வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வருடாவருடம் டார்கெட் தேதியை தள்ளிக் கிட்டே இருப்பது
மேலும் செய்திகள்
இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்துக்கே ஒரு பாடம்!
13-May-2025
சிங்கம்புணரி:''இந்தியாவை 2047 ல் நீடித்த, நிலையான வளர்ச்சி மூலம் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்,'' என, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஸ்ரீசேவுகமூர்த்தி கோசாலை டிரஸ்ட் நடத்திய 108 கோ பூஜை விழாவில் பங்கேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.அவர் பேசியதாவது: தமிழகம் ஆன்மிகம், வீரம் நிறைந்த பூமி. சிவன் மற்றும் பெருமாளை வணங்கிய பூமி. பிரிட்டிஷ்காரருக்கு எதிராக போரிட்ட வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள் வாழ்ந்த இடம். ஜம்பு தீவு பிரகடனம் மூலம் வெள்ளையனை வெளியேற்றுவோம் என மருது சகோதரர்கள் சூளுரைத்தனர். நாட்டில் 1801 மற்றும் 1806 ம் ஆண்டு வேலுார் போர் ஏற்பட்டது. அன்றைக்கு நம்மிடம் ஏற்பட்ட கனல் தான் 1947 ல் நாடு சுதந்திரம் அடைந்து நம்மை சுதந்திர பறவைகளாக மாற்றியது.சமீபத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீர் மாநிலம் பகல்ஹாமில் அப்பாவி சுற்றுலா பயணிகளை சுட்டு வீழ்த்தினர். நாம் அதற்கு பதிலடி தரும் விதத்தில் ‛ஆப்பரேஷன் சிந்துார்' பெயரில் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் கூடாரத்தை அழித்தோம். அந்த நாடு இந்தியா மீது ‛ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தினர். அந்த ‛ட்ரோன்களை' அழித்து, தாக்குதலை முறியடித்தோம். இதற்காக முப்படை வீரர்களை பாராட்டுகிறேன். ஆழ்வார், நாயன்மார்கள் கோசாலை பற்றி உயர்வாக பேசியுள்ளனர். அதை நினைவூட்டும் விதமாக சிங்கம்புணரியில் கோசாலை புனித சேவையை ஆற்றி வருகிறது. விவசாய நிலங்களை காப்போம்:
பிரதமர் மோடி, நாடு நீடித்த நிலையான வளர்ச்சி காண அக்கறையுடன் செயல்படுகிறார். இதில் அடிப்படையானது ஒவ்வொரு மனிதருக்கும் சிறந்த உணவளிப்பது தான். அந்த உணவு பொருட்களை விவசாயிகள் விளைவிக்கின்றனர். உணவு தரும் நிலங்களை மலடாக்காமல், பசு எப்படி நமக்கு பால், சாணம், கோமியம் தருகிறதோ, அதே போன்று உணவு பொருட்களை தரும் விவசாய நிலத்தை பாதுகாக்க வேண்டும். 2047 ல் முழு வளர்ச்சி தான் இலக்கு:
2014 ல் பொருளாதார வளர்ச்சி இன்றி ஏழை நாடாக இந்தியா இருந்தது. பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால நிர்வாக திறனால், உலகளவில் பொருளாதார வளர்ச்சியில் 4 வது இடத்திற்கு வளர்ந்துள்ளோம். இயற்கை விவசாயத்தை ஆதரித்து உணவு, சிறுதானிய உற்பத்தி மூலம் நீடித்த நிலையான வளர்ச்சி காண்கிறோம். 11 ஆண்டுக்கு முன் இந்தியாவிற்கு பிற நாடுகள் உதவி செய்ய முன்வரவில்லை. இன்றைக்கு இந்தியாவின் வளர்ச்சியை பிற நாடுகள் உற்று நோக்குகிறது. நம் மீது பிற நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளது. நம்மை பிற நாடுகள் புறக்கணிக்காமல் பின்பற்றி வருகிறது என்றார்.
வருடாவருடம் டார்கெட் தேதியை தள்ளிக் கிட்டே இருப்பது
13-May-2025