உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காமராஜர் மீதான அவதுாறு காங்., பொங்கி எழவில்லை

காமராஜர் மீதான அவதுாறு காங்., பொங்கி எழவில்லை

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, ஐந்து கட்சி மாறி விட்டார் என கூறினேன். அதை கண், காது, மூக்கு வைத்து ஏதேதோ பேசி வருகின்றனர். இப்படி கட்சி மாறினால் தான் காங்கிரசில் பதவி கிடைக்கும் போல் இருக்கிறது. முன்னாள் முதல்வர் காமராஜர் பற்றி, தி.மு.க., - எம்.பி., சிவா, தி.மு.க., அமைப்பு செயலர் பாரதி ஆகியோர், அவதுாறாக பேசிய போது, தமிழக காங்கிரசார் யாரும் பொங்கி எழவில்லை. பல கட்சிகளுக்கு போனவர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. வரும் தேர்தலில் தி.மு.க., தோற்ற பிறகு, எந்த கட்சிக்கு போவார் என தெரியாது. வரும் தேர்தலில், பணம், தங்க காசு, கொலுசு என பரிசுகளை அவர் கொடுப்பார். அவற்றை வாங்கிக் கொள்ளுங்கள். அது, உங்களிடம் கொள்ளையடித்த பணம். ஆனால், இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள். தமிழகத்துக்கு வந்த வெளிநாடு முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை கேட்டால், தி.மு.க., அமைச்சர் ராஜா வெள்ளை பேப்பரை காட்டு கிறார். இதுதான், தி.மு.க., அமைச்சர்களின் லட்சணம். - பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !