உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

சென்னை : நாடு முழுதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, கடந்த அக்., 27 முதல் டிசம்பர், 9 வரை நடந்தது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக, 16 லட்சம் மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை ஆய்வு செய்து, இறுதி வாக்காளர் பட்டியல், ஜனவரி, 5ல் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பின், தமிழகம் உட்பட 12 மாநிலங் களில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி, ஜன., 22க்கு மாற்றப்பட்டது. அதன்படி, இன்று காலை 10:00 மணிக்கு, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர்கள், சென்னையில் மாநகராட்சி கமிஷனர், அந்த மாவட்டங்களுக்குரிய இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளனர்.லோக்சபா தேர்தலுக்கு, இன்று வெளியிடப்படும் வாக்காளர் பட்டியல் இறுதி வாக்காளர் பட்டியலாகும். இதன்பின், பெயர் சேர்க்கப்பட்டால், அது துணை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி