உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாய மின் கட்டண மானியமாக ரூ.15,785 கோடி வழங்கியது அரசு

விவசாய மின் கட்டண மானியமாக ரூ.15,785 கோடி வழங்கியது அரசு

சென்னை: வீடு, விவசாயத்துக்கு இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்துக்காக, 2024 - 25ல், 15,785 கோடி ரூபாயை, மின் கட்டண மானியமாக மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கி உள்ளது.தமிழகத்தில் வீடுகளுக்கு, 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது.விவசாயம், குடிசை வீடுகளுக்கு, முழுதும் இலவசமாகவும், விசைத்தறி உள்ளிட்ட பிரிவுகளுக்கு மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக மின்வாரியத்திற்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்திலும், அந்த ஆண்டில் ஒவ்வொரு பிரிவுக்கும் எவ்வளவு மானியம் விடுவிக்க வேண்டும் என்பதை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், உத்தேசமாக அரசுக்கு தெரிவிக்கும். பின், நிதியாண்டு முடிவடைந்ததும், துல்லியமான மானியம் இறுதி செய்யப்படும்.அதன்படி, 2024 - 25ல், 15,852 கோடி ரூபாயை, உத்தேச மானியமாக வழங்க ஆணையம் உத்தர விட்டது. இதை நான்கு தவணைகளாக அரசு வழங்கியுள்ளது.மானிய ஆவணங்களை பரிசீலித்த ஆணையம், தற்போது, 15,785 கோடி ரூபாயை மானியமாக இறுதி செய்துள்ளது. எனவே, கூடுதலாக வசூலிக்கப்பட்ட, 67 கோடி ரூபாயை, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிற்கு பெற வேண்டிய மானியத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு, மின்வாரியத்துக்கு தெரிவித்துள்ளது.

பிரிவு வாரியாக

மானிய விபரம் பிரிவு - மானியம்/ ரூபாய் கோடியில்வீடு - 7,453 விவசாயம் - 6,898குடிசை வீடு - 357 வழிபாட்டு தளம் - 19விசைத்தறி - 538கைத்தறி - 14சிறு தொழிற்சாலை - 357'காமன்' சர்வீஸ் உட்பட இதர பிரிவு- 149

பிரிவு வாரியாக

மானிய விபரம் பிரிவு - மானியம்/ ரூபாய் கோடியில்வீடு - 7,453 விவசாயம் - 6,898குடிசை வீடு - 357 வழிபாட்டு தளம் - 19விசைத்தறி - 538கைத்தறி - 14சிறு தொழிற்சாலை - 357'காமன்' சர்வீஸ் உட்பட இதர பிரிவு- 149


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Gajageswari
ஜூன் 16, 2025 21:02

தவறான கணக்கீடு. ₹30000 கோடி தரவேண்டும்


Varadarajan Nagarajan
ஜூன் 15, 2025 10:38

மின்வாரியம் கோவில்களுக்கு யூனிட்டுக்கு ரூபாய் 8க்கு மேல் வசூலிக்கிறது. அப்படி இருக்கும்போது ரூபாய் 19 கோடி மான்யம் எந்த வழிபாட்டுத்தலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது?


தாமரை மலர்கிறது
ஜூன் 15, 2025 09:06

உனது பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து உனக்கே கொடுப்பது தான் இலவசம்.


Saai Sundharamurthy AVK
ஜூன் 15, 2025 08:41

அரசு என்றால் எந்த அரசு ???


venugopal s
ஜூன் 15, 2025 13:32

நிச்சயமாக மத்திய பாஜக அரசு இல்லை!


Kasimani Baskaran
ஜூன் 15, 2025 06:33

வீடுகளுக்கு கொடுக்கும் மானியத்தை விடக்கூட விவசாயத்துக்கு அரசு கொடுக்கும் மானியம் 555 கோடி குறைவு. மொத்தத்தையும் விவசாயிகள் என்று அவர்களுக்கு கொடுத்தது போல உருட்டுவது திராவிடமாடல் போன்றது...


Mani . V
ஜூன் 15, 2025 06:15

அடுத்த வருடம் தேர்தல் வருகிறது என்றவுடன் இந்த கொள்ளைக்கூட்டம் மக்களை ஏமாற்ற இந்த வேலையைச் செய்கிறது.


சமீபத்திய செய்தி