உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜூன் 20ல் கூடுகிறது தமிழக சட்டசபை

ஜூன் 20ல் கூடுகிறது தமிழக சட்டசபை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு காரணமாக, ஜூன் 24ம் தேதிக்கு பதில் முன்னதாக ஜூன் 20ல் தமிழக சட்டசபை துவங்கும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.தமிழக சட்டசபை வரும் 24ம் தேதி கூட உள்ளதாக அறிவித்து இருந்தது. இச்சூழ்நிலையில், விக்கிரவாண்டியில் ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. இதனால், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இந்நிலையில், திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் நிருபர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு காரணமாக 24ம் தேதி துவங்கவிருந்த சட்டசபை கூட்டத்தொடர் 20ம் தேதி காலை 10 மணிக்கு துவங்கும்.விளவங்கோடு இடைத் தேர்தலில்வெற்றி பெற்ற தாரகை, நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கிறார். 12 மணிக்கு அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் கூட்டம் நடத்துவது, எந்தெந்த தேதிகளில் கூட்டம் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anand
ஜூன் 11, 2024 13:18

தீயசக்தி புகழ் பாடுவதற்கு இந்த இடம் தான் உகந்தது. கூட்டத்தொடர் முடியும் வரை அக்கப்போராக இருக்கும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை