் இவருக்கு உண்டு


ramesh
ஜூலை 26, 2025 22:35

உத்ர பிரதேசம் , பிஹாரி இவர்களை வேறு எப்படி சொல்லுவது


Bhakt
ஜூலை 26, 2025 23:01

Political maturity and decency இல்லாத பிராணிகள் தானே உபிஸ்.


Anantharaman Srinivasan
ஜூலை 27, 2025 01:07

கொடுப்பவனுக்கும் கைநீட்டி வாங்குபவனுக்கும் ரோஷம் வரணும். உனக்கு ஏன் வருது. ?


சமீபத்திய செய்தி