செஞ்சி கோட்டை மீட்பு போராட்டம்: சீமான்
சென்னை : நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: தமிழ் மன்னர் கோனேரிக்கோன் கட்டிய செஞ்சி கோட்டையை, மராட்டிய மன்னர் சிவாஜியின், 12 கோட்டைகளில் ஒன்றாக, யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வரலாற்று திரிபை தடுத்து நிறுத்தி, தமிழ் மன்னர் கோட்டையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, வரும் 17ம் தேதி விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் போராட்டம் நடத்தப்படும். நெசவாளர்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில், நாளை நடக்க உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.