வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதெல்லாம் மரபணு மாற்றப்பட்ட வகைகள். கண்ணை மூடிக்கொண்டு சாப்பிட்டால், சுவையைக் கொண்டு அது காரெட்டா, உருளையா, பீட்ரூட்டா எனக் கண்டுபிடிக்க முடியாது. எல்லா காய்கறி வகைகளும் ஒரே சுவையில், சுவையில்லாமல் இருக்கும்.
சென்னை : அமெரிக்கா சென்றுள்ள வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், அங்கிருந்து அதிக மகசூல் தரும் கேரட் விதைகளை கொண்டு வந்து, விவசாயிகளுக்கு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, வேளாண் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், அங்குள்ள விஸ்கான்சின் பல்கலை செயலர் ரெண்டி ரொமன்ஸ்க்கி, பயிர் பாதுகாப்பு மேலாளர் ஜூலி லாஷா உள்ளிட்டோருடன், 23ம் தேதி கலந்துரையாடினார்.திடீரென பரவும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மேலாண்மை குறித்தும் விரிவாக விவாதித்தார். விஸ்கான்சிங் பல்கலையால் அமைக்கப்பட்டுள்ள மேம்பாட்டு நிறுவனம் வாயிலாக, தமிழக விவசாயிகளின் விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்தும் விவாதித்தார். விஸ்கான்சின் மாகாணத்தில், அதிகளவில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய வேளாண் பண்ணைக்கும் சென்றார். அங்கு உருளைக்கிழங்கு, சிவப்பு உருளைக்கிழங்கு, கேரட், புதினா போன்ற பயிர்களின் சாகுபடி முறைகள், நவீன இயந்திரங்களின் பயன்பாடு, செயற்கை நுண்ணறிவு வாயிலாக பயிர் பாதுகாப்பு மேற்கொள்ளுதல், நீர் மேலாண்மை மற்றும் மண்ணின் தரம் போன்றவை பற்றியும் கேட்டறிந்தார். விஸ்கான்சின் மாகாணத்தில், அதிக மகசூல் தரும் கேரட் விதைகளை தமிழகத்திற்கு இறக்குமதி செய்து, விவசாயிகள் அதிக மகசூல் பெற்று, அதன் வாயிலாக வருமானத்தை பெருக்கும் நடவடிக்கைகள் குறித்து, அங்குள்ள அதிகாரிகளுடன் விவாதித்தார். வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டுதல், செயற்கை நுண்ணறிவு வாயிலாக பூச்சி மருந்து தெளிக்கும் முறைகள், ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினார்.அப்போது, தோட்டக்கலைத் துறை இயக்குநர் குமரவேல் பாண்டியன் உடன் இருந்தார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதெல்லாம் மரபணு மாற்றப்பட்ட வகைகள். கண்ணை மூடிக்கொண்டு சாப்பிட்டால், சுவையைக் கொண்டு அது காரெட்டா, உருளையா, பீட்ரூட்டா எனக் கண்டுபிடிக்க முடியாது. எல்லா காய்கறி வகைகளும் ஒரே சுவையில், சுவையில்லாமல் இருக்கும்.