கவர்னர் மாளிகை கொலு பொதுமக்கள் பார்க்கலாம்
சென்னை:கவர்னர் மாளிகையில் நடக்கும் நவராத்திரி கொலு நிகழ்ச்சியில் பங்கேற்க, மாணவ -- மாணவியருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.இதுகுறித்து, கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், அக்., 3ல் கவர்னர் ரவி, நவராத்திரி கொலுவை துவக்கி வைக்க உள்ளார்; 12ம் தேதி வரை நடக்கிறது. தினமும் மாலை 4:00 முதல் 5:00 மணி வரை வழிபாட்டு நிகழ்ச்சிகளும், மாலை 5:00 முதல் 6:00 மணி வரை கலாசாரக் கொண்டாட்டங்களும் நடக்கும். இவற்றில், தனி நபர்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்கலாம். ஆர்வமுள்ள தனி நபர்கள், கல்வி நிறுவனங்கள், வரும் 30ம் தேதிக்குள், tn.gov.inஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். பங்கேற்போரின் பெயர், வயது, பாலினம், முகவரி, மொபைல் போன் எண், வருகை தரும் தேதி, புகைப்பட அடையாளச் சான்று உள்ளிட்ட விபரங்களை இணைக்க வேண்டும். முதலில் விண்ணப்பிப்போருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், 150 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். அனுமதிக்கும் தேதியில், அனுமதி நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன், உரிய ஆவணங்களுடன் வர வேண்டும். அசல் பாஸ்போர்ட் வைத்துள்ள வெளிநாட்டினரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.