உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனியாரிடம் மின்சாரம் வாங்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: பா.ஜ.,

தனியாரிடம் மின்சாரம் வாங்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: பா.ஜ.,

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ஆட்சி அமைக்கும் முன் , 'தனியாரிடம் மின்சாரம் வாங்குவதை குறைத்து, மாசற்ற மின் உற்பத்தி நிலையங்கள் வாயிலாக, 20,000 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு, குறைந்த விலையில் மின்சாரம் வழங்கப்படும்' என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், அதற்கு நேர்மாறாக, மின் வாரியத்தை நஷ்டத்தில் தள்ளி, தனியாரிடம் இருந்து மின்சாரத்தை வாங்கி, மக்கள் மீது, நிதிச்சுமையை ஏற்றி வருகிறது. இப்படி கூடுதல் விலைக்கு , தனியாரிடம் மின்சாரம் வாங்குவது கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும். எனவே, தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தை கை விட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை