உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் தான் கீழடி அகழாய்வு துவங்கப்பட்டது: இபிஎஸ்

அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் தான் கீழடி அகழாய்வு துவங்கப்பட்டது: இபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீழடி: 'தமிழகத்தில் நடந்து வரும் 39 அகழாய்வில் 33 அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டவை' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று பார்வையிட்டார். அப்போது, மதுரை பாத்திமா கல்லுாரி மாணவியர் அவரை சந்தித்தனர். தரமான லேப்டாப் அவர்களிடம் பேசிய பழனிசாமி, 'அ.தி.மு.க., ஆட்சியமைத்த உடன் கல்லுாரி மாணவியருக்கு தரமான லேப்டாப் வழங்கப்படும்' என உறுதியளித்தார். பின் பழனிசாமி கூறியதாவது: தமிழர் நாகரிகத்தை பறைசாற்றும் கீழடி அகழாய்வு, அ.தி.மு.க., ஆட்சியில் தான் துவங்கப்பட்டது. தமிழகத்தில் நடந்து வரும் 39 அகழாய்வில் 33 அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டவை. 'கீழடி என் தாய்மடி' என அறிவித்தது; அருங்காட்சியகம் கட்ட இடம் தேர்வு செய்து கட்டட பணிகள் துவங்கியது; தற்காலிகமாக, மதுரை தமிழ்ச்சங்கத்தில் கீழடி பொருட்களை காட்சிப்படுத்தியது என அனைத்துமே அ.தி.மு.க., ஆட்சியில் தான் நடந்தன. கீழடியை வைத்து அரசியல் செய்கின்றனர். தமிழகத்தில் உள்ள 96 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், முதல்வர்கள் இல்லை. ஏராளமான கல்லுாரிகளில் பேராசிரியர்கள் இல்லை. இதனால், மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார். அஜித்குமார் வீட்டில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையின் போது அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் வீட்டுக்கு, பழனிசாமி நேற்று சென்றார். அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரர் நவீன் குமாரை சந்தித்து ஆறுதல் கூறிய பழனிசாமி, அ.தி.மு.க., சார்பில் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்தார். பின்னர், அவர் கூறுகையில், “அ.தி.மு.க., அழுத்தத்தால், வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. அஜித்குமார் உடலில் 44 இடங்களில் காயம் இருந்துள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் சட்டம் - -ஒழுங்கு சீர்கெட்டு விட்டது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Mario
ஜூலை 31, 2025 09:15

அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் தான் தூத்துக்குடி படுகொலை நடத்தப்பட்டது: இபிஎஸ்


ஆரூர் ரங்
ஜூலை 31, 2025 13:47

அப்போ அஜித் படுகொலை? ஆனா தூத்துக்குடி துப்பாக்கி சூடு நிகழ்வுக்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் யாரும் தண்டிக்கப்பட்ட செய்திகள் இல்லையே.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 31, 2025 06:53

தமிழன் தான் தமிழர்களின் தொன்மை பற்றி தெரிந்து கொள்ள கீழடி அகழாய்வு துவங்குவார்கள்.. பரம்பரையினர் துவங்குவார்களா ?


Kasimani Baskaran
ஜூலை 31, 2025 03:41

திராவிடர்களுக்கு பொதுவாகவே இந்து மத வெறுப்பு உண்டு - சில பிரிவுகளுக்கு அதிகமான அளவில் இருக்கிறது. அந்த அடிப்படையில் அவர்கள் ஆய்வு மேற்கொள்ளும் பொழுது பல ஆதாரங்களை மூடி மறைத்து விடுகிறார்கள். சில நேரங்களில் உலோகங்களில் கூட கார்பன் டேட்டிங் செய்வோம் என்று விஞ்ஞானத்துக்கு எதிராகவே நடந்து கொள்கிறார்கள். இதையெல்லாம் வைத்துப்பார்த்தால் தமிழன் கிபிக்கு பின்னல்த்தான் தோன்றினான் என்று கூட நிரூபிப்பார்கள்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை