உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரு தரப்பு குஸ்தியால் ஆட்டம் காணும் அரசு ஊழியர்களின் என்.ஜி.ஓ., சங்கம்

இரு தரப்பு குஸ்தியால் ஆட்டம் காணும் அரசு ஊழியர்களின் என்.ஜி.ஓ., சங்கம்

மதுரை:அரசு அலுவலர் ஒன்றிய அமைப்பின் மாநில அளவிலான தேர்தலில், இருதரப்பினரின் செயல்பாடுகளால் உறுப்பினர்கள் குழப்பத்தில் உள்ளனர். தமிழகத்தில் அரசு துறைகளின் ஊழியர் சங்கங்களில் பிரதானமானது என்.ஜி.ஓ., சங்கம். ஓட்டுப்பதிவு சுதந்திரத்திற்கு முன்பே, 1924 முதல் நுாறாண்டு களைக் கடந்து செயல்படும் இச்சங்கம், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்காக போராடி அவர்களுக்கு உரிமைகள், சலுகைகளை பெற்றுத் தந்துள்ளது. கடந்த காலங்களில் இச்சங்கத்தின் தலைவராக இருந்த சிவ.இளங்கோவைத் தொடர்ந்து, பல்வேறு தலைவர்களின் காலங்களில் தேர்தல் பிரச்னைகள் இருந்தாலும் முறையாக தேர்தல் நடந்துள்ளது. இச்சங்கத்தில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய மாவட்ட அளவில் தேர்தல்கள் நடந்தன. தற்போது, மாநில அளவில் தேர்தல் நடத்துவதில் இருதரப்பாக பிரிந்து செயல்படுவதால் உறுப்பினர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. சங்க மாநில தலைவராக இருந்த துரைப்பாண்டி தரப்பினர், 'ஆக., 29ல் ஓட்டுப்பதிவு நடை பெறும்' என, அறிவித்து உள்ளனர். மற்றொரு பிரிவான அமிர்தகுமார் தரப்பிலான அணியினர், முன்னதாகவே தேர்தலை நடத் தி முடித்து ஆக., 10ல் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் உறுப்பினர்கள் இடையே கு ழப்பம் ஏற்பட்டுள்ளது. மோதல் இந்த சங்கத்திற்கு சென்னையில், பல கோடி ரூபாய் மதிப்பில் அலுவலகம் உள்ளது. சங்க செயல்பாட்டுக்காக தமிழக அரசும் ஆண்டுக்கு, 50,000 ரூபாய் நிதி வழங்குகிறது. இதனால் சங்கத்தை நிர்வகிப்பதில் நிர்வாகிகளிடையே முட்டல் மோதல் ஏற்படுகிறது. அரசின் நிதியுதவி பெறுவதால், சங்கங்களின் நடவடிக்கையை அரசு கண்காணித்து முறையான சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பதே அரசு ஊழியர், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை