உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., அரசின் நிர்வாக சீர்கேடுதான் காரணம்; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

தி.மு.க., அரசின் நிர்வாக சீர்கேடுதான் காரணம்; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்ற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யத் தவறிய தி.மு.க., அரசுக்கு இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்துள்ளார்.சென்னை மெரினாவில் விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியைக் காணச் சென்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மக்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை தமிழக அரசு ஏற்பாடு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. இந்த நிலையில், மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை செய்யத் தவறிய தமிழக அரசுக்கு இ.பி.எஸ்., கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய அங்கங்களுள் ஒன்றான இந்திய விமானப் படையின் 92வது துவக்க நாள் விழாவை முன்னிட்டு, விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் வண்ணம் சென்னையில் இன்று வான் சாகச நிகழ்ச்சி அரங்கேறியது. இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியான நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடக் கூடுவர் என்பது அறிந்து, போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இருப்பினும், இன்றைய நிகழ்ச்சியில் நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும்- போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்துவதற்கு போலீசாரும் போதிய அளவில் இல்லாததால், மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, மேலும் வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியும் , மிகுந்த வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும்.இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக் கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாகச் சீர்கேடால் உருவான விடியா தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ராணுவ விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் நிகழ்வுகள் இதுவரையில் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன. ஆனால் இன்று தமிழகத்தில் நிகழ்பெற்ற நிகழ்வில் உயிர்சேதம் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. இந்நிகழ்வுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய இந்த ஸ்டாலின் அரசுக்கு என் கடும் கண்டனங்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

nv
அக் 07, 2024 07:42

மிக கேவலமான சாலை போக்குவரத்து செய்து திராவிட மாடலின் உண்மையான தகுதியில்லாத தன்மையை வெளிப்படுத்தி விட்டது.. தானும், மனைவியும், தன் குடும்பமும், தங்கள் ஜால்ராக்கள் மட்டுமே அனுபவிக்க வேண்டும்..மக்கள் எக்கேடு கேட்டால் என்ன? ஆனாலும் நாம் ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கும், பிரியாணிக்கும் இவனுங்களை வாழ வைக்கும் அவலம்..


N.Purushothaman
அக் 07, 2024 06:44

மானங்கெட்ட மாநில அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ? தற்போது அரசிலும் அரசு அலுவலர்களிடம் தகுதியோ அல்லது புத்திக்கூர்மையோ சிறிதளவும் இல்லை என்பது நிதர்சனம் ..... இடஒதுக்கீடு வாழ்க ....சமூக நீதி ஓங்குக ....


Kasimani Baskaran
அக் 07, 2024 05:41

எதற்கும் திட்டமிடுவது கிடையாது. துதி பாடுவது, கொள்ளை அடிப்பது போன்ற வேளைகளில் ஈடுபட்டு இருப்பதால் பொது மக்கள், பாதுகாப்பு போன்றவை பின்னுரிமை பெறுகின்றன..


அப்பாவி
அக் 07, 2024 03:38

சாகசநிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணவங்க மக்கள் பாதுகாப்புக்கு ஏற்பாடு முடியலைன்னா எதுக்கு வரணும்? இங்கேதான் தடுக்கி விழுந்தா இன்னொருத்தன் தலைமேலதான் விழணும்னு தெரியாதா? மோடி வந்திருந்தால் பாதுகாப்புன்னு உய்ரையே அடிச்சு முடக்கியிருப்பாங்க.


karupanasamy
அக் 07, 2024 03:24

ரூபாய்க்குக்கும் புட்டிக்கும் பிரியாணி பொட்டலத்துக்கும் அடிமை சாசனம் எழுதிக்குடுத்துட்டு வேற என்னத்த எதிர்பாக்குறது. செஞ்சபாவத்த அலைந்ததுதான் ஆகணும் நல்லா அனுபவிங்க


Sathyanarayanan Sathyasekaren
அக் 07, 2024 03:07

எதற்கு எடுத்தாலும் உத்திர பிரதேசத்தை குறை சொல்லும், கிண்டல் செய்யும், கார் ரேஸ் ஏற்பாடுகளை அஹ்ஹா, ஒஹோ என்று புகழ்ந்த திருட்டு திராவிட கழிசடைகள் எங்கே? இதைவிட பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் கும்பமேளா நிகழ்ச்சிகள் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் ஏற்பாடுகள் செய்கிறார்கள்.


N.Purushothaman
அக் 07, 2024 10:08

கூலிக்கு மாறடிப்பவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும் ?


தாமரை மலர்கிறது
அக் 07, 2024 02:13

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதால் எந்த கமிஷனும் கிடைக்காது. அதனால் திமுக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.


RAMAKRISHNAN NATESAN
அக் 06, 2024 23:38

நீங்கள் ஆட்சியில் இருந்தாலும் இப்படி நேர்ந்திருக்கலாம் ......... மாநில அரசு முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் ....... அது மாநில அரசின் பொறுப்புதான் ..... இந்திய விமானப்படையோ மத்திய அரசோ பொறுப்பேற்க முடியாது .....


kulandai kannan
அக் 06, 2024 22:55

காஞ்சிபுரம் போன்ற சிறிய நகரத்தில் 48 நாள் அத்தி வரதர் வைபவத்தை சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் நடத்திய அதிமுக நிர்வாகம் எவ்வளவோ மேல்.


narayanansagmailcom
அக் 06, 2024 22:25

சமூக நீதி பற்றி தினமும் பேசும் நம் முதல்வர் இன்றைய விமான படை சாகச திருவிழாவை பார்க்க வந்த மக்களுக்கு தகுந்த வசதி கூட செய்து கொடுக்க முடியவில்லை. ஆனால் அவர் குடும்பம் எல்லா வசதிகழும் அனுபவித்து வருகிறார்கள். மக்கள் மேல் எவ்வளவு பாசம் வேஷம் தெரிகிறதா


முக்கிய வீடியோ