உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நோயாளியை தொட்டிலில் துாக்கி வரும் அவலம்; உடுமலை மலைவாழ் மக்கள் வேதனை

நோயாளியை தொட்டிலில் துாக்கி வரும் அவலம்; உடுமலை மலைவாழ் மக்கள் வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உடுமலை: உடுமலை அருகே, ஈசல் திட்டு மலைவாழ் மக்கள் குடியிருப்பில், உடல் நலம் பாதித்தவரை தொட்டில் கட்டி, கரடு, முரடான மலைப்பாதையில் ஏழு.கிமீ., துாரம் துாக்கி வந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த அவல நிலைக்கு தீர்வு காண வேண்டும், என அம்மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம், ஈசல்திட்டு குடியிருப்பில், 120 வீடுகளில், 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, இங்கு வசிக்கும், திருமூர்த்தி மகன் ஸ்ரீ காந்த்க்கு, 20, திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வாந்தி, மயக்கம் ஏற்பட்டதோடு, எழ முடியாத நிலையில், கை, கால்கள் செயல் இழந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jy2zn2f1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உடனடி மருத்துவ சிகிச்சைக்கு வழியில்லாத நிலையில், நேற்று காலை, குடியிருப்பை சேர்ந்த இளைஞர்கள் தொட்டில் கட்டி, கரடு, முரடான மலைப்பாதையில், வன விலங்குகள் அபாயத்திற்கு மத்தியில், ஏழு கி.மீ., துாரம் சுமந்து வந்து, சமதளப்பரப்பிற்கு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ்சில் ஏற்றி, உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அதிகாரிகள் அலட்சியம் மலைவாழ் மக்கள் கூறியதாவது: உடுமலை, அமராவதி வனச்சரக பகுதியில், 15 மலைவாழ் மக்கள் குடியிருப்பில், 3,600க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு, 2006 வன உரிமை சட்டப்படி, ரோடு, குடிநீர், கல்வி, மருத்துவம், வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி தொடர்ந்து போராடி வருகிறோம்.உடல் நலம் பாதித்தவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைக்காமல், குழந்தைகள், பெரியவர்கள் என பலர் இறக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. குருமலை, ஈசல் திட்டு உள்ளிட்ட குடியிருப்புகளுக்கு, வனச்சூழல் பாதிக்காத வகையில், வனத்துறை, மலைவாழ் மக்கள் பயன்படுத்தும் வகையில் ரோடு அமைக்க அளவீடு பணி, நிதி ஒதுக்கீடு செய்தும், அரசு துறை அதிகாரிகளும், அரசும் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். இந்த அவல நிலைக்கு என்று தீர்வு கிடைக்கும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

திகழும் ஓவியன், Ajax Ontario
ஆக 19, 2025 21:19

வேணு gopal, artist எவரையும் காணோம். முட்டு குடுக்க...என்ன ஆச்சரியம்...!


JeevaKiran
ஆக 19, 2025 13:13

ஆம். உண்மைதான். வனங்களை வனவிலங்குகள் வாழ விடுங்கள். ஜனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தனும்.


Padmasridharan
ஆக 19, 2025 13:06

மேம்பாலங்கள் கட்டி, இடித்து தற்பொழுது மெட்ரோ வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது. அடுத்த தேர்தலுக்கு முன்னாள் முடிக்கவும் மாட்டார்கள். எதிர்காலத்தில் கடற்கரையில் தொங்கும் ropeway கட்டி பொருளாதாரத்தை முன்னேற்றி விட எண்ணம். ஆனால் இவர்களுக்கு தேவையான வழிப்பாதையை உண்டாக்க மாட்டார்கள். இவர்களுக்கு எதை செய்தாலும் ஓட்டும், பொருளாதாரம்தான் முக்கியம். மக்களின் நலன்கள் அல்ல. அப்படி நினைப்பவர்கள் மதுக்கடைகளை ஏன் திறந்து கோடிகளை பதுக்குகின்றனர் சாமி


djivagane
ஆக 19, 2025 11:50

இதுதான் டிஜிட்டல் இந்தியாவோ


Raja k
ஆக 19, 2025 09:34

இதற்காக வனத்துக்குள் தார்ரோடு போட்டு பஸ்சா விட முடியும்? சாலை அமைத்தால் சமவெளி மக்கள் அங்கு சுற்றுலா செல்வார்கள், வனம் பாழகிவிடும், எனவே மலைவாழ் மக்கள் தங்கள் தேவைக்கு சமவெளி வசதி தேவை எனில், தயவுசெய்து நீங்கள் மலைவிட்டு சமவெளியில் குடியேறி விடுங்கள், அதுதான் உங்களுக்கும் நல்லது, வனத்துக்கும் நல்லது, இவ்வளவு சிரமபட்டு உங்களை அங்கே இருக்க யாரும் கட்டாயபடுத்தவில்லை, ஒவ்வொருமுறையும், இங்கிருக்கும் ஊடகங்கள் - தொட்டிலில் தூக்கி வருகிறார்கள், தோளில் தூக்கி வருகிறார்கள், அடிபடை வசதியில்லை, அதுயில்லை இதுயில்லை என ஒப்பாரி வைக்கும் ஊடகங்கள், அதை படித்துவிட்டு அய்யோ பாவம் உடனடியாக அவர்களுக்கு நகரத்தில் இருக்கும் எல்லா வசதியையும் செய்து கொடுங்கள் என கருத்து சொல்ல வரும் கந்தசாமிகள் என்று நாடகங்கள், உங்களுக்கு மலையில் வசதி போவதில்லை என நீங்கள் நினைத்தால் மலையைவிட்டு உடனே இறங்கி விடுங்கள், அதைவிட்டு மலையில் பள்ளிகூடம் வேணும், மருத்துவமனை வேண்டும், தார்சாலை வேண்டும், மின்சாரம் வேண்டும், அம்பானி நெட்வொர்க் வேண்டும் என கேட்பதெல்லாம் ஒன்னநம்பர் கபட நாடகம், நீங்கள் மலையில் இருந்து வனத்துக்கு செய்யும் சேவை போதும்,


V RAMASWAMY
ஆக 19, 2025 09:30

பீற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகள் கண்களில் இந்த அவலங்களெல்லாம் தெரிவதில்லையா, கண்டுகொள்வதில்லையா?


Kulandai kannan
ஆக 19, 2025 09:21

அறிவியலும் பொருளாதாரமும் முன்னேறிய நிலையில், இனியும் மலைகளிலும், காடுகளிலும் மனிதர்கள் வசிக்க வேண்டுமா? அந்த மலைக்காடுகளில் பள்ளிகளும், மருத்துவமனைகளும் கட்டினால் அங்கே பணிபுரிவது நாடு வாழ் மக்களுக்கு மிகவும் சிரமம்.


Amar Akbar Antony
ஆக 19, 2025 08:48

முக்கிய செய்தி: "மலைவாழ் மக்களுடன் உங்கள் முதல்வர் மு. க. ஸ்டாலின் திட்டம்" என்று ஒரு அறிவிப்பு வரலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பி. கு. அறிவிப்பு மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டது.


S.V.Srinivasan
ஆக 19, 2025 08:06

உங்கள் குடும்ப நலன் அரசு பொறுப்பு. முக்யமந்திரி சுடாலின் பெருமித விளம்பரம்.


Svs Yaadum oore
ஆக 19, 2025 07:58

இதெல்லாம் வடக்கன் மாநிலங்களில் எங்காவது நடக்கும் ...இந்த வடக்கனுக்கு படிப்பறிவு பகுத்தறிவு என்று எதுவும் கிடையாது ....தமிழ் நாடு படித்து முன்னேறிய மாநிலம் ...நான்கே ஆண்டுகளில் விடியல் திராவிடனுங்க அமெரிக்கா ஐரோப்பா மாதிரி தமிழ் நாட்டை முன்னேற்றி விட்டார்கள் ...இது ராமசாமி மண் ...இங்கே இதெல்லாம் நடக்காது ....


முக்கிய வீடியோ