உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பனை மரம் ஏறி கள் இறக்கினார் சீமான்; தடையை மீறி போராட்டம்!

பனை மரம் ஏறி கள் இறக்கினார் சீமான்; தடையை மீறி போராட்டம்!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை அருகே பனைமரத்தில் ஏறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கினார்.விவசாயிகள் நலன் கருதியும், மரம் ஏறும் தொழிலாளர்கள் நலன் காக்கவும், கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. எனினும் இந்த கோரிக்கைக்கு முக்கிய அரசியல் கட்சிகள் மத்தியில் ஆதரவில்லை. ஆனால், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u7rnkhcl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இன்று (ஜூன் 15) தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை அருகே பனை மரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை சீமான் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று கட்சி நிர்வாகிகளுடன் சென்ற சீமான், பனைமரம் ஏறி, கள் இறக்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பனை மரத்தில் இறக்கி வந்த கள்ளை அனைவருக்கும் சீமான் வழங்கினார்.இந்த போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஏற்கனவே பனை மரத்தில் ஏறி சீமான் பயிற்சி மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மிளகு ரசமா சரக்கு?பனை மரம் ஏறி கள் இறக்கி, குடித்த பிறகு சீமான் பேசியதாவது: கள் விஷம் என்றால், டாஸ்மாக் கடையில் விற்பனையாகும் சரக்கு மிளகு ரசமா? கள் இறக்க தமிழகத்தில் மட்டும் ஏன் தடை? டாஸ்மாக் கடையை மூடி கள்ளுக் கடையைத் திறக்க வைப்போம். கள் நம் வாழ்வியலோடு சேர்ந்த உணவு. வனத்தில் மேச்சலுக்கு தடை விதிப்பதை எதிர்த்து, ஜூலை 10ம் தேதி ஆடு, மாடுகளின் மாநாடு நடத்தப்போகிறேன். அதில் தீர்வு கிடை க்கவில்லை என்றால் 3 ஆயிரம் ஆடு, மாடுகளை திரட்டிக்கொண்டு நானே மேய்க்கச் செல்வேன்.ஒன்றுக்கும் பயப்படாதீர்கள். இன்னும் 10 மாதம் தான் இருக்கிறது. விவசாயி என்று எனக்கு எண்ணம் மட்டும் அல்ல. சின்னமும் அதான். சின்னத்திலும் நான் தான் இருக்கிறேன். அஞ்சுவதும், அடி பணிவதும் தமிழர் பரம்பரைக்கு கிடையாது. தடை என்றால் அதை உடை. தைரியமாக இருங்கள், ஏதற்கு எல்லாம் தடை இருக்கிறதோ. அதனை எல்லாம் எதிர்த்து போரிட்டு நொறுங்குவோம். இவ்வாறு சீமான் பேசினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

சண்முகம்
ஜூன் 16, 2025 00:22

தென்னங்கள் என்ன பாவம் செய்தது. அதையும் இறக்கலாமே. தேவையானல் கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யலாம்.


Varadarajan Nagarajan
ஜூன் 15, 2025 20:37

என்னுடைய வயல் கரையில் 15 பனைமரங்கள் உள்ளன. இதுபோல முதலில் யாராவது ஏறி ஏணிப்படிபோல கயிற்றைக்கொண்டு குச்சியைவைத்து கட்டி கொடுத்தபின் பிறகு மரமேறியதுகிடையாது. முதல்முறையாக பார்க்கின்றேன். மேடையிலேயே வசனம் பேசிக்கொண்டில்லாமல் உண்மையில் மரத்தில் ஏறியது மிகவும் பாராட்டத்தக்கது.


Kulandai kannan
ஜூன் 15, 2025 20:17

உலகிலேயே மதுவை வைத்து அரசியல் செய்யும் கேவலம் தமிழகத்தில் மட்டும்தான். விருப்பமுள்ளவன் குடிக்கிறான் விட்டுத்தள்ளுங்கள்.


Ram pollachi
ஜூன் 15, 2025 19:14

ஏறும் போது ஒரு புத்தி, இறங்கும் போது வேறு புத்தி.... தேள் உட்பட விஷ பூச்சிகள் மரத்தில் இருக்கும் அந்த கடி உறுதி, உடல் சூடு மறுபுறம் மரம் ஏறிகளின் பாடு படு திண்டாட்டம்...


முதல் தமிழன்
ஜூன் 15, 2025 17:50

வெட்டி வேலை இது. உருப்படியா எதையாவது முயற்சிக்கலாம்.


Vasan
ஜூன் 15, 2025 15:58

Thiru.Seeman is the only person fighting lonely for the welfare of such minority sectors... Tamilnadu voters should vote for Thiru.Seeman, in the 2026 elections.


sridhar
ஜூன் 15, 2025 15:53

வந்தது வந்தக்கால் வராதது ஒண்ணேமுக்கால் .


GMM
ஜூன் 15, 2025 15:10

சீமான் பனையேற்றம், தனித்து போட்டி உபயதாரர் திமுக. ராம்தாஸ், அன்பு அறிக்கை போர், மதிமுக, விஜய் உருவாக்கம் ... பிஜேபியின் கூட்டணியில் இல்லை என்றால் உபயதாரர் திமுக. தோல்வியின் விளிம்பில் உள்ள திமுக வெற்றிக்கு, அண்ணா திமுக + பிஜேபி கூட்டணியை குறைக்க வேண்டும். பொது ஓட்டை பிரிக்க வேண்டும்.


Amar Akbar Antony
ஜூன் 15, 2025 14:36

கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. எனினும் இந்த கோரிக்கைக்கு முக்கிய அரசியல் கட்சிகள் மத்தியில் ஆதரவில்லை. பா ஜ க ஆதரவு அளித்துள்ளதே. அப்படியிருக்க "முக்கிய கட்சிகள்"? அப்போ பி ஜெ பி?


சேகர்
ஜூன் 15, 2025 14:17

எத்தனை அடி பனை மரம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை