உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஜால்ரா சங்கத்தால் பிரச்னை தீராது

 ஜால்ரா சங்கத்தால் பிரச்னை தீராது

விழுப்புரம்: விழுப்புரத்தில் நேற்று நடந்த தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க போராட்டத்தில் பங்கேற்ற, அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பால சுப்ரமணியன் கூறியதாவது: பழைய ஓய்வூதிய திட்டம் தான் சிறந்தது. தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள திட்டம் மிக மோசமானது. தமிழக முதல்வர், அதைப்பற்றி கவலைப்படாமல், எதை செய்தால் ஓட்டு கிடைக்கும் என்று ஆராய்ச்சி செய்து, ஓட்டு வங்கி அரசியலுக்காக திட்டங்களை அறிவிக்கிறார். போராடுபவர்களை அழைத்து பேசுவதாக பொய் சொல்கின்றனர். உண்மையாக போராடுபவர்களை அழைத்து பேசவில்லை. போராடிய அரசு பணியாளர் சங்கத்தை அழைக்கவில்லை. 'ஜால்ரா' போடுபவர்களை அழைத்து பேசினால் பிரச்னை எப்படி தீரும்? இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை