உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரட்டை வேடம் போடுகிறார் திருமா; மத்திய அமைச்சர் எல்.முருகன் விளாசல்!

இரட்டை வேடம் போடுகிறார் திருமா; மத்திய அமைச்சர் எல்.முருகன் விளாசல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் போடுகிறார். அவருக்கு சமூகநீதி பற்றி பேச அருகதை கிடையாது' என மத்திய அமைச்சர் எல்.முருகன் கடுமையாக சாடியுள்ளார்.சென்னை, எழும்பூரில் நிருபர்கள் சந்திப்பில் எல்.முருகன் கூறியதாவது: திருமாவளவன் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன். எல்லாரும் கவனமாக கேளுங்க. சமூகநீதி பற்றி பேசுவதற்கு திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. சமூக நீதி குறித்து அம்பேத்கர் கூறியது, அனைத்து மக்களுக்கும், கடைக்கோடியில் இருக்கும் மக்கள் அனைவரும் இடஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்றார். இதுதான் அம்பேத்கர் எண்ணம், கொள்கை. ஆனால் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த திருமாவளவன் இரட்டை வேடம் போடுகிறார்.

சின்ன கட்சி

திருமாவளவன் எப்படி ஒரு தலித் தலைவராக இருக்க முடியும். அருந்ததியர் இட ஒதுக்கீடை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த திருமாவளவன் எப்படி தலித் மக்கள் தலைவராக இருக்க முடியும். இவர் எப்படி ஒட்டுமொத்த தமிழகத்தின் தலைவராக இருக்க முடியும். அவருடைய சின்ன கட்சி, அந்த அமைப்புக்கான தலைவராக தான் நான் பார்க்கிறேன். அவர் அனைத்து தலித் மக்களையும் ஒரே பார்வையில் பார்க்க வேண்டும். அவருடைய உண்மை முகம் வெளிப்பட்டு கொண்டு இருக்கிறது. அவர் சமூகநீதி பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.

முதல்வர் கனவு நடக்காது

சமூகநீதி என்றால் கடைக்கோடியில் இருக்கும் ஒவ்வொரு தலித் மக்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பது தான் அம்பேத்கர் கோரிக்கை. இதற்கு தான் அவர் அரசியலமைப்பு சட்டத்தில் இட ஒதுக்கீடை கொண்டு வந்தார். அந்த இடஒதுக்கீடை நீர்த்து போக செய்யும் அளவிற்கு செயலை திருமாவளவன் செய்து கொண்டு இருக்கிறார். அதனால் திருமாவளவன் எல்லாம் முதல்வர் ஆகுவதற்கான கனவு எல்லாம் நடக்காது. கவர்னர் உண்மையைச் சொன்னால் தி.மு.க.,வினருக்கு கசக்கிறது; கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே முரண்பாடு இருந்து கொண்டேதான் இருக்கிறது. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Oviya Vijay
அக் 20, 2024 22:24

ஊர் முழுக்க கலாய்க்கும் படியாக நடந்துகொள்ளும் ஒருவர் விளாசுகிறார் என்றெல்லாம் செய்தி போடும் போது சிரிப்பு தான் வருகிறது... சிரிப்பு போலீஸ் என்று வடிவேல் படத்தில் காமெடி இருப்பது போல முருகன் ஒரு சிரிப்பு காமெடி பீஸ்.


T.sthivinayagam
அக் 20, 2024 16:16

பாஜாகா 3.0 வின் சிறந்த கண்டுபிடிப்பு


raja
அக் 20, 2024 15:39

அண்ணன் முருகன் சொல்லும் இரண்டாவது வேடம்


வைகுண்டேஸ்வரன்
அக் 20, 2024 14:19

Mr. Dhuversan, இணை அமைச்சர் முருகனை ஸ்டைலா மூர்க்ஸ் னு லாம் சொல்லப்படாது. அவரே என்னடாது நாம ஏதாச்சும் பிட் போடலாம்னா முதல்ல திருமா போட்டார். அடுத்த பிட் கவர்னர் போட்டுட்டார். அடுத்து எப்படி பெரிய பிட் போடறதுன்னு கடுப்பில் இருக்கார். நீங்க வேற மூர்க்ஸ் ங்கறீங்க. மீனு கோச்சுக்கும்.


வைகுண்டேஸ்வரன்
அக் 20, 2024 14:16

திருமா இப்போ சங்கி ஆச்சே.. இரட்டை வேடம் போடுவதில் என்ன ஆச்சரியம்? உங்களையே மிஞ்சும் அளவிற்கு பிஜேபி க்கு ஜால்ரா போடுகிறார் என்று உங்களுக்கு எரியுதாம் முருகன், ஸாரி மூர்க்ஸ். நீங்க வேற ஒரு பிட் சீக்கிரம் ரெடி பண்ணுங்க. கவர்னர் வேற இன்னொரு பக்கம் பிட்டுகளா போட்டு அடி வாங்கிண்டிருக்கார்.


Rajathi Rajan
அக் 20, 2024 14:12

கலைஞர் கருணாநிதி கொடுத்த இட ஒதுக்கீட்டில் வந்தவர், வளந்தவர் தானே நீங்கள், இதில் துர்வாசம் வீசும் துர்வாசனுக்கு ரொம்ப மிளகாய் வைத்த மாதிரி எரியுது போல துஷ்டான் துர்வாசன்


manokaransubbia coimbatore
அக் 20, 2024 15:52

இட ஒதுக்கீடு எப்போந்திருந்து இருக்கிறது என்று தெரியுமா ஏதோ கருணாநிதி வந்துதான் கொடுத்தார் என்று நம்பும் 200 உபியீசதானே நீ


பேசும் தமிழன்
அக் 21, 2024 09:02

என்னது... கருணாநிதி இடஒதுக்கீடு கொடுத்தாரா ?.....? அண்ணல் அம்பேத்கரின் புகழை குறைக்க முயற்சி செய்கிறீர்கள் போல் தெரிகிறது.


வைகுண்டேஸ்வரன்
அக் 20, 2024 13:16

முருகன், அவரு இப்போ உங்க ஆளு சார். பார்த்துப் பேசுங்க.


Duruvesan
அக் 20, 2024 13:30

என்ன மூர்க்ஸ் எரியுதா?


SUBBU,MADURAI
அக் 20, 2024 14:15

இந்த எல்.முருகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்தது வீண் இவர் தன் பதவியை வைத்து பொய் செய்திகளை பரப்பும் தமிழக RSB ஊடகங்களுக்கு எதிராக ஒரு துரும்பையும் கிள்ளிப் போட வில்லை எனவே இவருடைய பேச்சு வீண் பேச்சு ஒன்றுக்கும் உதவாத பாஜக நபர் இந்த ஆள் அண்ணாமலைக்கு எதிராக ஆள் சேர்க்க வேண்டும் என்றால் தமிழிசை வானதி நைனார் நாகேந்திரன் போன்ற டம்மி பீஸகளோடு ஒத்து ஊதுபவன் இந்த தாழ்வான்


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 20, 2024 16:50

பாஜக ஆளு ன்னு சொல்ல வர்றீங்களா ???? அதென்ன பொசுக்குன்னு அப்படிக்கேட்டுட்டீங்க .... ஓ, ஆட்சியில் திருமா பங்கு கேட்டாரே ...... அதனால்தானா ????


A Viswanathan
அக் 21, 2024 10:43

நீங்கள் லாசநாட்டிற்கு சென்று நித்தியானந்த அவர்களிடம் உங்களின் விருப்பத்தை கூறி முயற்சிக்கலாம்.தமிழ் நாட்டில் இவர் நிச்சயமாக வரமுடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை