வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நடக்கட்டும் நல்ல மழை பொழியட்டும் பக்தர்கள் வேண்டும் வரம் அனைத்தும் செந்திலாண்டவன் தரட்டும்
மேலும் செய்திகள்
சுகாதார வளாக கட்டடம் இடித்து அகற்றம்
25-Apr-2025
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான யாக சாலை அமைப்பதற்கான பூஜை மற்றும் முகூர்த்தக் கால் நடும் விழா நடந்தது.இக்கோயிலில் வரும் ஜுலை 7ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் திருப்பணி வேகமாக நடந்து வருகிறது.கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் மூலவரான சுப்பிரமணியருக்கு திருக்கோயில் உள் பிரகாரத்திலும், சுவாமி சண்முகருக்கு ராஜகோபுரம் மேல வாசல் அருகிலும் யாகசாலை அமைக்கப்பட உள்ளது. சுவாமி சண்முகருக்கு யாகசாலைகள் அமைப்பதற்காக பூமி பூஜை மற்றும் முகூர்த்தக்கால் நடும் விழா இன்று காலை நடந்தது. அறநிலையத்துறை ஆகம வல்லுனர் குழுவை சேர்ந்த பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட ஆகம வல்லுனர் குழு செல்வம் பட்டர், திருச்செந்தூர் சிவாச்சாரியார்கள் விநாயகர் பூஜைகள், புண்ணியாவாஜனம் மற்றும் பூமி பூஜைகள் செய்தனர். தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட முகூர்த்தக் கால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன், நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அன்புமணி, திருக்கோயில் உதவி ஆணையர் நாகவேல், திமுக வர்த்தக அணி மாநில இணை செயலாளர் உமரிசங்கர் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நடக்கட்டும் நல்ல மழை பொழியட்டும் பக்தர்கள் வேண்டும் வரம் அனைத்தும் செந்திலாண்டவன் தரட்டும்
25-Apr-2025