உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிண்டி மருத்துவமனையில் வாலிபர் உயிரிழப்பு; டாக்டர்கள் பணி புறக்கணிப்பே காரணம் என புகார்

கிண்டி மருத்துவமனையில் வாலிபர் உயிரிழப்பு; டாக்டர்கள் பணி புறக்கணிப்பே காரணம் என புகார்

சென்னை : கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் டாக்டர்கள் போராட்டம் காரணமாக, சிகிச்சை அனுமதிக்கப்பட்ட வாலிபர் இறந்ததால், அவரது உடலை வாங்கி மறுத்துஉறவினர்கள் போராட்டம் நடத்தினர்.சென்னை, பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் விக்னேஷ்,33;கடந்த 13ம் தேதி இரவுவயிற்று வலி காரணமாக,கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை இறந்தார்.இரண்டு நாட்களுக்கு முன், சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, அதே மருத்துவமனை டாக்டர் பாலாஜியை, நோயாளி ஒருவரின் மகன், கத்தியால் குத்தினார். பலத்த காயத்துடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதை கண்டித்து, டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.விக்னேஷ் உயிரிழப்புக்கு டாக்டர்கள் பணியில் இல்லாததும், முறையான சிகிச்சை அளிக்காததும் தான் காரணம் என, அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். பின், அவரது உடலை பெற மறுத்து, மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர பேச்சுக்கு பின், நேற்று பிற்பகல் விக்னேஷின் உடலை, அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

S.kausalya
நவ 16, 2024 07:40

ஒரு மனிதன் அரசு மருத்துவ மனையில் உயிர் இறந்தது மிகவும் துயரமான ஒன்று தான். உரிய சி‌கி‌ச்சை,சரியான சி‌கி‌ச்சை இதெல்லாம் நாம் சொல்ல முடியுமா? மருத்துவம் படித்த அவர்களின் செயல் குறி்த்து அறிந்தவர் தான் சொல்ல முடியுமா ? பொத்தாம்பொதுவாக பே‌சினா‌ல் நஷ்டம் நமக்கு தான். அவர்கள் அரசு அலுவலர்கள் மாத சம்பளம் கிடைத்து விடும்.


S.kausalya
நவ 16, 2024 07:35

மருத்துவரை கத்தியால் குத்துவீங்க. அவங்க உங்களுக்கு வேணும்போது சி‌கி‌ச்சை செய்து உயிரை காப்பாற்றுவார்கள்? . அவர்களுக்கும் உயிர் பயம் உண்டல்லவா? இப்போது நஷ்டம் யாருக்கு? முதலவர் உங்களை வந்து பார்த்தாரா? மந்திரி மருத்துவரை தானே பார்த்தார். உங்களின் ஓட்டு வங்கி தான் பெரிது. ஆனால் தேர்தலின் போது தரும் இலவசம்,வாக்குறுதியில் நீங்கள் அவர்களுக்கு மீண்டும் ஓட்டு போட்டு ஆட்சியில் அமர வைப்பீர்கள் என அவர்களுக்கு தெரியும்.தேர்தல் சமயத்தில் உங்களை பார்த்தால் போதும். ஆனால் மருத்துவர்கள் அப்படி இல்லை. தற்போது அவர்கள் போராட்டம் செய்தால் நிலமை மோசமாகி விடும். எனவே தற்போது மருத்துவர்கள் பக்கம் தான் அரசு. ஆனால் அது தான் நியாயமும் கூட. எத்தனையோ ஏ ழை களை காப்பாற்றி உள்ளனர் இந்த அரசு மருத்துவர்கள். அதையும் நாம் கேட்டு தானே வருகிறோம்


hariputhran.p puthuppattar
நவ 16, 2024 06:25

சுகாதாரத்துறை மட்டுமா சரியில்லை?...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை