உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்துாண்தான்; நில அளவைக்கல் குறித்து ஆதாரங்களுடன் விளக்குகிறார் மதுரை வக்கீல்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்துாண்தான்; நில அளவைக்கல் குறித்து ஆதாரங்களுடன் விளக்குகிறார் மதுரை வக்கீல்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், அது நிலஅளவைக்கல் என்று சிலர் ஆதாரமற்ற பொய்களை கூறிவரும் நிலையில், மதுரை வழக்கறிஞர் தங்கப்பாண்டியன், ஆங்கிலேயர் காலத்து நில அளவைக்கல், தீபத்துாண் போல் இருக்காது' என ஆதாரங்களுடன் விளக்குகிறார்.

நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக ஏற்றும் உச்சிப்பிள்ளையார் கோயில் முன்பாக உள்ள துாணில் அல்லாமல், மலை உச்சியில் உள்ள பாரம்பரியமிக்க தீபத்துாணில் இந்தாண்டு தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் அரசு நிறைவேற்ற மறுக்கிறது. உயர் நீதிமன்ற உத்தரவை மாநில அரசே மதிக்காமல் இருப்பதை இங்கு தான் பார்க்க முடிகிறது.சாமானியர்களின் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை எதிர்காலத்தில் எந்த அளவுக்கு கேள்விக்குறியாக வாய்ப்புள்ளது என்பதற்கு இந்த விவகாரம் ஒரு தவறான முன்னுதாரணம். உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மறுப்பதற்கு கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் தரப்பில் சொல்லப்படும் காரணங்களில் ஒன்று, அது தீபத்துாண் இல்லை; நில அளவை கல் தான் என்பதாகும். நில அளவைக் கல் என்று பேசுவோர் சொல்லும் அந்த அளவையானது மகா முக்கோணவியல் அளவீடு (GREAT TRIGONOMETRICAL SURVEY-GTS) முறை ஆகும். சென்னையில் அளவீடு கல் 'அந்த அளவீட்டில் பயன்படுத்தப்பட்ட அளவைக் கல்லின் எச்சம் தான் திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள கல். அது தீபத்துாண் இல்லை' என்பது கோயில் நிர்வாகத்தின் வாதம். எங்கோ, எவரோ, எழுதியதை, பேசியதை வைத்து அது அளவைக் கல் தான் என்று பேசுவோர் எவருமே GTS அளவைக் கல்லின் எச்சமாக மிச்சமிருக்கும் கல்துாணை இதுவரை பார்த்திராதவர் என்றே அர்த்தம். முக்கோணவியல் அளவீட்டு முறையில் அளவீடு செய்யப்பட்ட அளவைக் கற்களின் எச்சம் தமிழகத்தில் சென்னையை தவிர வேறு எங்குமே இல்லை என்பது அளவியல் துறையின் தகவல். திருப்பரங்குன்றம் மலையானது முக்கோணவியல் அறிவியலில் அளவீடு செய்யப்பட்ட ஒரு புள்ளி என்ற போதிலும், அந்த அளவீட்டில் பயன்படுத்தப்பட்ட அளவைக்கல் தான் மலை உச்சியில் இருக்கும் கல் என்பது சுத்த திராவிடத்தனமான பேச்சு. திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் போல, மதுரை கீழக்குயில்குடியில் உள்ள சமணர் மலை உச்சியிலும் இதே வடிவில் தீபத்துாண் உள்ளது. உண்மையில் சென்னையில் இருந்து தான் மேற்படி அளவீட்டு முறையில் இந்தியாவின் நிலப்பகுதி முழுவதும் அளவீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பரங்கி மலையிலும் மற்றும் மங்களூரு பகுதியை சுற்றி சில இடங்களிலும் மட்டுமே GTS அளவையில் பயன்படுத்தப்பட்ட கற்களின் எச்சங்கள் இன்னும் சில உள்ளன. GTS அளவைக் கல்லில் ஒரே மாதிரி எழுத்துகளுடன் GTS என்ற குறியீடும், அந்த கல்லைப் பற்றிய விபரக் குறிப்பும் காணப்படுகிறது. ஆனால் திருப்பரங்குன்றம் தீபத்துாணில் அப்படி ஏதும் இல்லை. திருப்பரங்குன்றம் மலை, திருமங்கலம் வருவாய் ஆர்.டி.ஓ.,வின்கீழ் வருகிறது. அந்த அலுவலகத்தில் உள்ள பதிவேடுகளை நான் ஆய்வு செய்தபோது நிலஅளவைக்கல் குறித்த எந்த விபரமும் அதில் இல்லை. அப்படி இருந்தால் தமிழக அரசு இந்நேரம் அதை ஆதாரமாக காட்டியிருக்குமே. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

SULLAN
டிச 11, 2025 12:19

இனிக்கும்


N Ravi
டிச 11, 2025 06:07

ஒரு அரசியல்வாதி அதுவும் மேப் ஆதாரமில்லாமல் கூறியதற்கு பகிரங்கமாக பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்பது குடும்பத்துக்குள்ளும் கட்சிக்குள்ளும் வைத்துக்கொள்ள வேண்டும் எல்லாவற்றையும் மலிவான அரசியல் ஆக்கக்கூடாது இறை பக்தி இல்லாவிட்டாலும் பரவாயில்லை அது அவரவர் விதி நாட்டுப்பற்று கண்டிப்பாக இருக்க வேண்டும் பெயர் மட்டும் இருந்தால் பத்தாது குடும்பத்தில் ஒருவராவது வாழ்ந்து காட்ட வேண்டும்


Balu
டிச 10, 2025 22:43

இந்து மக்களின் நம்பிக்கையை வேரறுக்கும் திருட்டு திராவிட கட்சிக்கு உண்மையான எந்த இந்துவும் வரும் தேர்தலில் ஓட்டு போடக் கூடாது


Kamakshi Kamakshi
டிச 10, 2025 19:14

சுவாமிநாதன் அவர்களை அந்த லோக நாதனே காப்பார் வெற்றிவேல் முருகா நீதிபதியை அவதூறு சொல்பவரை நீயே தண்டி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா


Kamakshi Kamakshi
டிச 10, 2025 19:10

தீபத்தூண் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன . நேர்மையான நீதிபதியை முருகன் காப்பார். முருகா உச்ச நீதிமன்றத்தில் நீ விளக்கம் கொடு வெற்றி வேல் முருகன் துணை


Rajagopalan R
டிச 10, 2025 15:39

சில காலத்தில் அது முருகன் கோயில் இல்லை. சிவில் சப்ளை கோடௌன் என்று சொல்லுவார்கள். அதற்கும் ஒரு அரசு துறை இருக்கும்


Ms Mahadevan Mahadevan
டிச 10, 2025 12:38

திராவிடம் பேசுவோர்க்கு பிற மதங்களில் உள்ள பகுத்தறிவுக்கு ஒவ்வாத சடங்குகள், கருத்துக்களை, மூட நம்பிக்கையும் விமர்சிக்கவோ, கண்டிக்கவோ தைரியம் கிடையாது. சும்மா பகுத்தறிவாளர்கள் என்று வேசம் போட்டு கூவும்


V.Mohan
டிச 10, 2025 12:34

சனாதன தர்மத்தின் மீதும், கடவுள் மீதும் நம்பிக்கையற்ற கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் ஒன்றாக சேர்ந்து வேற்று நாட்டிலிருந்து வந்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு ஆதரிக்கும் விதமாக கார்த்திகை தீப விவகாரத்தில் மூக்கை நுழைத்து குழப்ப முயற்சிப்பது அம்மதத்தினர் ஓட்டுக்களை பெறதான் ஒழிய வேறில்லை. இந்த மாதிரி கடவுள் ஒழிக என்பவர்களது ஆதரவு, இறைவனை முழுவதும் நம்பும் உண்மையான இஸ்லாமியர்களுக்கு விருப்பம் தானா?. இவர்கள் நாளை வேறு ஒரு விஷயத்தில் உங்களை கைவிட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்??


Venugopal S
டிச 10, 2025 11:30

இந்த விஷயத்தில் பாஜகவினர் எல்லோருமே தொல்லியல் துறை நிபுணர்கள் ஆகிவிட்டனர்!


சிந்தனை
டிச 10, 2025 10:38

ஹிந்து தர்மத்தையும் ஹிந்து மக்களையும் நிந்தனை செய்து வெறுத்து அபாண்டப் பழி சுமத்தி பேசுபவர்களும் செயல்படுபவர்கள் அனைவரும் நாசமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை