உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் சவரன் விலை ரூ.75 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.75,040!

தங்கம் சவரன் விலை ரூ.75 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.75,040!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.75,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 9180 ரூபாய்க்கும், சவரன், 73,440 ரூபாய்க்கும் விற்பனையானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f9eqf9tp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 105 ரூபாய் உயர்ந்து, 9285 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 840 ரூபாய் அதிகரித்து, 74,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஜூலை 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 95 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,380க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை புதிய உச்சமாக ரூ. 75 ஆயிரத்தை கடந்து, நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
ஜூலை 23, 2025 16:07

என்ன மெடல் குத்தலாம்?


A.Gomathinayagam
ஜூலை 23, 2025 14:02

நகை கடன்களுக்கு அதிக பணம் கிடைக்கும்


Karthik Madeshwaran
ஜூலை 23, 2025 10:29

ஆடி மாதத்தில் முகூர்த்த நாட்கள் இல்லை. நகை கடைகளில் அதனால் தான் ஆடி ஆப்பர் போடுவார்கள். இது முழுக்க முழுக்க இன்ஸ்டிடூஷன்ஸ் trap. யாரும் இப்போது தங்கம் வாங்க வேண்டாம். கண்டிப்பாக அடுத்த இரண்டு மாதங்களில் குறிப்பாக செப்டெம்பர் மூன்றாம் வாரம் - தங்கம் 70000 க்கு அல்லது அதற்கு கீழ் போகும். அப்போது வாங்கி கொள்ளுங்கள். அதற்கு பிறகு தீபாவளி சமயத்தில் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிவிடும். கண்டிப்பாக 2026 இல் 1 லட்சம் தொட்டு விடும். சில நேரங்களில் எந்த வேலையும் செய்யாமல் சும்மா- பொறுமையாக இருந்தாலே மார்க்கட்டில் நமக்கான லாபம் கிடைக்கும். புத்திசாலிகளுக்கு புரியும்.


திகழ்ஓவியன்
ஜூலை 23, 2025 10:23

மோடி ஆட்சியில் இது சகஜமே


புதிய வீடியோ