உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொட்டி தீர்த்தது மழை; சென்னையில் ஏரிகளின் நீர்மட்டம் விர்ர்...! இன்றைய நிலவரம் இதோ!

கொட்டி தீர்த்தது மழை; சென்னையில் ஏரிகளின் நீர்மட்டம் விர்ர்...! இன்றைய நிலவரம் இதோ!

சென்னை: கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்தது.வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழை பெய்து வருகிறது. அதனால் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இதோ ஏரிகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்:* மொத்தம் 35 அடி கொண்ட பூண்டி ஏரிக்கு 8,560 கன அடி நீர் வந்து கொண்ட இருக்கிறது. தற்போது 3,231 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்மட்டம் 34.95 அடி உள்ளது.* 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரிக்கு 653 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. தற்போது 2,920 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்மட்டம் 19.72 அடி உள்ளது* 18.86 அடி கொண்ட சோழவரம் ஏரிக்கு 209 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. 321 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்மட்டம் 7.76 அடி உள்ளது.* 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2,240 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. 3,056 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியில் இருந்து, 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 22.96 அடி உள்ளது.* 36.61 அடி கொண்ட தேர்வாய் கண்டிகையில் 369 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்மட்டம் 31.89 அடி உள்ளது.* 8.50 அடி கொண்ட வீராணம் ஏரிக்கு 3,563 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. தற்போது, 988 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Dharmavaan
டிச 15, 2024 21:01

எல்லா ஏரிகளும் தூர்ந்து விட்டன கொள்ளளவு குறைந்துவிட்டது .இந்த செய்திகள் ஏமாற்று பேச்சு


sundarsvpr
டிச 15, 2024 11:07

ஏரிகளில் நீர் மட்டம் உயர்வது நல்லது. ஆனால் வீடுகளில் மற்றும் நிலங்களில் உள்ள கிணறுகளில் உள்ள நீர் இருப்பு விபரம் ஏன் செய்தியாய் வருவதில்லை. கிணறுகளில் நீர் இருப்பு இருப்பின் குழாய் நீர் தேவை குறையும்.


Natarajan Ramanathan
டிச 15, 2024 09:53

எல்லா ஊடகங்களும் இப்படி அபத்தமாகத்தான் செய்தி வெளியிடுகிறார்கள். நீர் நிலைகளின் மொத்த கொள்ளளவு எவ்வளவு தற்போதைய இருப்பு எவ்வளவு சதவீதம் என்ற கணக்குதான் முக்கியம். அதை சொல்லாதவரை இந்த செய்தியே வீண்தான்.


சமீபத்திய செய்தி