உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் காப்பீட்டை ஏற்கும் மருத்துவமனைகள்: விபரம் அறிய வருகிறது மொபைல் செயலி

முதல்வர் காப்பீட்டை ஏற்கும் மருத்துவமனைகள்: விபரம் அறிய வருகிறது மொபைல் செயலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ், எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில், என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளும் வகையில், மேம்படுத்தப்பட்ட மொபைல் போன் செயலி, விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம், மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், தமிழகத்தில், 1.48 கோடி குடும்பங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கு ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதைத் தவிர, எட்டு உயர் சிகிச்சைகளுக்கு, 22 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.இதில், 942 அரசு, 1,215 தனியார் என, 2,157 மருத்துவமனைகளில், இத்திட்டத்தின் கீழ், 2,053 வகையான பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற முடியும். முதல்வர் மருத்துவ காப்பீடுத் திட்டத்தின் கீழ், அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டாலும், பல தனியார் மருத்துவமனைகளில், இதற்கான சேவை மறுக்கப்படுகிறது.குறிப்பாக, உயிர் காக்கும் பல அறுவை சிகிச்சைகளை, முதல்வர் காப்பீடின் கீழ் செய்ய, தனியார் மருத்துவ மனைகள் முன்வருவதில்லை. இதனால், காப்பீடு திட்ட அட்டை வைத்திருந்தும், முழுமையாக பலனளிக்காத நிலை உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.இதையடுத்து, அரசின் காப்பீடுத் திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கான உரிமைகளை அறிந்து கொள்ளும் வகையில், அந்த விபரங்களை, மொபைல் போன் செயலி வாயிலாக அளிக்க, மக்கள் நல்வாழ்வு துறை முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் எஸ்.வினீத் கூறியதாவது:மேம்படுத்தப்பட்டு வரும் முதல்வர் காப்பீடுத் திட்ட செயலியில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. தகுதியான எவரும், செயலி வாயிலாகவே விண்ணப்பித்து, காப்பீடு அட்டையை, 'டிஜிட்டல்' முறையில் பெறலாம்.அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில், எவையெல்லாம் முதல்வர் காப்பீட்டின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன என்பதை யும் அறிய முடியும். சிகிச்சை விபரங்கள் குறித்தும் தகவல் பெறலாம்.இதைத் தவிர, பயனாளிகள் சிகிச்சை பெறும்போது, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட காப்பீடு தொகை விபரங்களையும் அறியலாம். முதல்வர் காப்பீடு திட்ட சேவைகளில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தும் முயற்சியாக, இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

VSMani
ஜூலை 20, 2025 11:18

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வேலூர் CMC மருத்துவமனை சிகிச்சை அளிக்க மறுக்கிறது.


ஆரூர் ரங்
ஜூலை 20, 2025 07:42

நேரு போன்றவர்கள் நடத்தும் காவிரிகளிலும் இந்த காப்பீட்டுத் திட்டத்தை ஏற்றுக் கொள்வதில்லை.என்கிறார்கள்


SUBBU,MADURAI
ஜூலை 20, 2025 09:01

திமுக ஆட்சிக்கு வந்த புதிதில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் இந்த கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மூலம் பலருக்கும் உயிர் காக்கும் சிகிச்சை அளித்தது உண்மை. அரசு விதிகளின் படி காப்பீட்டு திட்டத்தின் மூலம் தனியார் ஆஸ்பத்திரியில் பயனடைந்த நோயாளியின் மருத்துவ செலவை உடனே அந்தந்த ஆஸ்பத்திரிக்கு கொடுத்து விட வேண்டும் அப்போதுதான் அந்த அரசு காப்பீட்டு திட்டத்தின் மூலம் அடுத்தடுத்து வரும் நோயாளிகளுக்கு தடையின்றி சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் இந்த திருட்டு திமுக திராவிடமாடல் அரசு அவர்களின் குடும்ப ஆஸ்பத்திரிகளுக்கு மட்டும் பணத்தை பட்டுவாடா செய்துவிட்டு தமிழகத்தில் உள்ள மற்ற தனியார் மருத்துவமனைகளுக்கு காப்பீட்டு தொகையை கொடுக்காமல் அவர்களை அலைக்கழித்தது மட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில் மிரட்டவும் ஆரம்பித்து விட்டது இதனால் நொந்து போன தனியார் மருத்துவமனைகள் இந்த கட்டுமர காப்பீட்டு திட்டத்தின் மூலம் இதுவரை நாம் கோடிக் கணக்கில் நஷ்டமடைந்தது போதும் இனிமேலும் நம்மால் இதுபோன்ற நஷ்டத்தை தாங்க முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டதன் விளைவுதான் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்க முன் வருவதில்லை. இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் கருணாநிதி பெயரில் எந்த திட்டம் வந்தாலும் அது உருப்படவே உருப்படாது என்பதுதான்.


Kasimani Baskaran
ஜூலை 20, 2025 07:15

இந்த செயலியை உருவாக்க 10 கோடி செலவு செய்வார்கள் - உண்மையில் 10 லட்சம் கூட செலவாகாது. ஏழு அடி துளை போட்டு அதில் மூன்று பேஸ் மின்சாரம் வழங்குவது போலத்தான் இதுவும் ஒரு ஹை டெக் மோசடி.


மணி
ஜூலை 20, 2025 04:48

மத்திய மாநில அரசு. அட்டைகள எந்த மருத்துவ மனையும் ஏற்பது இல்ல இது சும் மா .


SUBBU,MADURAI
ஜூலை 20, 2025 07:37

நாம் குறிப்பாக எந்த நோய்க்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள இருக்கிறோமோ அந்த சிகிச்சைக்கு இந்தக் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் Eligible இல்லை என்று மூஞ்சியை சீரியஸாக வைத்துக் கொண்டு கூறி விடுவார்கள் மேலும் அவசரமாக பேசுவது போல் மொபைல் போனை எடுத்து காதில் வைத்து நாம் பேசுவதை கேட்காமல் பேச ஆரம்பித்து விடுவார்கள். அப்போதுதான் மேற்கொண்டு இந்த டுபாக்கூர் காப்பீட்டு திட்டம் பற்றி மேலும் துணை கேள்விகளை கேட்க மாட்டோம் என்பது அவர்களின் எண்ணம் பேசி முடிக்கும் வரை பொறுத்திருந்து பார்த்து ஒரு கட்டத்துக்கு மேல் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் கடனை ஒடனை வாங்கியாவது நம்முடைய இந்த நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வோம் என்ற கதையாக நாமே அங்கிருந்து வெளியேறி விடுவோம். இதுதான் இந்த திருட்டு திமுக திராவிடமாடல் அரசின் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் உண்மையான நிலை!


CHELLAKRISHNAN S
ஜூலை 20, 2025 08:30

agree.