வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பாதுகாப்பா இருக்கவேண்டி தருணம்
இயற்கையை யாரும் கட்டுப்படுத்த முடியாது
தமிழகத்தில் மழை நீர் தேங்கும் பகுதிகளில் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்
சென்னை: மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (நவ.,26) ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நவ.,29ம் தேதி வரை மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.நேற்றைய நிலவரப்படி, இது அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இன்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. சென்னையில் இருத்து 1,050 கி.மீ., தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6rtooqbd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் மேலும் வலுவடைந்து, தமிழகம், இலங்கை கரையை நோக்கி நகரும். இதனால், தமிழகத்தில் இன்று மாலைக்கு பின், மழை படிப்படியாக அதிகரிக்கும். வரும், 29ம் தேதி வரை மிதமான மழை தொடரும். மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (நவ.,26) ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் (நவ.,27) ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.நவ., 27ம் தேதி
ரெட் அலெர்ட்* கடலூர்,* மயிலாடுதுறை,* காரைக்கால் ஆரஞ்சு அலெர்ட்
*நாகை,* திருவாரூர்,* அரியலூர்,* விழுப்புரம்,* தஞ்சை,* புதுக்கோட்டை,மஞ்சள் அலெர்ட்
* சென்னை,* காஞ்சிபுரம்,* செங்கல்பட்டு,* பெரம்பலூர்,* திருச்சி,* கள்ளக்குறிச்சி,* சிவகங்கை,* ராமநாதபுரம்சென்னையில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம். காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், பல்வேறு இடங்களில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.புயல் எச்சரிக்கை
சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பாதுகாப்பா இருக்கவேண்டி தருணம்
இயற்கையை யாரும் கட்டுப்படுத்த முடியாது
தமிழகத்தில் மழை நீர் தேங்கும் பகுதிகளில் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்