உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டாலே நிறுவனம் வந்துவிடாது: இபிஎஸ் சாடல்

புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டாலே நிறுவனம் வந்துவிடாது: இபிஎஸ் சாடல்

மதுரை: ஒப்பந்தம் புரிந்துணர்வு போட்டாலே நிறுவனம் வந்துவிடாது என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.மதுரையில் வணிகர்கள் சங்க பிரதிநிதிகள் மத்தியில் இபிஎஸ் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி முதலீடுகளை ஈர்த்தோம். ஒரு தொழிற்சாலை புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட உடனே நடந்து விடாது. அதில் பல்வேறு முதல்கட்ட பணிகள் இருக்கிறது. நிலம் இருக்க வேண்டும். முதலீடுகளுக்கு தேவையான நிதி ஆதாரங்கள் இருக்க வேண்டும். இதுக்கு இரண்டு வருடங்கள் ஆகிவிடும். எல்லாம் முடிந்த பிறகு தான் அந்த தொழிற்சாலை இயங்க முடியும். சில நேரத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவார்கள். ஆனால் வர மாட்டார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டால் எந்த தொழிலும் வந்துவிட்டதாக கருத முடியாது. தொழில்கள் வளர்ச்சி அடைய, சர்வதேச விமான நிலையங்கள் அவசியம். அதற்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.எங்களுக்கு லோக்சபா எம்பிக்கள் இல்லை. ராஜ்யசபாவில் மட்டும் தான் இருக்கிறது. இருந்தாலும் தமிழக மக்களின் நலன் கருதி, தொழில் வளம் பெருக வேண்டும். இதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசுடன் தொடர்பில் இருந்து செய்வோம். அதிகமான வேலைவாய்ப்பை உருவாக்க சிறு, குறு தொழில்கள் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

கோரிக்கை

''மதுரையை தமிழகத்தின் 2வது தலைநகரம் ஆக்க வேண்டும். தொழில்துறையினருக்கு போலீசார் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இடம் வணிகர்கள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

K.n. Dhasarathan
செப் 02, 2025 20:55

எடப்பாடி வர்களே ஒரு முன்னாள் முதல்வர் மாதிரி பேசுங்கள் புரிந்துணர்வு போட்டாலே நிறுவனம் வந்து விடாது என்பது குழந்தைகளுக்கும் தெரியும் பாவம் என்ன பேசுவது என்று தெரியாமல், ஏதாவது பேச வேண்டும் என்பதற்கு பேசாதீர்கள். குழப்பத்தின் உச்சத்தில் பிதற்றுவது போல தெரிகிறது. நீங்கள் செய்த சாதனையை மட்டும் பேசுங்கள் இல்லையெனில் உங்கள் பேச்சு உளறுவது போல தெரிகிறது.

Venugopal S
செப் 02, 2025 20:48

இவர் எப்படி தமிழக முதல்வராக நான்கரை வருடங்கள் இருந்தார் என்று புரியவில்லை!

Kulandai kannan
செப் 02, 2025 19:40

கமிஷன், கட்டப் பஞ்சாயத்து பேசி முடித்தால்தான் வரும்.

P. SRINIVASAN
செப் 02, 2025 17:39

உன்னாலே தான் ஒன்னும் செய்யமுடியாத.. செய்றவங்களை குறை சொல்லாமல் இருந்தால் போதும். நீ என்னத்த கிகிச்சை.. நீயே ஒரு அடிமை..

M Ramachandran
செப் 02, 2025 17:04

அது என்ன பிரித்து புரிந்து மேயும் திட்டமா ?

Vasan
செப் 02, 2025 16:20

Yes, initially Edapadi also believed that all MoU will turn into real investment. He believed like that for 5 years from 2016 to 2021. In 2021 he realised that MoU are only paper and that they will not come as actual investment. So, what he has learnt after 5 years, he is telling to Stalin now.

Kadaparai Mani
செப் 02, 2025 17:36

The Global Investors Meet 2019 - organized by ex CM Edappadi Palaniswami was a remarkable catalytic event with 304 MoUs in the automotive, electronics, renewable energy, and logistics sectors worth ₹3 lakh crore. Even during the COVID-19 pandemic and the Global Slow Down, Tamilnadu was able to attract major corporations as a result of its aggressive industrial policies. The inflows from 2017 to 2019 were s and during this times Tamilnadu was able to capture around 7-8 % of India's total FDI. 2020-2021 was the COVID year and during this time, FDI was lower in most places however Tamilnadu was an exception. The negotiations and policies from the AIADMK era were able to pay off during the periods of April to December of 2021 and the year, with the state experiencing 41.5 % growth to ₹17,696 crores.

Kadaparai Mani
செப் 02, 2025 18:36

V Venkatachalam
செப் 02, 2025 16:13

பரிந்துணர்வு ஒப்பந்தம் என்பதே டூப் பாக இருக்கும். பொய் சொல்றதுக்கு வெக்கப்படாதவனுங்க.‌ இவங்க சொல்றதை படிச்சிட்டு விட்றணும். சும்மா விடப்படாது. சிரிச்சிட்டு விட்றணும்.

manian
செப் 02, 2025 15:44

They are just MOU's on paper.Not hard cash.Like weather forecast.May or may not come.People are taken for a ride.Building castles in air.

Ramesh Sargam
செப் 02, 2025 15:11

ஆம், ஒப்பந்தம் போட்டாலே முதலீடு வந்துவிடாது. திமுக கூட தேர்தலுக்கு முன்பு பூரண மதுவிலக்கு, ஆட்சியில் அமர்ந்தபின் நீட் தேர்வு ரத்து என்று சொன்னீர்கள். செய்தீர்களா?

ديفيد رافائيل
செப் 02, 2025 14:59

எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் பதவியை தக்க வைக்க துப்பில்லை. இவ்வளவு பேச்சு பேசுற இந்த ஆளுக்கு ஜெயலலிதா இறந்த பின் கிடைத்த முதலமைச்சர் பதவியை 2021 தேர்தலில் தக்க வைத்துக்கொள்ள துப்பில்லை.

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை