உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரசாரத்தில் வெடித்த குமுறல்: தி.மு.க.,வினர் கடும் அதிர்ச்சி

பிரசாரத்தில் வெடித்த குமுறல்: தி.மு.க.,வினர் கடும் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க.,வினர் மாநகராட்சியின், 6, 7, 15வது வார்டுக்கு உட்பட்ட அன்னை சத்யா நகர், அஜந்தா நகர், வி.ஜி.பி.நகர், பழனியப்பா நகர் பகுதிகளில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் நேற்று பிரசாரம் செய்தனர்.பவானி சாலை லட்சுமி தியேட்டர் அருகே பாலத்தை ஒட்டிய பகுதியில் ஓட்டு சேகரித்தபோது, அங்கிருந்த சிலர், 'பாலம், சாலைக்காக தங்கள் வீட்டை இடித்துவிட்டு, புதிதாக கட்டித் தருவதாக உறுதியளித்தனர். இதுவரை வீடு கட்டித்தரவில்லை' என்றனர். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தோர், 'வீட்டை இடித்ததால் மூன்று பெண் குழந்தை, மூதாட்டியுடன் செங்கல் வீட்டில் வசிக்கிறோம். கடந்த தேர்தலுக்கு இங்கு வந்தபின் தற்போதுதான் வந்துள்ளீர்கள்' என குமுறினர்.மாநகர செயலர் சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள், 'செய்து கொடுத்து விடுவோம். கொஞ்சம் தாமதமாகி விட்டது' என அவ்வீட்டினரை சமாதானம் செய்து, அமைச்சரை திசை திருப்பி விட்டனர். இதேபோல் பல இடங்களிலும் மக்களின் குமுறல் வெடிக்க, தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

N Annamalai
ஜன 20, 2025 16:10

நாம் தமிழர் வெற்றி பெற்று விடுவார்களோ ?.


vadivelu
ஜன 20, 2025 20:42

வாய்ப்பு இல்லை, ஆனாலும் தி மு க எதிர்ப்பு வாக்குகள் நா தாமிழர் கட்சி பெற்று தன வாக்கு விகிதத்தை அண்ணா தி மு கவை விட அதிகமாக்கும்


CBE CTZN
ஜன 20, 2025 11:59

அதிர்ச்சி எல்லாம் ஒன்னும் இல்ல... எப்படியும் காச வாங்கிட்டு ஓட்டு போடத்தான் போறாங்க... இவங்களும் திருந்த போறது இல்ல... அதனால மக்களே, காசு வாங்குங்க, அதே சமயம் ஒருவருஷத்துக்கு ஒரு ஓட்டுக்கு ஒரு லட்சம்ம்னு, மீதம் இருக்குற ஓன்னே கால் வருஷத்துக்கு ஒரு லட்சத்தி இருபத்தைந்தாயிரம் கணக்கா போட்டு வீட்டுல இருக்குற நாலு பேருக்கும் அஞ்சு லட்ச்சம் வாங்குங்க... மூணு சத்தம் ஜீ எஸ் டி சேர்த்து வாங்கிட்டு ஒட்டு போடுங்க,..


xyzabc
ஜன 20, 2025 11:51

ரூ 200, மது கொடுக்கும் போது மக்கள் மதி மறந்து தி மு க விற்கே வோட்டை போடுவார்கள். இதெல்லாம் பிரச்சனையே இல்லை.


rama adhavan
ஜன 20, 2025 11:25

அதனால என்ன? இவர்கள் சிறு குழுக்கள் தான். காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுபவர்கள் தான் அதிகம். அதனால் திமுக தான் வெல்லும்.


Naga Subramanian
ஜன 20, 2025 10:16

"ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்" என்ற திராவிட கோட்பாட்டிற்கு அடிபணிந்து சென்றதால் வந்த வினை இது.


Shekar
ஜன 20, 2025 09:49

அட போங்கய்யா...இத போயி பெருசா எடுத்துக்கிட்டு, ஒட்டு போடுற நாளுக்கும் முந்தினநாளுக்கும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு பிரியாணி பொட்டலத்தை கையில் கொடுத்து, குடும்ப தலைவருக்கு ஒரு கட்டிங் சேர்த்து கொடுத்தால் அவங்க மனசும் வயிறும் நிறைஞ்சி நமக்கே ஓட்டு போடுவாங்க


Haja Kuthubdeen
ஜன 20, 2025 09:36

அதிர்ச்சியாவது மண்ணாங்கட்டியாவது...வரிசையில் நின்னு சூரியணுக்கு குத்தோ குத்துனு குத்துவாய்ங்க...


Sampath Kumar
ஜன 20, 2025 09:20

கொளுத்தி போடுவோம் காசா பணமா


Ganesun Iyer
ஜன 21, 2025 03:09

வாக்குறுதிதானே... சும்மா அடிச்சி விடு.. அப்படிதானே சம்பத்து...


SIVA
ஜன 20, 2025 08:44

எல்லாம் எலெக்ஷன் அப்பயும் நியூஸ் இப்படி தான் வருது ஆனால் ரிசல்ட் என்னோவோ திமுக ஜெயிக்குது , மக்கள் கிட்ட ஆரம்பம் நல்ல தான் இருக்கு ஆனால் பினிஷிங் சரி இல்லை .....


Barakat Ali
ஜன 20, 2025 08:39

ஒரு அதிர்ச்சியும் இல்ல ........ தேர்தலை முன்னிட்டு நல்லா கவனிச்சுட்டா மக்கள் ஆஃப் ஆயிடுவாங்க .....


புதிய வீடியோ