உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் மட்டுமே அமலாக்க துறை கண்களுக்கு தெரிகிறது: ஐகோர்ட்டில் அரசு குற்றச்சாட்டு

தமிழகம் மட்டுமே அமலாக்க துறை கண்களுக்கு தெரிகிறது: ஐகோர்ட்டில் அரசு குற்றச்சாட்டு

சென்னை: மணல் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த, துாத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து வி.ஏ.ஓ., லுார்து பிரான்சிஸ், 2023ல் மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பதிவான நான்கு வழக்குகள் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட பிரிவுகளின் கீழ், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கக்கோரி, தமிழக டி.ஜி.பி.,க்கு, கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், அமலாக்க துறை கடிதம் அனுப்பியது. அதன் மீது நடவடிக்கை எடுக்காததால், தாங்கள் அனுப்பிய தகவல்கள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய, டி.ஜி.பி.,க்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்க துறையின் சென்னை மண் டல உதவி இயக்குநர் கிராந்தி குமார் மனு தாக்கல் செய்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p10po8g6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஒரு விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை, மற்றொரு விசாரணை அமைப்பான மாநில காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி, எப்படி வழக்கு தொடர முடியும்; பகிர்ந்து கொண்ட தகவல்கள் அடிப்படையில், மாநில காவல் துறையிடம் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யும்படி, நீதிமன்ற உத்தரவை கோர முடியுமா' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் சிறப்பு பிளீடர் என்.ரமேஷ் ஆஜராகி, ''சட்டவிரோத குவாரி நடவடிக்கை தொடர்பாக, மிகவும் ரகசியமாக சேகரிக்கப்ப ட்ட தகவல்களை, மாநில காவல் துறைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரப்பட்டது. இதுபோன்ற கோரிக்கையுடன் வழக்கு தொடர, அமலாக்க துறைக்கு சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது,'' என்றார். தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதாடியதாவது: அமலாக்கத்துறை தகவல்களை பகிர்ந்ததால் மட்டும், அதை ஏற்று வழக்கு பதிவு செய்ய மாநில காவல்துறை ஒன்றும், 'போஸ்ட் மாஸ்டர்' அல்ல. உத்தர பிரதேசம், குஜராத், பீஹார் போன்ற மாநிலங்களில், தமிழகத்தை விட ஐந்து மடங்கு அதிகமாக, மணல் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அந்த மாநிலங்களின் வழக்குகள் மீது, எந்த நடவடிக்கையும் அமலாக்க துறை எடுக்கவில்லை. ஆனால், தமிழகம் மட்டுமே அமலாக்கத்துறையின் கண்களுக்கு தெரிகிறது. சில மாநிலங்களை மட்டுமே தேர்வு செய்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும் மனப்பான்மையை அமலாக்கத்துறை கொண்டுள்ளது. இவ்வாறு அவர் வாதாடினார். இதையடுத்து நீதிபதிகள், 'மாநில காவல்துறையும், அமலாக்கத்துறையும் புலனாய்வு அமைப்புகள் . இரண்டும் ஒன்றுக்கொன்று சந்தேகமோ அல்லது சண்டையோ வைத்து கொள்ளக்கூடாது' என்று கூறியதுடன், மனுவுக்கு மூன்று வாரங்களில் பதில் அளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

மணிமுருகன்
நவ 01, 2025 23:02

அமலாக்கத்துறை முறைக்கேடு பற்றிய செய்தி கிடைத்ததால் தானே நடவடிக்கை எடுக்கிறது அது உண்மையா பொய்யா என்பதை அறியவேண்டியது சம்பந்தபட்டத் திறை இல்லை அவரடகளால் முடியாது என்றால் அமலாக்கதுதுிறையிடம் பொறநுப்பை கொடுக்க வேண்டியது தானே மற்ற மாநிலங்களில் நடவடிகடகை பற்றி அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுக கூட்டணி வக்கீலுக்கு கவனம் எதற்கு உங்களை சார்ந்தவற்றிக்கு பதில் சொல்லுங்கள்


Pugazha Ssh
நவ 01, 2025 18:33

திருடனை தான் போலீஸ் பிடிக்கணும் ஆனா தமிழ் நாட்டில் தான் நிரபராதிய pudikkutju


Chess Player
நவ 01, 2025 15:59

திருடன் எங்க இருக்கனோ அங்க தானே அவங்க வேலையே


SUBRAMANIAN P
நவ 01, 2025 14:11

நல்ல காவல்துறை, நல்ல அமலாக்கத்துறை மற்றும் நல்ல நீதிமன்றம் = நாடு விளங்கிடும்


surya krishna
நவ 01, 2025 14:03

தமிழகம் அல்ல திமுக கட்சியின் திமுக அரசு ஆட்சியில் இருப்பதால் கொள்ளையடிக்கும் உங்களைத்தான் அமலாக்கத்துறை தேடி பிடிக்கும்


திகழ்ஓவியன்
நவ 01, 2025 13:55

மணல் கொள்ளை சாரயம் இது எல்லா மாநிலங்களில் உள்ள விஷயம் , இதை பற்றி வாரம் ஒரு முறை பேசி கொண்டு இருந்த அண்ணாமலை , சீமான் எல்லாம் இப்போ இதை பற்றி பேசுவதில்லை ஏன் மாமூல் மாதா மாதம் கரெக்ட் ஆஹ் போகுது இல்லை இது எந்த ஆட்சி வந்தாலும் நடக்கும்


Saai Sundharamurthy AVK
நவ 01, 2025 12:29

ஆக, தமிழகத்தில் மணல், கனிம வளக் கொள்ளை நடப்பதை தமிழக அரசு ஒப்புக் கொண்டு விட்டது. பிறகென்னன ! நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டியது தான் பாக்கி.


RADHAKRISHNAN
நவ 01, 2025 12:14

திருட்டு அதிகமாக உள்ள இடத்தில்தானே கண்கானிப்பு இருக்கும்,


Rathna
நவ 01, 2025 11:51

சட்ட சிக்கல்களை நீக்க வேண்டியது நாட்டு பஞ்சாயத்தின் வேலை. அவர்களே எப்படி உத்தரவு இட முடியும் என்று கேள்வி கேட்டால்??


R. SUKUMAR CHEZHIAN
நவ 01, 2025 11:42

எது பெரியதாக இருக்கிறதோ அது தான் கண்ணில் படும், தமிழகத்தில் தான் ஊழல், லஞ்சம், கஞ்சா போதை, கிட்னி திருட்டு, சினிமா மாப்பியா, மொள்ளமாரி தனம் கேப்மாரிதனம் அதிகம் அதனால் மக்கள் நலன் தேசிய நலன் கருதி அமலாக்க துறை செயல் படுவது வரவேற்கத்தக்கது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை