உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும்: பிரேமலதா

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும்: பிரேமலதா

சென்னை: 'மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைக்கு, உடனடியாக தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும்' என, தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை: 'தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், அரசு துறைகளில் உள்ள பின்னடைவு காலி பணியிடங்களைக் கொண்டு, முழுமையான சிறப்பு தேர்வு நடத்தப்படும்' என, கடந்த 2023 ஜூலை 24ம் தேதி அரசாணை வெளியிட்டது. ஒரு ஆண்டுக்குள் சிறப்பு தேர்வு நடத்தி, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனக் கூறினர். இரண்டு ஆண்டுகள் கடந்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 19 ம் தேதி, தமிழ்நாடு பார்வையற்ற இயக்கத்தின் சார்பாக, வள்ளுவர் கோட்டத்தில், அறவழியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாற்றுத்திறனாளிகளின் இணைச் செயலர் பேச்சு நடத்தியபோது, 'அரசாணை இப்போது செல்லாது; ஒரு மாதத்தில் புதிய அரசாணை அறிவித்து, அதன் கீழ் சிறப்பு தேர்வுகள் நடத்தப்படும்' எனக் கூறியுள்ளனர். மாற்றுத்திறனாளிகள், தமிழக அரசு அறிவித்ததை கேட்கின்றனர். எனவே, அவர்களுக்கு எந்த பாகுபாடும் காட்டாமல், பார்வையற்றோர், வாய் பேச முடியாதவர்கள், காது கேளாதோர் உள்ளிட்டோருக்கு, கிடைக்க வேண்டிய சதவீதத்தில், வேலைவாய்ப்பு தந்து, மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைக்கு, தமிழக அரசு செவிசாய்த்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை