உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்றுடன் கெடு நிறைவு; இன்னும் கொடி பறக்குது!

இன்றுடன் கெடு நிறைவு; இன்னும் கொடி பறக்குது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பல்லடம்: ஐகோர்ட் விதித்த காலக்கெடு இன்றுடன் முடிகிறது. பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன.ஐகோர்ட் உத்தரவுப்படி, திருப்பூர் மாவட்டத்தில் அரசு துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி, சாதி, மதம் சார்ந்த கொடிக்கம்பங்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.இதுதொடர்பாக, கடந்த மார்ச் 27ல் அனைத்து கட்சியினரையும் அழைத்து, கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் நடத்தப்பட்டு, பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற அறிவுறுத்தப்பட்டது.மாவட்டம் முழுவதும், அகற்றப்படவேண்டிய பட்டியலில், தரையில் நடப்பட்ட 2,652 கம்பங்கள்; பீடத்துடன் கூடியவை 645 என, மொத்தம் 3,297 கொடிக்கம்பங்கள் உள்ளன.இவற்றை, இன்றைக்குள் (ஏப்., 21) அகற்ற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கொடிக்கம்பங்கள் அகற்றப்படவில்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும் கோர்ட் உத்தரவிட்டது. ஐகோர்ட் உத்தரவை பின்பற்றி, தி.மு.க., கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என, அக்ரகட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் கட்சியினருக்கு உத்தரவிட்டார்.இருப்பினும், தி.மு.க.,வினரே பெரும்பாலான இடங்களில் கொடிக்கம்பங்களை அகற்றாமல் வைத்துள்ளனர். இதேபோல், அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், இயக்கங்கள் மற்றும் சாதி, மத அமைப்பு சார்ந்த கொடிக்கம்பங்களும் அகற்றப்படாமல் உள்ளன.மின் கம்பிகளுக்கு அருகாமையில் உள்ள கம்பங்களை தன்னிச்சையாக அகற்றமுடியாது. மின் இணைப்பைத் துண்டித்து கம்பங்களை அகற்ற தேவையான உதவிகளை உடனடியாக செய்துதர மின்வாரியம் உள்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் தயாராக இருந்தும், கட்சியினர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.கோர்ட் விதித்த காலக்கெடு இன்றுடன் நிறைவடையுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் மற்றும் இயக்கங்கள் கொடிகளை அகற்றாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ப.சாமி
ஏப் 22, 2025 01:56

இது மாதிரி விஷயத்தில் எல்லா கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கும்.


Kulandai kannan
ஏப் 21, 2025 15:01

கோர்ட் உத்தரவை ஏற்றுக்கொள்ள ....


sankaranarayanan
ஏப் 21, 2025 13:26

ஐகோர்ட் விதித்த காலக்கெடு இன்றுடன் முடிகிறது. பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. எங்களை ஒன்றுமே செய்ய முடியாது இந்த கம்புகளை அகற்றினால் நாளையே அடுத்த இடங்களில் பல்லாயிரக்கான கம்பங்கள் தோன்றும் நீதி மன்றங்களுக்கும் போலிசுக்கும் இதே வேலைதானா எங்கள் திராவிட மாடல் அரசில் வேறு வேலையை கிடையாதா


Arul. K
ஏப் 21, 2025 10:52

காலக்கெடுவிற்கு பிறகு இருக்கும் கொடிக்கம்பங்களை யார் வேண்டுனாலும் வெட்டி விற்றுகொள்ளலாம் என்று அறிவித்திருந்தால் ஒரு கோடி கம்பம்கூட இருக்காது.


Barakat Ali
ஏப் 21, 2025 10:05

யாருக்கும் யாருக்கும் உறவு இருக்குதோ இல்லையோ.. அது நல்ல உறவோ, கள்ளஉறவோ.. டீம்காவுக்கும், கோர்ட்டாருக்கும் நல்ல புரிதல் இருக்குது.. டீம்காவை இனி யாரும் தொட்டுப்பார்க்க முடியாது ......


RK
ஏப் 21, 2025 09:13

திமுகவிற்கு ஓட்டு போடக்கூடாது. எங்கள் வீட்டின் அருகே மின் மாற்றியின் அருகிலேயே கட்சிகளின் கொடிகள் இருக்கிறது மிகவும் ஆபத்தாக உள்ளது. நீதி மன்றங்கள் உத்தரவு கொடுத்ததும் கொடிகள் அகற்றப்படவில்லையென்றால் தேர்தல் ஆணையத்திற்கு கட்சிகளை தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க உத்தரவு கொடுக்க வேண்டும்.


Ramesh
ஏப் 21, 2025 08:54

பொது இடங்களில் தான் கொடி கம்பம் நடக்கூடாது என்று உத்தரவு. ஓன்று, திமுகவிற்கு ஆணை இடும் அதிகாரம் உலகத்தில் எவனுக்கும் கெடையாது. இரண்டு திமுக கொடி இருக்கும் இடங்கள் எவருடையதாக இருந்தாலும் அது திமுகவிற்கு சொந்தமானது இல்லை என்றால் வஃப்க்கு சொந்த மானது. மேட்டர் முடிந்தது யுவர் ஆனர்


S Bala
ஏப் 21, 2025 08:19

கொடி நடுவது ஆக்கிரமிப்பின் முதல் படி. ஒவ்வொரு வீதி முனையிலும் கொடிகள் கட்டி, குப்பைத்தொட்டி வைத்து அசிங்கப்படுத்தி அந்த வீட்டையே அருவெறுப்பாக மாற்றும் கயவர்கள் கூட்டம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை