உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது; வானிலை மையம் அறிவிப்பு

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது; வானிலை மையம் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை நிலவரப்படி, தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவியது. இன்று வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. உள் தமிழகம், தெற்கு கர்நாடகா இடையே நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும். தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக வட கடலோர பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

duruvasar
அக் 23, 2025 11:14

துணை முதல்வர் மக்களிடையே பண்ணியாற்றுவதை தடை செய்ய உள்நோக்க சதியோ?


RAAJ68
அக் 23, 2025 11:06

வானிலை கணிப்பு ஒவ்வொரு வருடமும் ஏமாற்றமாக உள்ளது நேற்று கனமழை பெய்யும் என்று அறிவித்தார்கள் அதனால் கல்வி கூடங்கள் விடுமுறை விடப்பட்டன ஆனால் மழையே இல்லை இப்படி வானிலை அறிக்கை பொய்த்துப் போவதற்கு என்ன காரணம். மழை பெய்யும் முன்பே பாதுகாப்பு காரணம் கருதி செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள தண்ணீரை ஓரளவு காலி செய்து விட்டனர் மழை வந்தால் ரொம்பி விடும் என்ற நம்பிக்கையில். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக உள்ளது.


ديفيد رافائيل
அக் 23, 2025 11:33

காலநிலையே மாறி விட்டது இயற்கையை அழித்ததன் விளைவு. இயற்கையை அழித்ததன் விளைவு வானிலையை prediction பண்ண முடியல. இயற்கை அதோட இஷ்டத்துக்கு இருக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை