உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவங்களுக்கு மட்டும் தான் பதவி; நிரூபணம் செய்தது இந்த நியமனம்: எச்.ராஜா விமர்சனம்

அவங்களுக்கு மட்டும் தான் பதவி; நிரூபணம் செய்தது இந்த நியமனம்: எச்.ராஜா விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காரைக்குடி: 'தி.மு.க.,வில் கருணாநிதி குடும்பத்திற்கும், ஹிந்து விரோதிகளுக்கும் தான் தலைமை பொறுப்பு என்பது உதயநிதி துணை முதல்வர் ஆனதன் மூலம் நிரூபணமாகி உள்ளது' என பா.ஜ., ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச். ராஜா தெரிவித்தார்.காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: துணை முதல்வர் பில்டப் ரொம்ப நாளாகவே நடந்தது. கருணாநிதி குடும்பத்தை தவிர தி.மு.க., தலைமை பொறுப்பு யாருக்கும் கிடையாது என்பதை பிரகனப்படுத்துகின்ற விஷயம் தான் உதயநிதி துணை முதல்வர் ஆவது. தி.மு.க.,வில் 60 ஆண்டு, 70 ஆண்டு பணியாற்றியவர்களுக்கு தலைமை பொறுப்பில் இடம் கிடையாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9kpnfc0t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதை உறுதிப்படுத்துவதற்காக தான் இந்த துணை முதல்வர் பொறுப்பு. முத்தமிழ் கடவுள் முருகன் மாநாடு என்று விளம்பரப்படுத்திவிட்டு, பழநியில் உதயநிதி பேசும்போது இது ஆன்மிக மாநாடு இல்லை என்று பேசினார். இவர்கள் முருகனையும் ஏற்றுக்கொள்ளவில்லை ஹிந்து மதத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. தி.மு.க., தொண்டர்களுக்கு இவர்கள் சொல்லும் செய்தி என்னவென்றால், உங்களுக்கெல்லாம் வேலை இல்லை; வெளியில் நில்லுங்கள் என்பதுதான். கே.என்.நேரு அடிக்கடி பெருமாள் கோவில் செல்வார். அவருக்கு முக்கியத்துவம் இல்லை; அவர் ஆன்மிகவாதி. தி.மு.க.,வில் ஹிந்து விரோதிகளுக்கு மட்டும் தான் தலைமை. செந்தில் பாலாஜி கண்டிஷன் பெயிலில் வெளியே வந்துள்ளார். நான் வேலைக்கு பணம் வாங்கினேன் என்று அவரே ஒப்புக் கொண்டார். கண்டிப்பாக இவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவார். இடைக்காலத்தில் வெளிக் காற்றை சுவாசித்து கொள்ள வெளியே விட்டுள்ளனர். இதில், கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை. குளித்தலையில் தேர்தலுக்கு முன்பாக செந்தில் பாலாஜி மிகப்பெரிய ஊழல்வாதி என்று ஸ்டாலின் சொன்னார். தி.மு.க., ஆட்சிக்கு வரும் போது செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார் என்று சொன்னார். ஸ்டாலின் சொன்னது போல் இன்று ஜெயிலுக்கு சென்றுள்ளார்; அவரை ஸ்டாலின் இன்று தியாகி என்கிறார். அது என்ன வாய் இது என்ன வாய் என்று தெரியவில்லை. பா.ஜ.,விற்கு பி டீம் தேவையில்லை. நாங்கள் ஒரே டீம்தான். மோடி டீம் தான். சமீப காலமாக என்கவுன்டர் மட்டுமல்ல; காவல்துறை கஸ்டடி இறப்பும் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் படுகொலைகள் நடக்கிறது. திராவிட .அரசியலில் முக்கியத்துவம் பெறப்பெற மக்களிடம் ஒழுக்கம் நெறிமுறைகள் கெட்டுப் போய்விடும் என்பதற்கு இன்று தமிழ்நாடு உதாரணம்.இவ்வாறு ராஜா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Lion Drsekar
செப் 29, 2024 21:20

தயவு செய்து நீங்கள் எல்லோரும் விடுமுறைஎடுத்துக்கொண்டால் லண்டன் செல்ல்லுங்கள் அல்லது ஆளுநராக செல்லுங்கள், பல ஆண்டுகளாக இதனை கோடி ஊழல் நாளை கைது , இன்று கைது , இதனை கோடி ஊழல் என்றெல்லாம் கதை சொல்லிவிட்டு இப்போது 15 நிமிடத்துக்குப் பதிலாக 45 நிமிடம் சந்திப்புக்கு, ஒரு நடவடிக்கையும் இல்லை, எதற்க்காக மக்களை ஏமாற்றுகிறீர்கள், ஏமாற்றியது போதும்,


Suhana space research organization
செப் 29, 2024 21:12

2 மாற்றங்கள் செய்தால் போதும் நாட்டின் ஊழல் மற்றும் வறுமை ஒழிக்கலாம், அல்லது 3 திட்டங்கள் மக்களுக்காக செயல் படுத்தினால் போதும் அனைத்தும் மாறும்,,,, இது அனைத்திற்கும் 1 மணி நேரம் போதும் மாற்றலாம்


அப்பாவி
செப் 29, 2024 20:48

மேக் இன் இந்தியா பாலுசி. ஏர் இந்தியா மாதிரி வெளிநாட்டு ஆளை வேலைக்கு சேர்க்கவில்லை.


saravanan
செப் 29, 2024 19:30

குடும்ப அரசியல் கொடி கட்டி பறக்கும் திமுகவிலே வேறு யாராவது உரிமை கீதம் பாடிவிட முடியுமா என்ன? ஒரு காலத்தில் ஒரு தேசிய கட்சியின் வாரிசு அரசியலை எதிர்த்து முழக்கமிட்டவர்கள் இப்போது அதே பாணியை பின்பற்றி ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணாக செயல்படுவது நகைமுரண் எதற்காகவோ எல்லாம் புரட்சி கவிஞரின் வரிகளை மேற்கோள் காட்டும் திராவிட அரசியலில் அவர் எழுதிய "தன் பெண்டு தன் பிள்ளை....." போன்ற வரிகளையும் நினைவிற் கொள்வது நல்லது


pattikkaattaan
செப் 29, 2024 18:52

நீங்க இதுக்கும் பதில் சொல்லிடுங்க. மத்திய அரசில் ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு தேர்தலில் நிற்காமலேயே மீண்டும் மீண்டும் அமைச்சர் பதவி கொடுப்பது ஏன்?


Madhavan
செப் 29, 2024 21:45

நீங்களும் இதற்கு பதில் சொல்லிடுங்க ... எலக்சனில் நின்று ஜெயித்த அனைவர்க்கும் மந்திரி பதவி கிடைத்து விடுகிறதா? துணை முதல்வர் பதவிதான் கிடைத்து விடுகிறதா? பார்லிமென்ட் என்பது லோக் சபை, ராஜ்ய சபை இரண்டும் சேர்ந்தது. மக்களால் லோக் சபைக்கு தேர்ந்தெடுப்பவர்கள்தான் மந்திரிகள் ஆக வேண்டும் என சட்டத்தில் விதி எதுவும் இல்லை மேலும் ராஜ்ய சபை உறுப்பினர்கள் நேரிடையாக மக்களால் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை. லோக்சபையில் உள்ள அரசியல் கட்சிகளின் விகிதப்படி ராஜ்ய சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை அந்தந்த அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படுகிறது. தவிரவும் குறிப்பிட்ட துறையில் சாதனை புரிந்த சிலருக்கு ஜனாதிபதி மூலம் ராஜ்ய சபை உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறது.......... உதாரணம் சச்சின் டெண்டுல்கர். மத்தியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியில் படித்த, திறமையான நபர்களுக்கு மந்திரி பதவியை அளிக்கின்றன. அவர்கள் ராஜ்ய சபா உறுப்பினர் பதவி மூலம் மந்திரியாகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே ஒருவர் இந்நாட்டின் பிரதம மந்திரியாகவே குப்பை கொட்டியிருக்கிறார்.இதையும் ஒத்துக் கொள்ளுங்கள்.


ஆரூர் ரங்
செப் 29, 2024 22:12

மன்மோகன் எந்தத் தேர்தலிலும் வெல்லாமல் 2 முறை பிரதமராக ஆனார் . இந்திரா கூட முதல் தடவை பிரதமராக ஆனது நியமன எம்பி யாகத்தான்.


சாண்டில்யன்
செப் 29, 2024 17:18

கலைஞரின் பேமிலி பென்ஷனைத்தான் இவர்கள் வாங்குகிறார்கள் ஐம்பது ஆண்டுகள் கட்சித் தலைவராயிருந்து கட்டிக்க காத்துள்ளார் ஆயுள் முழுதும் இந்த நாட்டுக்காக உழைத்துள்ளார் எல்லாவற்றையும் விட பெண்களுக்கான, ஏழை மக்களுக்கான சட்டங்களை தந்துள்ளார் அதன் பலனை பலரும் பெறுகிறார்களே இதில் எதுவும் செய்துவிடாமேலே சிலர் தேர்தல் நிதியில் ஐந்து கோடியில் மாளிகை கட்டிக் கொள்கிறார்களே


வைகுண்டேஸ்வரன்
செப் 29, 2024 17:17

எச் ராஜா மாதிரி ஆட்கள் தான், தமிழ் நாட்டில் பிஜேபி யை தலை தூக்க விடாமல் வைத்திருக்கிறவர்கள். வாயைத் திறந்தாலே மதம், மதம், மதம் தான். அதான் மதம் சார்ந்த அரசியல் இங்கே எடுப்படவில்லை என்று தெரிந்து விட்டதே, வேற ஏதாச்சும் பேசிப் பார்க்கக் கூடாதா? இந்த 3 ஆண்டுகளில் 1400 கோவில்களில் திமுக அரசு குடமுழுக்கு நடத்தியதை மக்கள் அறிவார்கள். 18 ஆண்டுகள் ஓடாத சிவகங்கை ஸ்வர்ண மூர்த்தீஸ்வரர் ஆலய தேர்திருவிழா நடத்தியவர் ஸ்டாலின். எச் ராஜா வுக்கு தெரியலைன்னாலும், தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியும். திமுக அரசு இந்து விரோத அரசு அல்ல என்றும் தெரிகிறது. பிஜேபி இங்க வளராம எச் ராஜா பாத்துக்கறார். நன்றி.


Indian
செப் 29, 2024 17:10

ஐயா ராஜா அவர்களே ஒரு சாதாரண அசோசிியேேன் எலக்க்ஷனில் கூட உம்மால் ஜெயிக்க முடியவில்லை உமக்கு ஏன் இந்த பில்டப்


K.SANTHANAM
செப் 29, 2024 16:01

கலைஞர் கூற்றுப்படி திமுக என்ற சங்கர மடத்திற்கு அடுத்த பீடாதிபதி..


Sakthi Sakthiscoops
செப் 29, 2024 15:18

அவலங்களுக்கு மட்டும் தான் பதவி நிரூபணம் செய்தது இந்த நியமனம்:என படித்து விட்டேன்..பொருந்துகிறதோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை