உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம்: 12ம் தேதி முதல்வர் துவக்கி வைக்கிறார்

வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம்: 12ம் தேதி முதல்வர் துவக்கி வைக்கிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே, ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும், 'முதல்வரின் தாயுமானவர்' திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் வரும், 12ம் தேதி துவக்கி வைக்கிறார்.இதுதொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:மாநிலத்தில் உள்ள, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று, ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும், முதல்வரின் தாயுமானவர் திட்டத்தை, வரும், 12ம் தேதி, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.இத்திட்டத்தின் வாயிலாக, 34,809 ரேஷன் கடைகளை சேர்ந்த, 15.80 லட்சம் ரேஷன் கார்டுகளில் உள்ள, 70 வயதுக்கு அதிகமான, 20.40 லட்சம் முதியோர் பயன்பெறுவர்.இதேபோல, 91,969 ரேஷன் அட்டைகளில் உள்ள, 1.27 லட்சம் மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறுவர். இதன்வாயிலாக, 16.70 லட்சம் ரேஷன் அட்டைகளில் உள்ள, 21.70 லட்சம் பேருக்கு அவர்களின் வீடுகளுக்கே, ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாதமும், இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதில் பயன்பெற தகுதியுள்ள, ரேஷன் அட்டைதாரர்களின் விபரம், உணவுப் பொருள் வழங்கல் துறை வாயிலாக பெறப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.மின்னணு எடைதராசு மற்றும் விற்பனை முனை கருவியுடன் வாகனங்களில் சென்று, ரேஷன் கடை விற்பனையாளர்கள் பொருட்களை வழங்குவர். இதனால், அரசுக்கு 30.1 கோடி ரூபாய் செலவாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Gajendraraj raj
ஆக 14, 2025 00:23

எக்சாலேண்ட் ஸ்செமே போர் போர் அண்ட் எல்டெர்லி சிடிஸின்


Durai Kuppusami
ஆக 09, 2025 09:11

இப்ப இதெல்லாம் யார் கேட்டாங்க அவங்க நேரிடையாக வந்து வாங்கிக்கொள்வாங்க.நீங்க ரேஷன் பொருளோடு வரும் போது வீடு பூட்டி இருந்தா என்ன பண்ணூவீங்க இதெல்லாம் நடைமுறையில் சாத்தியம் அல்ல தேவையில்லாம செய்றீங்க...


RAJ
ஆக 08, 2025 11:43

சார்ர்ர் .. மக்கள் முழிச்சிக்கிட்டாங்க..


sankaranarayanan
ஆக 08, 2025 11:26

ரேஷன் பொருட்களை வீட்டிலே கொடுத்துவிட்டு தேர்தல் சமயத்தில் அவர்களது வாக்குகளை பெறுவதற்கு செய்யும் பலே சூழ்ச்சிதான் இது ஆனால் இது வெற்றிபெறாது


மயிலை தொண்டன்
ஆக 08, 2025 11:04

மக்களுக்காக செய்ய நினைப்பவர்கள் ஆட்சி வந்த உடனே இது போன்ற திட்டங்களை செய்திருப்பார்கள். ஆனால், இப்போது செய்ய காரணம் ? மக்களுக்கு புரியும்.


வாய்மையே வெல்லும்
ஆக 08, 2025 10:51

நாடகம் விடும்நேரம் தான் உச்ச காட்சி நடக்குதம்மா.. என்கிற பாடல் வரி நினைவுக்கு வருபவர்கள் என்னைப்போல் எத்தனை பேரு . கைதூக்குங்க பாப்போம்


angbu ganesh
ஆக 08, 2025 10:29

இன்னும் எங்களை பைத்தியக்காரனாவே நெனச்சிட்டுருக்கீங்க


Barakat Ali
ஆக 08, 2025 09:23

என்ன கொத்தடிமைகளா இதெல்லாம் ????


Rajasekar Jayaraman
ஆக 08, 2025 09:03

எல்லா நடிப்பும் தேர்தல் வரை தான் பிறகு என்ன நடக்கும் என்பது மக்களுக்கு தெரியும்.


Kumar Kumzi
ஆக 08, 2025 09:00

தேர்தல் நெருங்குகிறது இனி தினமொரு ட்ராமா போடுவார்


சமீபத்திய செய்தி