உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்பு மொழியே ஒற்றுமை மொழி; கனிமொழி பதிலுக்கு ஸ்டாலின் பாராட்டு

அன்பு மொழியே ஒற்றுமை மொழி; கனிமொழி பதிலுக்கு ஸ்டாலின் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையில் ஒற்றுமை' என, பதிலளித்த பார்லிமென்ட் தி.மு.க., குழுத்தலைவர் கனிமொழிக்கு, முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.பயங்கரவாதிகள் பஹல்காமில் தாக்குல் நடத்தி 26 அப்பாவி உயிர்களை பறித்தனர்.இதற்காக பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது இந்தியா. உடனே, இந்திய அரசிடம் மண்டியிட்டது பாக்., அரசு. இதையடுத்து, பாகிஸ்தான் மீதான தாக்குதலை நிறுத்தியது இந்திய அரசு. ஆனாலும், இந்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து, பாகிஸ்தான் உலகம் முழுதும் பொய்ப் பிரசாரம் மேற்கொண்டது.இதனால், இந்திய அரசு மீது சர்வதேச நாடுகளுக்கு தவறான புரிதல் ஏற்பட்டு விடக்கூடாது என முடிவெடுத்த மத்திய அரசு, பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கைள் குறித்து, சர்வதேச நாடுகளுக்கு விளக்கம் அளிக்க, மத்திய அரசு சார்பில், பல்வேறு எம்.பி.,க்கள் குழு அமைக்கப்பட்டன.அக்குழுக்கள், பல நாடுகளுக்கும் சென்று, இந்திய அரசின் செயல்பாடுகளை தெள்ளத்தெளிவாக, அனைவருக்கும் எடுத்துரைத்து திரும்பி உள்ளது. இப்படி, மத்திய அரசு அனுப்பி வைத்த குழுக்களில், கனிமொழி தலைமை வகித்த குழு, ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட, 5 நாடுகளுக்கு சென்று, அந்த நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கம் அளித்தது.ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில், கனிமொழி தலைமையிலான எம்.பி.,க்களை, அந்நாட்டு பிரதிநிதிகள் சந்தித்தனர். அப்போது, 'இந்தியாவின் தேசிய மொழி எது' என, ஸ்பெயின் பிரதிநிதிகள் கேள்வி எழுப்ப, 'வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் தேசிய மொழி' என, கனிமொழி பதில் அளித்தார். இதற்கு, இந்திய அளவிலும் வெளிநாடுகளிலும் கனிமொழிக்குபாராட்டுகள் குவிந்தன.இந்தியாவின் தேசிய மொழிக்கான கேள்விக்கு, கனிமொழி பதில் அளிக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. சமூக வலைதளப் பக்கங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்பெயின் மண்ணில், 'இந்தியாவின் தேசிய மொழி, வேற்றுமையில் ஒற்றுமை' என, உரக்கச் சொல்லி, மக்களின் உணர்வுகளை கைதட்டல்களாகவும், அதிகம் பகிரப்படும் வீடியோவாகவும் மாற்றிய கனிமொழியை வாழ்த்துகிறேன். இந்திய நாட்டுக்கான குரலாக, தமிழகத்தின் அன்புமொழியை, ஒற்றுமை மொழியை பேசிய கனிமொழியை கண்டு பெருமை கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

oviya vijay
ஜூன் 05, 2025 21:55

வடக்கன், பானி பூரி, பீடா வாயன் அப்படின்னு சொல்வது தான் வேற்றுமையில் ஒற்றுமை. என்ன இதெல்லம்...


Nesan
ஜூன் 05, 2025 11:37

பாராட்டுவது கனியின் திறமைக்கு அல்ல. கனியை வைத்து கொடுக்கவேண்டியதை கொடுத்து, அனைத்து விஷயத்தையும் மிக சுமுகமாக முடித்துக்கொள்வார். எல்லாம் அரசியல் காசுக்கு மயங்காத மனிதன் உண்டா?. இருந்தார்கள் அந்தக்காலத்தில் காமராஜர், கக்கன், காந்தி... கனி நல்ல ஒரு தூதுவர் மத்திய அரசுக்கு. ED, VD, CD, PEEDI ஒன்னும் இல்லாமல் பண்ணிவிடுவார்கள்


அப்பாவி
ஜூன் 05, 2025 11:17

ரொம்ப பாராட்டாதீங்க. ப்யார் சே ஹிந்தி படோ ந்னு அன்பா திணிப்பாங்க


sivaram
ஜூன் 05, 2025 10:48

சமூக நீதி அப்பா அக்கா ரஷ்யா போய் வந்துட்டாங்க ரொம்ப களைப்பா இருக்காங்க கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும்


ஆரூர் ரங்
ஜூன் 05, 2025 10:22

தாய் வேறாக இருந்தாலும் அதிகாரப்பசி ஆசை வேற்றுமையிலும் ஒற்றுமையை வளர்கிறது. தனக்குப் பிறந்த மகளே அல்ல என கைவிட்டு அவமதித்து கோர்ட்டுக்கு சென்ற வரலாறுகூட மறந்து விடுகிறது.


vbs manian
ஜூன் 05, 2025 10:17

வெளியே ஒற்றுமை பேச்சு. உள்ளே வடக்கு வாழ்கிறது தெற்கு தேகிறது என்று பேசுவார். பீகார் வு பி மாநிலத்தவரை பாணி பூரி புத்திமந்தம் கூலி வேலை என்று இழித்து பேசுவார்கள். காவேரி முல்லை பெரியார் சண்டை. யாரோடும் ஒத்து போகாது.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 05, 2025 09:44

கேள்வி கேட்ட நிருபர் குன்றிய நாட்டை சேர்ந்தவராக இருக்கக்கூடும். ஏற்கனவே குன்றிய நாட்டு தலைவர் ஒருவர் கேள்விகளை அவரே எழுதிக்கொடுத்து அந்த கேள்விகளை மட்டும் நிருபர்களை கேட்க சொல்லுவார் .


sivaram
ஜூன் 05, 2025 09:33

டார்ச் லைட் 6 வருஷம் என்றால் என்ன அர்த்தம் யாராவது புரியும்படி சொல்லுங்கள்


Barakat Ali
ஜூன் 05, 2025 08:47

திமுகவை அபகரிக்க மிகவும் நிதானமாகக் காய்நகர்த்துகிறார்.. சேட்டு துணை நிற்கிறார்... இது துக்ளக்கருக்கும் தெரியும்.. உடன்பிறப்புக்கள் இருவரும் சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஒருவரை ஒருவர் வீழ்த்த .....


ஆரூர் ரங்
ஜூன் 05, 2025 08:37

வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வு இருந்திருந்தால் ஸ்பெயினில் லட்சக்கணக்கான முஸ்லிம்களும் யூதர்களும் கத்தி முனையில் INQUISITION மூலம் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். தவறான இடத்தில் போய் தவறான பெருமை அடித்துக் கொள்கிறார். இங்கும் முகலாய அரசர்கள் கத்தி முனையில் செய்த வேற்றுமை கொடுமைகளை அவர்கள் அறிவார்கள்.


Kulandai kannan
ஜூன் 05, 2025 09:00

அர்த்தமே இல்லாமல் உளறுவதில் திராவிட மாடலுக்கு நிகரில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை