உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் திறந்த சங்ககிரி பஸ் ஸ்டாண்ட் லாரிகள் நிறுத்தும் இடமாக மாறிய அவலம்

ஸ்டாலின் திறந்த சங்ககிரி பஸ் ஸ்டாண்ட் லாரிகள் நிறுத்தும் இடமாக மாறிய அவலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சங்ககிரி: சங்ககிரி புது பஸ் ஸ்டாண்டை, துணை முதல்வராக இருந்தபோது ஸ்டாலின் திறந்து வைத்தார். தற்போது அவர், முதல்வராக உள்ள நிலையில், பஸ் ஸ்டாண்ட் திறந்து, 16 ஆண்டாகியும், இன்னமும் பயன்பாட்டுக்கு வராமல், லாரிகள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது.சேலம் மாவட்டம் சங்ககிரியில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு, 2009ல், அப்போதைய துணை முதல்வர், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து சில நாட்கள் டவுன் பஸ்கள் மட்டும் வந்தன.இதன்பின், பஸ் ஸ்டாண்ட் எதிரே சாலையோரத்தில் பெரும்பாலான பஸ்கள் நின்று செல்கின்றன. அதன் பின் ஆட்சி மாறிய போதும், பஸ் ஸ்டாண்ட் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை.அங்கு கடை எடுத்த வியாபாரிகள், கடைகளை மூடி வைத்துள்ளனர். சிலர், கடையே வேண்டாம் என, நகராட்சியிடம் ஒப்படைத்துவிட்டனர். வருவாய் இழப்பு ஏற்பட்டும் கூட, பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்கள் வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் பஸ் ஸ்டாண்ட் திறந்து, 16 ஆண்டாகியும் தற்போது வரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல், லாரிகள் நிறுத்தும் இடமாகவே மாறிவிட்டது. லாரிகள் அதிகளவில் வந்து செல்வதால், சாலையும் சீரழிந்து வருகிறது.கடைகளில் பராமரிப்பும் செய்யப்படாததால், கட்டடங்களும், பஸ் ஸ்டாண்டின் கான்கிரீட் தளங்களும் சேதம் அடைந்து வருகின்றன.நகராட்சி தலைவியாக, தி.மு.க.,வை சேர்ந்த மணிமொழி இருந்தும் நடவடிக்கை இல்லை. சேலம் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சங்ககிரி புது பஸ் ஸ்டாண்டுக்குள், பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தினர்.இதுகுறித்து சங்ககிரி நகராட்சி பொறியாளர் நடராஜன் கூறுகையில், ''நகராட்சி கமிஷனர் விடுமுறையில் உள்ளார். அவர் வந்ததும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Mecca Shivan
ஜூன் 12, 2025 17:38

கிண்டி பல்நோக்கு மருத்துவமனை சாலையையும் இப்படித்தான் செய்துவைத்துள்ளார்கள் ..ஏற்கனவே சைதை மேற்கு பக்கம் குறுகலான சாலை .. கிண்டி தரப்பில் மேம்பால இறக்கத்தில் உள்ள இந்த மருத்துவமனைக்கு எதிரில் பாலத்திற்கு அடியில் ஆற்றின் மேல் ஒலிம்பியா கட்டிடம் ..இரண்டுமே நெரிசல் உள்ள இடம் ..இங்கிருந்து கிண்டி போலீஸ் ஸ்டேஷன் ஜங்க்ஷன் வரை தோண்டப்பட்ட சாலை, பாதையோர கடைகள், முழுநீளத்திற்கும் இருபுறமும் ஆம்னி பேருந்துகள், உடைசல் வண்டிகள் .உணவு கடைகள் ..மறுபுறத்திலிருந்து கிண்டி கத்திப்பாரா செல்லும் மாநகர பேருந்துகள், சில நூறு இருசக்கரவாகனங்கள் கார்கள் லாரிகள் ..கண் மூடி கிடைக்கும் அதிகாரிகள் கண்டும் காணாமல் இருக்கும் போலீஸ் .. மிக முக்கியம் மா சுவின் வீடு உள்ளபகுதி இது ..


seshadri
ஜூன் 12, 2025 11:58

பேருந்து நிலையம் கட்டிய வகையில் எங்களுக்கு வர வேண்டிய லஞ்சம் வந்துவிட்டது. அதோடு எங்கள் வேலை முடிந்து விட்டது. பதினாறு வருடங்களாக உபயோகிக்க வில்லை அனால் சொல்லும் காரணம் கமிஷனர் விடுமுறையில் இருக்கிறார்.


Kamaraj TA
ஜூன் 12, 2025 11:58

செய்தியைச் சரியாகப் படியுங்கள். அது ஆம்னி பஸ்நிலையம் இல்லை. சங்ககிரி பஸ் நிலையம் பெரும்பாலும் முன்பு பழைய பஸ்நிலையம் இருந்த போதும் பஸ் எதுவும் பஸ் நிலையத்திற்குள் வராது. பஸ் நிலையத்திற்கு வெளியில் ரோட்டில் பயணிகளை இறக்கி விட்டு அப்படியே சென்று விடும். புது பஸ் நிலையத்திற்கும் 16 ஆண்டுகளுக்குப் பிறகும் தற்போது அதே கதிதான்.


KRISHNAN R
ஜூன் 12, 2025 11:09

எந்த ஊரிலும் ஆம்னி பஸ் நிலையம் செயல்படாது. அப்படியா வந்தாலும்.... அரசு பேருந்து நிலையத்தில் அருகே வந்து கொண்டு இருக்கும்.. காரணம். ஊர் முழுவதும் அறிந்த ரகசியம்


sivakumar Thappali Krishnamoorthy
ஜூன் 12, 2025 10:55

இங்கே பாருங்க மக்களே , கமிஸ்ஸினுக்க காட்டியது , உபயோகிப்பது உங்கள் கடமை.


murugan
ஜூன் 12, 2025 10:17

முடிச்சூர் ஆம்னி பஸ் நிறுத்தம் திறந்து ஆறு மதம் ஆகிறது இன்னும் ஒரு பஸ் கூட வரவில்லை 53 கோடி வீண் செலவு கவனம் செலுத்தும் தமிழக அரசு


பாரத புதல்வன்
ஜூன் 12, 2025 10:00

சாராய குடோனாக பயன்படுத்தி வருமானத்தை பெருக்கலாம்..... சரக்கு வாகனம் தானே அங்கு நிற்கிறது.


Muthu-kovai
ஜூன் 12, 2025 09:45

இதே மாதிரி கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பேருந்து நிலையமும் செயலற்று லாரிகள் parking இடமாக மாறியுள்ளது... 16 ஆண்டுகள் முன் துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்....


இளிச்சவாயன்
ஜூன் 12, 2025 08:59

ஏன் இதை லாரி ஓட்டுனருகளுக்கு பயன்படும் வகையில் லாரி ஸ்டாண்டாக மாற்ற நடவடிக்கை எடுக்க கூடாது?


V RAMASWAMY
ஜூன் 12, 2025 08:31

உங்கள் பணம் தானே மக்களே, வாக்களித்தீர்களல்லவா, அனுபவியுங்கள்.


முக்கிய வீடியோ