உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மக்களுக்கு மறதி அதிகம்

தமிழக மக்களுக்கு மறதி அதிகம்

மற்ற மாநிலங்களில், அரசு திட்டங்களை, மக்களிடம் ஆட்சியாளர்கள் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றனர். ஆனால், தமிழக மக்களுக்கு மறதி அதிகம். தி.மு.க., செய்யக்கூடிய நல்ல திட்டங்களை எல்லாம் மறந்து விடுவர். அடுத்து என்ன பண்ணவில்லை என்பதைத்தான் கேள்வியாக கேட்பர். தமிழக மக்கள், படித்து பட்டம் பெற்றவர்களாக மாற வேண்டும் என நினைப்பது கேள்வி கேட்பதற்காகத்தான்.வாக்காளர் பட்டியலில் குழப்பங்களை ஏற்படுத்தி பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும். வாக்காளர் பட்டியல் தான், நம் வெற்றிக்கான முதல் படி என்பதை தி.மு.க.,வினர் நினைவில் வைத்து செயல்பட வேண்டும்.- கனிமொழி, எம்.பி., - தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தலை ஆட்டி பொம்மை
ஜூலை 10, 2025 20:46

ஹும் என்ன செய்வது...அதுதான் 70 வருஷமா ஆரியன் வடக்கன் ஹிந்தி திணிப்பு ஹிந்தி எதிர்ப்பு மதசார்பின்மை, சனாதன ஒழிப்பு, திராவிட தனி நாடு, ராவணன் திராவிடன், ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் அப்படின்னு எல்லாம் கம்பி கட்டும் கதை, கவிதைகள் புனைவு....


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 10, 2025 10:33

தமிழக மக்களுக்கு மறதி அதிகம் தான் ..உண்மையைத்தான் கனிமொழி அக்கா சொல்லி இருக்கிறார் .


Kjp
ஜூலை 10, 2025 09:30

நீங்கள் சொன்னதை மக்கள் மறந்து விட்டீர்களா.அதிமுக ஆட்சியின் போது நீங்கள் சொன்னதை ஞாபகம் இருக்கிறதா.இளம் விதவைகள் பெருகி கொண்டு இருக்கிறார்கள்.திமுக ஆட்சிக்கு வந்ததும் மது ஆலைகளை மூடு வோம்.மது விலக்கு ரத்து முதல் கையெழுத்து என்றெல்லாம் சொன்னது என்ன ஆச்சு .


Lakshminarasimhan
ஜூலை 10, 2025 07:56

உண்மை தான் தமிழக மக்களுக்கு மறதி என்பது உண்டு ஒவ்வொரு திட்டத்திலும் திமுக செய்யும் ஊழலையும் மறந்து மக்கள் திமுகவுக்கு மீண்டும் மீண்டும் வாக்கு அளிக்கின்றார்களே


உ.பி
ஜூலை 10, 2025 06:14

அதனால தான் நீங்க திரும்ப திரும்ப ஆட்சி பண்ண முடியுது