உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடுத்த தலைமுறையை காப்பாற்ற முடியாது: சொல்கிறார் எச்.ராஜா

அடுத்த தலைமுறையை காப்பாற்ற முடியாது: சொல்கிறார் எச்.ராஜா

காதல் திருமணம் செய்தவர்களை கொலை செய்வது கண்டிக்கத்தக்கதாகும். திராவிட இயக்கங்களின் வளர்ச்சிக்கு பின் தான் தமிழகத்தின் காதல் திருமணம் செய்பவர்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. கோடிக்கும் மேலான தமிழ் மக்கள் இந்தியா முழுதும் பல்வேறு மாநிலங்களில் ஓட்டளித்து வருகின்றனர். தமிழகத்தில் வசிக்கும் வட மாநில மக்கள் இங்கு வாக்காளர்களாக இருக்க அதிகாரம் உள்ளது. தமிழகத்தில் ஊழல் மற்றும் போதை ஆட்சி நடக்கிறது. தி.மு.க., அரசை அகற்றாவிட்டால் அடுத்த தலைமுறையை காப்பாற்ற முடியாது. கீழடியில் அகழாய்வு நடத்தியது மத்திய தொல்லியல் துறை. கீழடி மத்திய அரசின் பெருமை. மதுரை எம்.பி., வெங்கடேசனின் உறவினரான தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டதால், பிரச்னையை கிளப்புகின்றனர். பா.ஜ., கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டியது மத்திய பார்லிமென்ட் குழு தான். மத்திய தலைமை சொல்வதை செய்வது தான் எங்கள் வேலை - எச்.ராஜா பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ