உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசின் குறட்டையை அம்பலமாக்கிய இருமல் மருந்து விவகாரம்: 15 ஆண்டாக ஆய்வுக்குப் போகாத அதிகாரிகளால் அதிர்ச்சி!

அரசின் குறட்டையை அம்பலமாக்கிய இருமல் மருந்து விவகாரம்: 15 ஆண்டாக ஆய்வுக்குப் போகாத அதிகாரிகளால் அதிர்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

ம.பி.,யில் 21 குழந்தைகள் இறப்புக்கு காரணமான இருமல் மருந்து நிறுவனத்தில் 15 ஆண்டாக தமிழக அரசு ஆய்வு செய்யவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 - 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதுவரை 21 குழந்தைகள் உயிரிழப்புக்கு, அவர்கள் உட்கொண்ட 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து தான் காரணம் என்பது தெரியவந்தது. இந்த மருந்து தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தின் காஞ்சிபுரத்தில், கோல்ட்ரிப் மருந்தை தயாரித்த, 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதன் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கை கூட மாநில அரசு எடுக்கவில்லை. ம.பி.,யில் இருந்து தமிழகம் வந்த அம்மாநில போலீசார் தான் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். மறுபக்கம், 'ஸ்ரீசன்' நிறுவனத்தின் முறையற்ற செயல்பாடுகளில், தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம், சரியாக கவனம் செலுத்தாததே காரணம் என்பது தற்போது அம்பலமாகி உள்ளது. அதுமட்டுமின்றி மருந்து நிறுவனத்துக்கு, டி.என்.எப்.டி.ஏ., எனப்படும், தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம், 2011ல் உரிமம் வழங்கியது. இந்த நிறுவனத்தின் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்காதது குறித்து அடுக்கடுக்கான கேள்விகள் எழுகிறது.* இந்த நிறுவனத்தில் 15 ஆண்டுகளாக தமிழக அரசு அதிகாரிகள் எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை.* மோசமான உட்கட்டமைப்புடனும், தேசிய மருந்து பாதுகாப்பு விதிகளை மீறியும், இந்த நிறுவனம் செயல்பட்டது. இருப்பினும், 15 ஆண்டுகளாக செயல்படும் இந்த நிறுவனத்தின் மீது, தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாக துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.* நிறுவனங்களின் தயாரிப்புகள், மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின், 'சுகம்' இணையதளத்தின் வாயிலாக புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த நிறுவனம், தங்கள் தயாரிப்புகளை புதுப்பிக்கவில்லை.* குழந்தைகள் இறப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை தொடர்ந்து, கடந்த 8ம் தேதி தமிழகம் வந்த மத்திய பிரதேச போலீசார், இருமல் மருந்து நிறுவன உரிமையாளரை கைது செய்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.21 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உயிரிழக்க காரணமான ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தின் மீது இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? மருத்துவத் துறை சார்பில் சுற்றறிக்கை, அல்லது அரசாணை ஏதேனும் வெளியிடப் பட்டதா?ஏற்கனவே மருந்து கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட மருந்துகள் விற்பனைக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டதா?தமிழகம் முழுவதும் உள்ள மருந்து கடைகளில் இருந்து ஸ்ரீசன் நிறுவன மருந்துகள் முழுமையாக அகற்றப்பட்டதை உறுதி செய்ததா அரசு? 21 அப்பாவி குழந்தைகள் உயிரிழக்க காரணமான இந்த நிறுவன மருந்துகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவது குறித்து செய்தித் தாள்களில், ஊடகங்களில் ஏதேனும் விளம்பரம் வெளியிடப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.நச்சுத்தன்மை உடைய இருமல் மருந்தை குடித்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தால் நாடே கலங்கிப்போயிருக்கிறது. இந்த பிரச்னையின் அவசர அவசியத்தை கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

Vasan
அக் 12, 2025 12:40

If managing so many pharmaceutical companies is difficult, Government should take action to close the small ones, one by one. Anyway there will be big pharmaceutical companies manufacturing those products.


Vasan
அக் 12, 2025 12:37

Why should Madhya Pradesh import Cough Syrup from another country Tamilnadu? Why not Madhya Pradesh manufacture Cough Syrup within their country?


முருகன்
அக் 12, 2025 12:36

11 வருடம் அதிமுக ஆட்சி நடந்தது அதனையும் சேர்த்து தான்


அன்பு
அக் 12, 2025 13:12

இரண்டுமே பங்காளிகள். மக்கள் சுய அறிவு அற்றவர்கள்.


அன்பு
அக் 12, 2025 13:14

படிப்பறிவு இல்லாதவர்கள் ஆட்சி காலத்தில் இப்படி நடக்கும்


Keshavan.J
அக் 12, 2025 13:24

ரெண்டுமே ட்ராவிடிய பசங்க பார்ட்டி தான்


vijay
அக் 12, 2025 12:24

அந்த மருந்து கம்பெனி தமிழ்நாட்டில் தானே இருக்கு , அப்போ அந்த தயாரிப்பு பற்றி தமிழ்நாட்டில் உள்ள மருந்து கட்டுப்பட்டு துறையில் உள்ள அதிகாரிகள் தானே அவப்போழுது ஆய்வு செய்து இருக்க வேண்டும். இங்க இருக்கவருணுவ வாங்கிறத வாங்கிகிட்டு 15 வருசமா ஒரு ஆய்வும் செய்யல்ல . லஞ்சம் ,ஊழல் எல்லா துறையிலும் வியாபித்து இருக்கு. விளைவு, 15க்கு மேற்பட்ட குழந்தைகள் இறந்துவிட்டது . இந்த மருந்து விவகாரத்தில் மெத்தனமாக இருந்த சகல அதிகாரிகளையும் கைது செய்து சட்டத்தின் முன்பு கொண்டு வரவேண்டும் .


அப்பாவி
அக் 12, 2025 12:21

இதுக்காகவே விடியா தி.மு.க ஆட்சியை டிஸ்மிஸ் செய்யலாம்.


அப்பாவி
அக் 12, 2025 12:19

மாமூல் சரியாக போய்கிட்டிருந்த தால் ஆய்வுக்கு போகலை. ஒருவேளை ஆய்வுக்கு போயிருந்தால் இன்னும் அதிகமாகவே மாமூல் கறந்திருப்பார்கள்


Sangi Mangi
அக் 12, 2025 11:47

நிறுவனங்களின் தயாரிப்புகள், மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின், சுகம் இணையதளத்தின் வாயிலாக புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த நிறுவனம், தங்கள் தயாரிப்புகளை புதுப்பிக்கவில்லை.?? இதை கண்டும் காணாமலும் போன மத்திய அரசு ...


naranam
அக் 12, 2025 11:35

தமிழகத்தில் தத்திகளின் கூடாரம் ஆட்சி செய்கிறது. திராவிட விடியல் ஆட்சியில் இப்படி நடக்கவில்லை என்றால் தான் ஆச்சரியம். தமிழகத்தின் மானத்தை வாங்குவது ஒன்றே இந்த மனசாட்சியில்லாத ஆட்சியின் குறிக்கோள்.


Venugopal S
அக் 12, 2025 11:34

இந்த விஷயத்தில் மத்தியப் பிரதேச மருந்துக் கட்டுப்பாடு அமைப்புக்கும், மத்திய பாஜக அரசின் மத்திய மருந்து கட்டுப்பாடு அமைப்புக்கும் எந்தவிதமான பொறுப்பும் கிடையாதா?


ஆரூர் ரங்
அக் 12, 2025 11:53

மருந்தின் தரத்தை அதனை மக்கள் பயன்பாட்டுக்கு விட்டபின் ஆய்வதில் அர்த்தமில்லை. மூலப்பொருள்களில்தான் தவறு.( வேறு பயன்பாட்டுக்கான ரசாயனத்தை மருந்து தயாரிக்கப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளார்கள்).''' அதனை வாங்கி சிரப் ஆக்கும் ஆலையில்தான் QUALITY CONTROL தரக்கட்டுப்பாட்டு செய்யலாம். செய்யவும் வேண்டும். ஆனால் எப்படியாவது பிஜெபி மீது பழியைத் தள்ளிவிடும் உங்களது ஆர்வம் புரிகிறது.


Vasan
அக் 12, 2025 11:30

தமிழக அரசின் முழு கவனம் டாஸ்மாக் மருந்தின் மேல் மற்றுமே உள்ளது. பாவம் பச்சிளங் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை