உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினம், தினம் எதிர்க்கட்சிகளை மட்டுமே கேள்வி கேட்கும் திருமா; இன்றும் அ.தி.மு.க.,வுக்கு தான்!

தினம், தினம் எதிர்க்கட்சிகளை மட்டுமே கேள்வி கேட்கும் திருமா; இன்றும் அ.தி.மு.க.,வுக்கு தான்!

மதுரை: தினம், தினம் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே கேள்வி கேட்கும் வழக்கம் உள்ள திருமாவளவன், இன்று ( ஜூலை 13), 'கூட்டணி ஆட்சி என்பதை அ.தி.மு.க., தான் அறிவிக்க வேண்டும்' என தெரிவித்தார்.இது தொடர்பாக மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: நான் தான் தொடக்கத்தில் இருந்தே சொல்லி இருக்கிறேன். சொல்லிக் கொண்டு வருகிறேன். அது பொருந்தா கூட்டணி.கொள்கை அளவில் மட்டும் அல்ல. செயல் அளவிலும் கூட அவர்களால், இணக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட முடியாத அளவுக்கு, அவர்களுக்கு இடையே இடைவெளி இருக்கிறது. வெளியே நிற்கும் சில கட்சிகளை உள்ளே இழுப்பதற்காக, அமித்ஷா கூட்டணி ஆட்சி, கூட்டணி ஆட்சி என்று ஆசை காட்டுகிறார்.

ஆண்ட கட்சி

அ.தி.மு.க., தமிழகத்தில் ஒரு வலுவான கட்சி. ஆண்ட கட்சி. ஆனால் அந்த கட்சியின் விருப்பத்திற்கு மாறாக அமித்ஷா தன் விருப்பம்போல் கருத்துக்களை சொல்லி வருகிறார். அ.தி.மு.க., வின் முன்னணி தலைவர்கள் ஒன்று கூடி, அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. அ.தி.மு.க., தரப்பிலிருந்து கூட்டணி ஆட்சி என்று அறிவித்தால் தான், அது அதிகாரப்பூர்வமானது. அமித்ஷா சொல்லிக் கொண்டிருக்கும் வரையில், அ.தி.மு.க.,வை அவர் ஒரு கிள்ளு கீரையாக கருதுகிறார் என்று மட்டுமே உணர முடியும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

கேள்வியும், பதிலும்!

நிருபர்: மத்திய அமைச்சர் எல்.முருகன் தி.மு.க., கூட்டணி சுக்குநூறாக உடையும் என்று கூறியுள்ளாரே?திருமா பதில்: அது அவருடைய ஆசையாக இருக்கலாம். அவருடைய ஆசைகள் எல்லாம் நிறைவேறுவதற்கு தமிழகம் இடம் கொடுக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

கண்ணன்
ஜூலை 14, 2025 11:31

எவரொருவர் முறையான படிப்பறிவும பட்டறிவும் உடையவராக இருந்தால் அவர்கள் அது பேச்சுக்களும் செயல்களும் நன்றாகவே அமையும் அல்லெங்கில் இப்படித்தான்….


Rajan
ஜூலை 13, 2025 20:55

ஆஹா என்ன அக்கறை? அதிமுக தோல்வி அடைந்தால் உங்கள் கூட்டணிக்கு நல்லது தானே? ஒரு வேளை தோல்வி பயம் வந்து விட்டதா?


SRIRAM
ஜூலை 13, 2025 20:24

அவர் கேட்கவில்லை என்றால் நோ சீட் நோ பொட்டி... தீய மு க வின் தீய எண்ணம் குருமாக்கு புரியல.. ஏதாவது கூட்டணியில் நடந்தால் குருமாவிற்கு போக்கிடம் இல்லை.... அந்த நிலையை தீய மு க ஏற்படுத்தவே இவரை பகடைக்காயாக பயன் படுத்திகிறது


Ramesh Sargam
ஜூலை 13, 2025 20:24

அந்த கேள்விகளை எழுதிக்கொடுப்பதே ஆளும் கட்சிதான். அப்படி இருக்கையில் ஆளும் கட்சியினரையே கேள்வி கேட்க எப்படி ஆளும் கட்சியினர் கேள்வி எழுதிக்கொடுப்பார்கள்?


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூலை 13, 2025 19:53

பாஸ் விடியல் சார், இவரை ஓரம் கட்டிட்டாரு, கொடுக்கற சீட்ல நில்லுங்க, இல்ல வெளிய போங்கன்னு சொல்லிட்டாரு, ராமதாஸ் வருவார்னு சொல்றாங்க, இவர் நிலைமை கேவலமா இருக்கும்


கிருஷ்ணன்
ஜூலை 13, 2025 19:42

சார்,சார் முதல்ல, உங்க ஆசைகளை நிறைவேற்ற தமிழகம் இடம் தருமா திரு திருமா? அட, திரு முருக்கன் ஆசைகளை விடுங்க, திமுக வுடன் , தொகுதிக்கு கூட்டணிப் பேரம் பேசும்போது, சும்மா ஒரு பேச்சுக்கு, கூட்டணி... ஆட்... ச்... சி....னா..... தான் தொகுதி பேரம் பேசுவோம் என தில்லா, மீசையை முறுக்கி, வீராப்பா, சாய்ந்து உட்கார்ந்து, பேசும் தில்லு உங்ககிட்ட இப்ப இருக்கா திரு திருமா சார்


theruvasagan
ஜூலை 14, 2025 11:25

வாயை வாடகைக்கு விட்டாச்சில்ல. அதனால கேள்வி கேட்க மட்டும்தான் வாயத் தொறக்கணும். பதில் சொல்ல உபயோகப்படுத்த கூடாதுன்னு உத்தரவு ஆகியிருக்காம்.


HoneyBee
ஜூலை 13, 2025 19:28

அறிவாலய வாசலில் உள்ள நன்றியுள்ள ஜீவன் இந்த ஜோக்கர் குருமா. அதனால் தான் இப்படி கத்துகிறது. கட்டாயம் பிஸ்கெட் பாக்கெட் கிடைக்கும்


ராமகிருஷ்ணன்
ஜூலை 13, 2025 19:25

இப்படியெல்லாம் போட்டோ போடாதீங்க. சின்ன புள்ளைங்க பூச்சாண்டி என்று பயந்துடுவாங்க. சுடலையின் மனதின் குரலாக குருமா கதறுவது எல்லோரும் அறிந்ததே.


என்றும் இந்தியன்
ஜூலை 13, 2025 19:08

திரு என்றால் உயர்ந்த இடத்தில் உள்ளவர் மா இந்தியில் அம்மா என்று அர்த்தம் ஆனால் டாஸ்மாக்கினாட்டில் இதன் அர்த்தம் தி - திருட்டு மா- மாட்டு மூளை என்று கொள்ளவேண்டும்


sundarararaman muthusami
ஜூலை 13, 2025 19:07

அவர் குறை கூறவில்லை, ஒருவேளை கூட்டணி ஆட்சி என்றால் தனக்கும் அதில் இடம் கிடைக்க வழி உண்டா? என்று வினவுகிறார்.