உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முற்றியது யார் அந்த சார் மோதல்; இவன் தான் அந்த சார் என தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கோஷம்; சட்டசபை வளாகத்தில் பரபரப்பு

முற்றியது யார் அந்த சார் மோதல்; இவன் தான் அந்த சார் என தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கோஷம்; சட்டசபை வளாகத்தில் பரபரப்பு

சென்னை: சென்னை, அண்ணா நகர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அ.தி.மு.க., நிர்வாகி சுதாகரின் புகைப்படத்துடன் சட்டசபைக்கு தி.மு.க., எம்.ஏ.எல்.,கள் வந்தனர்.அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம், தி.மு.க., அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வரும் நிலையில், 'யார் அந்த சார்?' என்ற, 'ஸ்டிக்கர்' பிரசாரத்தை, அ.தி.மு.க., துவக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள சார் யார் என்பதை கண்டறிய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அ.தி.மு.க., சார்பில் தமிழகம் முழுதும், 'யார் அந்த சார்?' என்பதை கேட்டு, 'போஸ்டர்'கள் ஒட்டப்பட்டுள்ளன. சட்டசபைக்கு, யார் அந்த சார்? என்ற பேட்ச் அணிந்து, சட்டசபைக்கு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வந்தனர். இந்நிலையில், இன்று (ஜன.,10) சென்னை, அண்ணா நகர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அ.தி.மு.க., நிர்வாகி சுதாகரின் புகைப்படத்துடன் சட்டசபைக்கு தி.மு.க., எம்.ஏ.எல்.,கள் வந்தனர். இவர் அந்த சார்? என்ற பதாகைகளுடன் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

sridhar
ஜன 16, 2025 11:12

இதெல்லாம் சர்வ சாதாரணம்..


KRISHNAN R
ஜன 12, 2025 07:41

நீ தவறு செய்தாய் என்று கேட்டால், பராசக்தி வசனம் போல, உனக்கு ஏன் இந்த அக்கறை என்றும்,, அ வனும் தவறு செய்கிறான் என்று பிறரை சுட்டுவதும்.. இந்த நிலை மாற மக்கள் திருந்த வேண்டும்.


என்றும் இந்தியன்
ஜன 10, 2025 17:19

கொஞ்சம் கூட வெட்கம் மானம் சூடு சொரணை மக்களுக்கு நல்லது செய்யும் பண்பு இல்லாத அறிவிலிக்கூட்டம் இந்த திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசியல் வியாதிகள் கூட்டம் என்று இந்த 3 மாதமாக தாரை தப்பட்டை அடித்து சொல்லிக்கொள்கின்றார்கள் அவர்களின் அறீவீன செய்கையின் மூலமாக எல்லா தீய செயல்களையும் மறைத்து ஏதோ அது தான் நற்செயல்கள் என்று கூட்டம் கூட்டமாக வந்து டப்பா அடித்து காண்பித்தலின் மூலமாக


Sankara Narayanan
ஜன 10, 2025 14:31

எல்லாமே அரசியல் ஆகி விட்ட நிலையில் கோஷங்கள் தாம் அதிகம் ஆகி விட்டதே தவிர இம்மாதிரி குற்றங்களை முழுவதுமாக தடுக்க ஏதேனும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றனவா என்பதே கேள்விக்குறியாகிவிட்டது .


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜன 10, 2025 13:03

இப்படி இருவருமே என்பதை தமிழக மக்கள் உணர்ந்து திருந்தாதவரை நமக்கெல்லாம் விடிவில்லை.


N Sasikumar Yadhav
ஜன 10, 2025 12:33

ஆக தமிழை காட்டுமிராண்டி மொழி என சொன்ன ஈவெ ராம்சாமின் கேவலமான கொள்கைகளை கடைபிடிக்கும் திருட்டு திராவிட களவானிங்க கட்சிகள் அழியக் கூடிய நேரம் வந்துவிட்டதாகவே மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்


N Sasikumar Yadhav
ஜன 10, 2025 12:33

ஆக தமிழை காட்டுமிராண்டி மொழி என சொன்ன ஈவெ ராம்சாமின் கேவலமான கொள்கைகளை கடைபிடிக்கும் திருட்டு திராவிட களவானிங்க கட்சிகள் அழியக் கூடிய நேரம் வந்துவிட்டதாகவே மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்


Shunmugham Selavali
ஜன 10, 2025 11:59

தமிழகத்தில் நடப்பது சட்டசபையா அல்லது குழாயடிசண்டையா? கணம் வாக்காள குடிமக்களே சிந்தியுங்கள். இந்த அரசியல் வியாதிகளா நாட்டை முன்னேற்ற போகின்றார்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 10, 2025 11:22

இரண்டு கழகங்களிலும் சார் கள் அதிகம் என்று மக்களுக்குப் புரிந்துவிட்டது .......


சமீபத்திய செய்தி